செய்திகள் :

அலறடித்த சத்தம்; கணவரைக் கொன்று குடலை வெளியில் எடுத்த பெண் - கண்டு அதிர்ந்து போன வீட்டின் உரிமையாளர்

post image

ஹரியானா மாநிலம், குருஷேத்ராவில் வசித்தவர் ராஜேஷ். இவர் தனியார் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வந்தார். இவர் மனைவி விமலா. இவர் பில்லி சூனியம் மற்றும் பேயோட்டுதல் போன்ற வேலைகளில் ஈடுபட்டு வந்தார். அவர்களுக்குத் திருமணமாகி பல ஆண்டுகள் ஆன பிறகும் குழந்தை இல்லை. உத்தரப்பிரதேசத்தை பூர்வீகமாக கொண்ட அவர்கள், வாடகை வீட்டில் மாடியில் தங்கி இருந்தனர். அவர்கள் தங்கி இருந்த வீட்டில் இருந்து அதிக அளவில் சத்தம் வந்ததால், வீட்டு உரிமையாளர் ரிங்கு மாடிக்குச் சென்று என்னவென்று பார்த்தார். அங்கு ராஜேஷ் வயிற்றில் பலத்தக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.

விமலா ராஜேஷ் உடலில் இருந்து வெளியே வந்த குடலை ஒரு பையில் போடுவதை வீட்டு உரிமையாளர் ரிங்கு பார்த்தார். வீட்டு உரிமையாளரைக் கண்டதும், விமலா பீதியடைந்து மொட்டை மாடியில் இருந்து கீழே குதித்துவிட்டார்.

இதில் அவர் படுகாயம் அடைந்தார். வீட்டு உரிமையாளர் இது குறித்து போலீஸாருக்குத் தகவல் கொடுத்தார். போலீஸார் விரைந்து வந்து ராஜேஷ் மற்றும் விமலாவை மருத்துவமனையில் சேர்த்தனர். விமலா சிகிச்சை பெற்று வருகிறார். ராஜேஷ் இறந்து போனார். பிரேத பரிசோதனையில் ராஜேஷின் வயிறு கூர்மையான ஆயுதங்களால் சுமார் 35 சென்டிமீட்டர் வரை வெட்டப்பட்டு இருந்தது தெரிய வந்தது.

இதனால் அவரது குடல் வயிற்றிலிருந்து வெளியே வந்ததாகக் கூறப்படுகிறது. பிரேத பரிசோதனையில் அவரது கல்லீரலின் கணிசமான பகுதி மற்றும் வலது சிறுநீரகத்தை காணவில்லை என்பதும் தெரியவந்தது. காணாமல் போன உறுப்புகள் குறித்தும், கொலைக்கான காரணம் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்தில் இருந்து 3 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஆரம்பக்கட்ட விசாரணையில் கணவன் மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது தெரிய வந்துள்ளது.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு: குற்றஞ்சாட்டும் தவெக; சவால்விடும் திமுக; காத்திருக்கும் நீதி

முந்தைய அ.தி.மு.க ஆட்சியில் 2018, மே 22-ம் தேதி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தில், 2 பெண்கள் உட்பட 13 பேர் போலீஸாரால் கொல்லப்பட்டனர். 100-க்கும் மேற்பட்டோர... மேலும் பார்க்க

கேரளம்: ஒரு வயது குழந்தையின் கழுத்தை அறுத்து கொன்ற தாய்; திருமண நாளில் இளம்பெண் செய்த கொடூரம்

கேரள மாநிலம் ​திருவனந்தபுரம் மாவட்டம் விளவூர்க்கல் பொற்றா பகுதியைச் சேர்ந்தவர் அபிஜித். மருத்துவப் பிரதிநிதியாகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கிறிஸ்டி (29). இவர்களுக்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பு... மேலும் பார்க்க

காட்பாடி: தேவாலய கட்டுமானப் பணி விபத்தில் 3 பேர் பலி; ஒப்பந்ததாரர் மீது வழக்குப் பதிவு!

வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த ஆந்திர மாநில எல்லையில் மந்தி கிருஷ்ணாபுரம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில், புதிதாக சி.எஸ்.ஐ தேவாலயம் கட்டும் பணிகள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில், நேற்று மாலை கான்க... மேலும் பார்க்க

ஈரோடு: 3.50 ஏக்கர் நிலத்தை ரிஜிஸ்டர் செய்ய ரூ.7 லட்சம் லஞ்சம்; சப்-ரிஜிஸ்டர், பத்திர எழுத்தர் கைது

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி ராயர் பாளையத்தைச் சேர்ந்தவர் விவசாயி கார்த்திக். இவருக்குச் சொந்தமான மூன்றரை ஏக்கர் நிலத்தைப் பதிவு செய்வதற்காக கவுந்தப்பாடி சப்-ரிஜிஸ்டர் சங்கரை அணுகியுள்ளார். 3.50 ஏக்கர்... மேலும் பார்க்க

சென்னை: 'ஆபாச செய்கை, போட்டோ மார்பிங்' - GST பெண் ஆபீஸருக்கு செக்ஸ் டார்ச்சர்; சக அதிகாரி கைது

சென்னை முகப்பேரில் ஜி.எஸ்.டி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் அதிகாரியாக ஆந்திராவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் பணியாற்றி வருகிறார். இவருடன் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த சவுரவ் என்பவரும் அத... மேலும் பார்க்க

பிரதீப் ராஜ் கொலை: 'கந்துவட்டி பிரச்னை; விநாயகர் சிலை' - சென்னை துணை நடிகர் கொலையின் பின்னணி என்ன?

சென்னை திருவொற்றியூர் மேற்கு மாடவீதியைச் சேர்ந்தவர் ராணி. இவரின் மகன் பிரதீப்ராஜ் (34). இவர் துணை நடிகராகவும் சென்னை துறைமுகத்தில் ஒப்பந்த அடிப்படையிலும் வேலைப்பார்த்து வந்தார். இந்தநிலையில் சில தினங்... மேலும் பார்க்க