செய்திகள் :

"அல்லிநகரத்தில் பிறந்து அழியாத படைப்புகளைக் கொடுத்த பாரதிராஜா" - ஸ்டாலின் நேரில் அஞ்சலி

post image

'இயக்குநர் இமயம்' பாரதிராஜாவிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார் திமுக தலைவர் ஸ்டாலின். அதன் பின், பாரதிராஜா நினைவு குறித்து ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை...

"தமிழ்த் திரையுலகின் பாதையை மாற்றியமைத்து, புதுப்போக்கினை உருவாக்கிய ‘இயக்குநர் இமயம்’ திரு. பாரதிராஜா அவர்களின் மறைவு பெரும் வேதனையைத் தருகிறது.

தமிழ்த்திரையுலகிற்குப் பேரிழப்பாகிவிட்ட அந்தப் பெருங்கலைஞனின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பாரதிராஜா -விற்கு ஸ்டாலின் அஞ்சலி
பாரதிராஜா -விற்கு ஸ்டாலின் அஞ்சலி

திரைமொழியில் தனிமொழி பேசித் தனிச் சகாப்தத்தையே உருவாக்கியவர் பாரதிராஜா.

ஸ்டூடியோக்களுக்குள் அடைபட்டிருந்த கேமராக்கள் பாரதிராஜா அவர்களால் கிராமங்களுக்குள் நுழைந்தன.

கிராமத்து மனிதர்களையும் அவர்களது வாழ்க்கையையும் திரைக்குக் கொண்டு வந்து, தமிழ்ச்சினிமாவை யதார்த்தத்திற்கு மிக அருகில் கொண்டு சென்றார்.

16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், அலைகள் ஓய்வதில்லை, டிக் டிக் டிக், முதல் மரியாதை, கடலோரக் கவிதைகள், வேதம் புதிது, கருத்தம்மா உள்ளிட்ட அவரது படைப்புகளைத் தமிழ்ச்சினிமாவின் வரலாற்றை எழுதும் எவர் ஒருவரும் தவிர்க்க முடியாது.

தனது படைப்பாற்றலின் வழியாகப் பிற மொழிகளிலும் படங்களை இயக்கி, அங்கும் தன் முத்திரையைப் பதித்த அவரை இந்தியத் திரை வரலாறு என்றைக்கும் உச்சத்தில் வைத்து நினைவுகூரும்!

தலைவர் கலைஞர் மீது மிகுந்த பாசம் கொண்டிருந்தவர். தமிழ் மீதும் தமிழினத்தின் மீதும் பற்றுகொண்டு, தமிழ்நாட்டின் உரிமைகள் தொடர்பான போராட்டங்களில் திரையுலகை ஈடுபடுத்தியதில் பாரதிராஜா அவர்களுக்கு மிகப்பெரிய பங்களிப்பு உண்டு.

‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா - ‘இசைஞானி’ இளையராஜா - ‘கவிப்பேரரசு’ வைரமுத்து ஆகியோரது கூட்டணியில் உருவான பாடல்கள் ஒவ்வொரு நிமிடமும் தமிழ்நாட்டின் ஏதோ ஒரு மூலையில் ஒலித்துக்கொண்டும், ஆயிரக்கணக்கான மக்களை மகிழ்வித்துக்கொண்டும்தான் இருக்கின்றன.

பாரதிராஜா -விற்கு ஸ்டாலின் அஞ்சலி
பாரதிராஜா -விற்கு ஸ்டாலின் அஞ்சலி

அவரது உடல்நலன் குறித்து விசாரிக்கவும், அவரது மகன் மனோஜ் பாரதிராஜாவின் மறைவுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறவும் பாரதிராஜா அவர்களைச் சந்தித்து உரையாடிய தருணங்களைத் தற்போது நினைக்கையில் நெஞ்சம் மேலும் பாரமடைகிறது.

பாரதிராஜா அவர்களின் பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திரையுலகைச் சேர்ந்த கலைஞர்களுக்கும், பாரதிராஜாவின் மாணவர்களுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அல்லிநகரத்தில் பிறந்து, அழியாத படைப்புகளைக் கொடுத்த ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா அவர்கள், சினிமா ரசிகர்களின் மனங்களில் - தமிழ் மக்களின் மனங்களில் என்றும் வாழ்வார்!

திரு. பாரதிராஜா அவர்களுக்கு நேரில் அஞ்சலி செலுத்தியபோது, அவரை அரசு மரியாதையுடன் வழியனுப்பி வைக்க வேண்டும் என்று அவர் உடனிருந்தோர் கோரினர். இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்களின் சாதனைகளைப் போற்றும் வகையிலும், அவரைச் சார்ந்தோரின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையிலும் ஆவன செய்ய வேண்டுமெனத் தமிழ்நாடு அரசினைக் கேட்டுக்கொள்கிறேன்".

Jayaram: "அப்போ நான் அவர்கிட்ட போய் மன்னிப்புக் கேட்டேன்'' - தன் காதல் கதையைப் பகிர்ந்த ஜெயராம்

நடிகர் ஜெயராம் நடிப்பில் கடந்த வாரம் 'பரிமளா & கோ' திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. அப்படத்திற்காக நம் சினிமா விகடன் சேனல் நடத்திய பிரத்யேக 'விகடன் பிரஸ் மீட்' நிகழ்வில் ஜெயராம் கலந்துகொண்டு ... மேலும் பார்க்க

Nooru Saami: "பசியோட இருக்காத, பண உதவி பண்றேன்னு..." - ஏ.ஆர். முருகதாஸ்

இயக்குநர் சசி இயக்கியிருக்கும் 'நூறு சாமி' திரைப்படம் ஜூன் 19-ம் தேதி திரைக்கு வருகிறது. விஜய் ஆண்டனி, ஸ்வாசிகா, அஜய் திஷான் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்திருக்கின்றனர். இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நி... மேலும் பார்க்க

Nooru Saami: "'உன்னை பார்க்கும்போது ரவுடி மாதிரி தெரிஞ்ச'னு சசி சார் சொன்னார்!" - பா. ரஞ்சித்

இயக்குநர் சசி இயக்கியிருக்கும் 'நூறு சாமி' திரைப்படம் ஜூன் 19-ம் தேதி திரைக்கு வருகிறது. விஜய் ஆண்டனி, ஸ்வாசிகா, அஜய் திஷான் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்திருக்கின்றனர். இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நி... மேலும் பார்க்க

Double Occupancy Review: 6-6 ஆண்; 6-6 பெண் சுவாரஸ்யமான ஒன்லைன் - படமாக பாஸாகிறதா?

பல வருடங்களாகக் குழந்தையில்லாமல் தவிக்கிறது ஒரு தம்பதி (போஸ் வெங்கட் - வினோதினி). கடவுளை நம்பாத போஸ் வெங்கட், கைகூப்பி கடவுளை வணங்கி வேண்டுகிறார். கடவுளின் அருளால் ஆண் குழந்தை பிறக்கிறது. ஆனால், பிறந்... மேலும் பார்க்க

Habeebi Review: தமிழ் இஸ்லாமிய வாழ்வியல் பின்னணியில் ஓர் அழகான காதல் கதை; ஆனால், படமாகக் கவர்கிறதா?

தென் தமிழகத்தில் தலைமுறை தலைமுறையாக நெசவுத் தொழிலை யூசுஃப் கானின் (கஸ்தூரி ராஜா) குடும்பம் கவனித்து வருகிறார்கள். கைத்தறித் தொழில் நலிவடைந்து வருவதால், யூசுஃப் கானின் தம்பி வளைகுடா நாட்டிற்குப் பணிக்க... மேலும் பார்க்க

Bharathiraja: "துயரத்தில் பங்கு கொண்ட அனைவருக்கும் நன்றி" - பாரதிராஜா மனைவி சந்திர லீலா

இயக்குநர் இமயம் பாரதிராஜா நேற்று முன்தினம் (ஜீன்.10) உடல்நலக் குறைவால் காலமானார். அவரது உடல் நேற்று சொந்த ஊரான தேனி மாவட்டத்தில் உள்ள காட் ரோட்டில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிலைய... மேலும் பார்க்க