செய்திகள் :

`அவரைச் சந்திக்க விரும்பியதில்லை' - தந்தையின் பெயரை பயன்படுத்தாதது குறித்து நடிகை தபு விளக்கம்

post image

தமிழில் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், காதல் தேசம் உட்பட சில படங்களில் நடித்திருக்கும், பிரபல பாலிவுட் நடிகை தபுவிற்கு 54 வயதாகிறது. அவர் திருமணம் செய்துகொள்ளவில்லை.

தபு தொடர்ந்து பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். தபு தனது தந்தை பெயரை தனது பெயருக்குப் பின்னால் பயன்படுத்தாது ஏன் என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவரிடம் நிருபர்கள் கேட்டதற்கு, ''நான் எனது தந்தையைச் சந்தித்ததும் இல்லை. அவரது பெயரை பயன்படுத்துவதும் கிடையாது.

தபு

எனக்கு 3 வயதாக இருந்தபோது என்னுடைய பெற்றோர் விவாகரத்து செய்துவிட்டனர். அதன் பிறகு எனது தந்தையுடன் எனக்கு எந்த வித தொடர்பும் கிடையாது.

எனது பெற்றோர் விவாகரத்து செய்து கொண்ட பிறகு நான் என்னுடைய பாட்டி (அம்மாவின் தாயார்) வீட்டில் வளர்ந்து வந்தேன். எனது அம்மா ஓர் ஆசிரியை. இதனால் அதிகமான நேரத்தை எனது பாட்டியுடன் கழித்தேன். எனது பாட்டி புத்தகம் படிப்பது, பிரார்த்தனை செய்வது என்று நேரத்தை செலவிட்டார். நானும் அது போன்ற ஒரு சூழலில் வளர்ந்தேன். எனவே நான் எனது தந்தையை சந்திக்க விரும்பவில்லை. எனது தந்தையின் பெயரை பயன்படுத்தவேண்டிய அவசியம் இல்லை என்று நினைத்தேன். எனவேதான் எனது பெயருக்குப் பின்னால் அவரது பெயரை சேர்க்கவில்லை.

எனது தந்தையின் பெயர் ஹஸ்மி. எனது முழு பெயர் தபசும் பாத்திமா ஆகும். பள்ளியில் எனது சர்நேம் பாத்திமா ஆகும். எனது தந்தையை பற்றிய எந்த நினைவும் என்னிடம் இல்லை. எனது சகோதரி ஒரு முறை அவரை சந்தித்து இருக்கிறார். ஆனால் நான் அவரை சந்திக்க விரும்பவில்லை. நான் இப்போது மகிழ்ச்சியாகவே இருக்கிறேன்'' என்றார்.

திருமணம் செய்யாமல் வாழ்வது குறித்து கேட்டதற்கு, ''நான் அதை பற்றி கவலைப்படவில்லை. நான் தனியாக இருக்கிறேனா அல்லது திருமணம் செய்திருக்கிறேனா என்பது பிரச்னை இல்லை'' என்று தெரிவித்தார்.

``'கிங்' பட்டம் எனக்கு அதிகாரம் அல்ல; பொறுப்பு" - ஷாருக்கான்

பாலிவுட்டில் நடிகர் ஷாருக்கான் `கிங்' கான் என்று அனைவராலும் அழைக்கப்படுகிறார். தற்போது ஷாருக்கான் தனக்கு வழங்கப்பட்டுள்ள கிங் பெயரில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார். இப்படத்தில் ஷாருக்கான் மகள் சுஹா... மேலும் பார்க்க

நடிகர் சல்மான் கான் தந்தை சலீம் கானுக்கு மூளையில் ரத்த கசிவு: மும்பை மருத்துவமனையில் அறுவை சிகிச்சை!

நடிகர் சல்மான் கான் தந்தையும், பாலிவுட் திரைக்கதை எழுத்தாளருமான சலீம் கான் நேற்று காலை திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு, மும்பை லீலாவதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது உடல்நிலையை சோதித்த டாக்ட... மேலும் பார்க்க

Taapsee Pannu: `மோடி தான் பிடித்த அரசியல் தலைவர்; ஏனென்றால்...' - வைரலாகும் டாப்ஸி பண்ணுவின் வீடியோ

பாலிவுட் நடிகை டாப்ஸி நடிப்பில், அனுபவ் சின்கா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'அஸி' (Assi). பிப்ரவரி 20-ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், அதற்கான விளம்பரப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். சமீபத்தில் தொல... மேலும் பார்க்க

நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு ரூ. 30 கோடியில் ஹெலிகாப்டர்; சுகேஷ் வழங்கிய காதலர் தினப் பரிசு!

டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் மனைவியிடம் சிறையில் இருக்கும் அவரது தொழிலதிபரான அவரது கணவரை வெளியில் கொண்டு வர உதவுவதாகக் கூறி ரூ.200 கோடி வாங்கி மோசடி செய்த வழக்கு, இரட்டை இலை சின்னத்தை தேர்தல் கமிஷனிட... மேலும் பார்க்க

Akshay Kumar: "நான் அவரை அறைந்த பிறகு என் கரியரே முடிந்துவிட்டது என நினைத்தேன்" - அக்‌ஷய் குமார்

பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் கடைசியாக 'ஜாலி எல்.எல்.பி 3' படத்தில் நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து அவருடைய அடுத்த திரைப்படமான 'பூத் பங்களா' திரைப்படமும் ரிலீஸுக்குத் தயாராகி வருகிறது. Akshay Kumarதற... மேலும் பார்க்க

45 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் வைரல் ஆகும் ரம்பா ஹோ கேர்ள்; யார் இந்த மிஸ் இந்தியா போட்டியாளர்?

70 வயது மதிக்கத்தக்க ஒரு பெண், 'அர்மான் திரைப்படத்தின் பாடலான 'ரம்பா ஹோ' பாடலுக்கு புடவையில், மிக நேர்த்தியான உடல் மொழியில் நடனமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்ட்ஆகி வருகிறது. யார் இவர் என்று சமூ... மேலும் பார்க்க