செய்திகள் :

`அவர்களுடன் எங்களுக்கு பெரிய இடைவெளி இருக்கிறது' - அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை குறித்து ஈரான்

post image

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நடந்த போர் ஒன்றரை மாதத்திற்கு பிறகு தற்காலிகமாக முடிவுக்கு வந்து இருக்கிறது. ஆனால் இந்த தற்காலிக போர் நிறுத்தமும் விரைவில் முடிய இருக்கிறது. ஈரானுடன் மீண்டும் எப்போது அமெரிக்கா பேச்சுவார்த்தை நடந்தும் என்று தெரியாமல் இருக்கிறது. இப்பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் ஏற்பாடு செய்து வருகிறது. பேச்சுவார்த்தையில் பிரதான பிரச்னையாக இருக்கும் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மீண்டும் மூடி இருக்கிறது. மற்றொருபுறம் ஈரான் துறைமுகத்திற்குள் கப்பல்கள் செல்ல முடியாமல் அமெரிக்கா தடங்கல் செய்துள்ளது.

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் உள்ள முக்கிய முட்டுக்கட்டை குறித்து ஈரான் தரப்பில் பேச்சுவார்த்தையில் பங்கேற்று வரும் முகமது பாகர் காலிபாஃப் கூறுகையில், ''நாங்கள் உறுதியாக நிற்கும் சில விவகாரங்கள் உள்ளன.

ஹார்மூஸ் ஜலசந்தி

அவர்களுக்கும் சிலவற்றில் உறுதியாக இருக்கின்றனர். ஆனால், இந்த விவகாரங்கள் ஒன்று அல்லது இரண்டு மட்டுமே இருக்கலாம். நாங்கள் முன்னேற்றம் கண்டுள்ளோம். இருப்பினும், எங்களுக்கு இடையே இன்னும் ஒரு பெரும் இடைவெளி நிலவுகிறது," என்றும் அவர் தெரிவித்தார்.

ஹார்மூஸ் ஜலசந்தி பிரச்னையில் இருநாடுகளும் முட்டிக்கொண்டாலும், ஈரானுடனான பேச்சுவார்த்தை நல்ல முறையில் நடந்து கொண்டிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அணுசக்தி பிரச்னை மற்றும் ஹார்மூஸ் ஜலசந்திக்கு பாதுகாப்பு கொடுப்பது ஆகிய இரண்டு பிரச்னைகள் தான் இரு நாடுகளிடையே பிரதானமாக இருப்பதாக கூறப்படுகிறது. இவ்விவகாரத்தில் ஈரான் விட்டுக்கொடுக்காமல் இருந்து வருகிறது.

ஹார்மூஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்திற்கான விதிகள் மற்றும் பாதுகாப்பை நாங்கள்தான் கவனிப்போம் என்று ஈரான் திட்டவட்டமாக கூறி வருகிறது. இதனால் இரு நாடுகளிடையே முட்டுக்கட்டை நீடித்து வருகிறது. நேற்று ஹார்மூஸ் ஜலசந்தி வழியாக வந்த இரண்டு இந்திய கப்பல்களை ஈரான் படையினர் படகுகளில் வந்து சுட்டனர். இதையடுத்து அக்கப்பல்கள் ஹார்மூஸ் ஜலசந்தியை கடக்காமல் திரும்ப சென்றுவிட்டன. இப்பிரச்னை குறித்து இந்தியாவில் உள்ள ஈரான் தூதரை அழைத்து மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறது.

சிறிய தவறு செய்தாலும் தாக்குவோம்

போர்நிறுத்தம் நீட்டிக்கப்படுமா மற்றும் பேச்சுவார்த்தை தொடங்குமா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் போருக்கும் ஈரான் தயாராகி வருகிறது. அமெரிக்காவும் கூடுதல் படைகளை மத்திய கிழக்கில் கொண்டு வந்து குவித்து வருகிறது. இதையடுத்து இது குறித்து ஈரான் சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் கூறுகையில், ``ஈரானின் எதிரிகள் பதற்றத்தை மேலும் தீவிரப்படுத்தினால், அதற்குப் பதிலடி கொடுக்க தெஹ்ரான் தயாராக இருப்பதாக" எச்சரித்துள்ளார். மேலும், அவர் கூறுகையில், ''அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான தற்போதைய மோதல் சூழலில், ஈரான் தனது இராணுவத் தயார்நிலையை வலுப்படுத்திக்கொண்டுள்ளது. நாங்கள் முழுமையாகத் தயாராக உள்ளோம்.

அவர்கள் மிகச்சிறிய தவறை இழைத்தாலும், நாங்கள் பலத்தைப் பயன்படுத்திப் பதிலடி கொடுப்போம். மூன்றாவதாக எங்கள் மீது திணிக்கப்பட்ட போரின்போது, ​​தாக்குதல் திறன்கள் மற்றும் வடிவமைப்பு ஆகியவற்றில் கடந்த காலத்தை விட நாம் நிச்சயமாகப் பல படிகள் உயர்ந்து நிற்கிறோம்; போர்க் களத்திலேயே நாம் இதனை நேரில் கண்டோம். ராணுவ ரீதியாக நாம் அமெரிக்காவை விட வலிமையானவர்கள் அல்ல. அவர்களிடம் அதிக பணமும், தளவாடங்களும், வளங்களும் உள்ளன என்பது தெளிவாகிறது.

மேலும், உலகம் முழுவதும் அவர்கள் பல ஆக்கிரமிப்புச் செயல்களை முன்னெடுத்துள்ளதால், நம்மை விட அவர்களுக்கு அனுபவமும் அதிகம். நாங்கள் ஒரு சமச்சீரற்ற போரில், எங்களின் சொந்த வடிவமைப்பு மற்றும் தயார் நிலையுடன் எதிரியைப் பின்னுக்குத் தள்ளும் வகையில் போரிட்டோம். எதிரியிடம் பணமும் வளங்களும் இருந்தன, ஆனால் அவர்கள் திட்டமிடுவதில் சரியாகச் செயல்படவில்லை''என்று தெரிவித்தார்.

தீபிகா படுகோனேவுக்கு இரண்டாவது குழந்தை; மகள் மூலம் கர்ப்பத்தை அறிவித்த தம்பதி

பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே மற்றும் நடிகர் ரன்வீர் சிங் தம்பதிக்கு கடந்த 2024ம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. இக்குழந்தை பிறந்த பிறகு தீபிகா படுகோனே படங்களில் நடிக்க பல்வேறு நிபந்தனைகளை விதித்தார். அ... மேலும் பார்க்க

மேற்கு Vs மத்திய குழு; சிம்பன்சிகளிடையே வெடித்த `சிவில் வார்!' - உகாண்டாவில் அதிர்ச்சி!

சுமார் 25 ஆண்டுகளாக உகாண்டாவின் ங்கோகோ (Ngogo) காடுகளில் உலகின் மிகப்பெரிய சிம்பன்சி சமூகம் மிகவும் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தது.சுமார் 200 சிம்பன்சிகளைக் கொண்ட இந்த மாபெரும் கூட்டம், ஒரு முன்மாதிரி சமூ... மேலும் பார்க்க

விராட் கோலி போட்ட லைக்; இணையத்தில் வைரலாகும் LizLaz - யார் இவர்?

இன்ஸ்டாகிராமில் தென்னாப்பிரிக்கா இன்ப்ளூயன்சர் ஒருவரின் புகைப்படத்திற்கு விராட் கோலி லைக் போட்டிருப்பது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஐபிஎல் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நடப்ப... மேலும் பார்க்க

ஹரியானா: `குடிபோதையில் ரகளை' காரை நடுரோட்டில் நிறுத்தி வாக்குவாதம் செய்த பெண் செவிலியர்

ஹரியானா மாநிலம் ஹிசார் என்ற இடத்தில் மக்கள் நடமாட்டம் மற்றும் வாகன நெருக்கடி மிகுந்த ரோட்டில் பெண் ஒருவர் தனது காரை கொண்டு வந்து நிறுத்தினார். காரை ஓட்டி வந்த அப்பெண் குடிபோதையில் இருந்திருக்கிறார். அ... மேலும் பார்க்க

`பேய் நடமாட்டம்' - மாநகராட்சி அலுவலகத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் - சிவசேனா அமைச்சர்

மகாராஷ்டிரா மாநிலம் சிவசேனா சார்பாக அமைச்சராக இருப்பவர் சஞ்சய் சிர்சாத். இவர் சத்ரபதி சாம்பாஜிநகர் மாவட்ட பொறுப்பு அமைச்சராகவும் இருக்கிறார். சாம்பாஜி நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசு... மேலும் பார்க்க

`மராத்தி தெரியாவிட்டால் ஆட்டோ, டாக்ஸி டிரைவர்கள் லைசென்ஸ் ரத்து'- புது கெடுவால் டிரைவர்கள் அதிர்ச்சி

மகாராஷ்டிராவில் மும்பை, நாசிக், புனே போன்ற நகரங்களில் ஆயிரக்கணக்கான ஆட்டோ மற்றும் டாக்ஸிகள் இயக்கப்படுகின்றன. இந்த டாக்ஸி மற்றும் ஆட்டோக்கள் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்தாலும், பொதுமக்கள் பயணம் செய... மேலும் பார்க்க