செய்திகள் :

அவதூறு ரீல்ஸ்; செருப்புடன் மன்னிப்பு கேட்கவைத்த ராஜ் தாக்கரே கட்சியினர் - மகாராஷ்டிராவில் அதிர்ச்சி

post image

மகாராஷ்டிராவில் நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே மற்றும் அக்கட்சியின் தலைவர்களில் ஒருவரான சுபம் குறித்து புனேயை சேர்ந்த சோசியல் மீடியா பிரபலம் மகேஷ் மோடே சோசியல் மீடியாவில் அவதூறாக செய்தி வெளியிட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அக்கட்சியினர் கடும் கோபத்தில் மகேஷ் மோடேயை தேட ஆரம்பித்தனர்.

அவர் கடந்த சில நாட்களாக கேரளா சென்று இருந்தார். அவர் புனே திரும்பியது குறித்து கேள்விப்பட்டு மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா தொண்டர்கள் அவரது வீட்டிற்கு சென்று அவரை தங்களது அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர். அங்கு மகேஷ் மோட்டேவை நவநிர்மான் சேனா கட்சியினர் பிடித்து, ராஜ் தாக்கரேவின் புகைப்படத்திற்கு முன் அவரைச் சாஷ்டாங்கமாக வணங்க வைத்தனர்.

சுபம், ராஜ் தாக்கரே

அதுமட்டுமின்றி, அவரது முகத்தில் கருப்பு மையைப் பூசியும், தலையில் செருப்பை வைத்துக்கொண்டு உட்கார்ந்து எழும் பயிற்சிகளைச் (sit-ups) செய்ய வைத்தும், பின்னர் மன்னிப்பு கேட்க வைத்தனர். தான் வெளியிட்ட ரீல்ஸ்க்காக மகேஷ் அழுதபடி ராஜ் தாக்கரே படத்தின் முன்பு விழுந்து மன்னிப்புக்கேட்டார். மேலும் ராஜ் தாக்கரேயிடமும், கட்சி நிர்வாகிகளிடமும் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும், மேற்கொண்டு துன்புறுத்த வேண்டாம் என்று கைகூப்பி மகேஷ் கேட்டுக்கொண்டார்.

இது தொடர்பாக வீடியோ ஒன்றையும் மகேஷ் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், "நான் அறியாமையால் ராஜ் சாஹேப் குறித்துத் தவறான ஒன்றைக் கூறிவிட்டேன். அதேபோல் அக்கட்சி தலைவர்களில் ஒருவரான சுபம் தாடா மற்றும் பிற எம்.என்.எஸ் நிர்வாகிகளைப் பற்றியும் தவறான முறையில் பேசிவிட்டேன். இன்று எனது தவறுக்காக நான் மிகவும் வருந்துகிறேன். அந்த 'ரீல்' வீடியோவின் காரணமாகவே நான் இந்த இக்கட்டான சூழலில் சிக்கிக்கொண்டேன். நவநிர்மான் கட்சியின் அனைவரிடமும் நான் மனதார மன்னிப்பு கோருகிறேன்," என்று முகத்தில் அச்சம் தெரிய, கண்ணீர் மல்க மகேஷ் அந்த மன்னிப்பு வீடியோவில் கூறி இருந்தார்.

புனே ஹடாப்சர் சட்டமன்றத் தொகுதி நவநிர்மான் சேனா துணை தலைவரான சுபம் ஜக்டேல் இது குறித்து கூறுகையில்,'' சுமார் 15 நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட வீடியோவில் எம்என்எஸ் தலைவர் ராஜ் தாக்கரே குறித்து மகேஷ் மோடே மிகவும் மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்தினார். இதையடுத்து அவருக்கு அலுவலகத்தில், 'மஹாபிரசாத்' வழங்கப்பட்டது. ராஜ் தாக்கரேவை அவமதிக்கும் எவரும் இதே நிலையை சந்திக்க நேரிடும்'' என்று எச்சரித்தார்.

ஹாலிவுட் வரை பிரபலம்... 108 ஆண்டு பழமையான ஒலிம்பியா காபி ஹவுஸ் லைசென்ஸ் சஸ்பெண்ட்! - ரெய்டில் ஷாக்

மகாராஷ்டிராவில் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை கமிஷனராக ஐ.ஏ.எஸ். அதிகாரி துகாராம் முண்டே பதவியேற்ற பிறகு சுகாதாரமற்ற முறையில் இயங்கும் உணவகங்களுக்கு எதிராக தொடர்ச்சியாக நடவடிக்கை எடுத்து வருகிறார்... மேலும் பார்க்க

'ஷாருக், அஜய் தேவ்கன்; உங்களுக்கு நட்சத்திரங்களாக இருக்கலாம்; ஆனால் சட்டத்தை மீறியவர்கள்' - துகாராம்

மகாராஷ்டிராவில் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை கமிஷனராக இருப்பவர் துகாராம் முண்டே. இவர் மாநிலம் முழுவதும் உணவகங்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு எதிராக எடுத்து வரும் நடவடிக்கைகள் காரணமாக பல உணவகங்... மேலும் பார்க்க

'அஸ்ஸலாமு அலைக்கும்' என்று சொன்ன பெண் ஐ.பி.எஸ். அதிகாரி - இடமாற்றம் செய்த மேற்கு வங்க அரசு!

முஸ்லிம்கள் தங்களது முஸ்லிம் நண்பர்களை பார்க்கும் போது அஸ்ஸலாமு அலைக்கும் என்று கூறுவது வழக்கம். அப்படி அழைத்து பெண் போலீஸ் அதிகாரி சிக்கலில் மாட்டிக்கொண்டுள்ளார். மேற்கு வங்கத்தில் கூடுதல் போலீஸ் கண்... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: கையில் குழந்தை; தோளின் மீது விழுந்த பாம்பு; அருவியில் அலறிய மக்கள்! | video

அருவியில் குளிக்கவும், இயற்கையை ரசிக்கவும் சென்ற இடத்தில் திடீரென பாம்பு ஒன்று மேலிருந்து விழுந்தால் எப்படி இருக்கும்? அதுவும் கையில் குழந்தையை வைத்திருக்கும் ஒருவரின் தோளிலேயே விழுந்தால்?மகாராஷ்டிராவ... மேலும் பார்க்க

Donald Trump நடாலி ஹார்ப்பை முத்தமிட்டாரா? - வைரலான புகைப்படத்தின் உண்மை பின்னணி!

“ட்ரம்ப், நடாலி ஹார்ப்பை முத்தமிடுகிறார்...” – இந்தப் புகைப்படம்தான் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அமெரிக்க அதிபர் Donald Trump, அவருடைய Executive Assistant நடாலி ஹார்ப்பை கோல்ஃப் மைதானத... மேலும் பார்க்க

விநாயகருக்கு ஆரத்தி தட்டை மாற்றி சுற்றிய சல்மான்கான்; சரி செய்த சகோதரி அர்பிதா - பெண் தோழி பங்கேற்பு

மும்பையில் விநாயகர் சதுர்த்தி விழா வெகுவிமரிசையாக நடந்து வருகிறது. இவ்விழாவில் பாலிவுட் பிரபலங்கள் தங்களது வீடுகளில் விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வருகின்றனர். நடிகர் சல்மான் கான் சகோதரி அ... மேலும் பார்க்க