செய்திகள் :

"ஆட்டோ, டாக்சி ஓட்டுனர்கள் மராத்தி கற்க ஒரு வருடம் அவகாசம்" - மகாராஷ்டிரா அரசு அறிவிப்பு

post image

மகாராஷ்டிராவில் ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுனர்கள் கட்டாயம் மராத்தி தெரிந்திருக்கவேண்டும் என்றும், மராத்தி தெரியாத ஓட்டுனர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநில போக்குவரத்து துறை அறிவித்தது.

அதோடு போக்குவரத்து துறை அதிகாரிகள் சாலைகளில் இறங்கி ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுனர்களின் மராத்தி புலமையைத் தெரிந்து கொள்ள சோதனை நடத்தினர். மராத்தி சரியாகத் தெரியாத 4 ஆயிரம் டிரைவர்களுக்கு இதுவரை நோட்டீஸ் வழங்கப்பட்டது. இச்சோதனையால் வடமாநில ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுனர்கள் மும்பையைக் காலி செய்ய ஆரம்பித்தனர். இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளானார்கள்.

ஆட்டோ ஓட்டுனர்கள் இரண்டு நாட்கள் மும்பையில் போராட்டமும் நடத்தினர். இதையடுத்து இவ்விவகாரத்தில் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தலையிட்டு ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுனர்ள் அடிப்படை மராத்தி கற்றுக்கொள்ள ஒரு ஆண்டு அவகாசம் வழங்கி உத்தரவிட்டார்.

பாஜக தலைமையிலான ஆட்டோ மற்றும் டாக்சி போக்குவரத்து தொழிற்சங்கத் தலைவர் ஹாஜி அர்பத் ஷேக் தலைமையிலான ஆட்டோ மற்றும் டாக்சி தொழிற்சங்கப் பிரதிநிதிகள் முதல்வர் தேவேந்திர பட்னாவிசைச் சந்தித்து பேசினர்.

அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பட்னாவிஸ், "வணிக ரீதியான பயணிகள் வாகன ஓட்டுநர்கள் பயணிகளுடன் அடிப்படை மராத்தியில் உரையாடுவதை உறுதி செய்யும் அரசின் நோக்கத்திற்கு ஓட்டுநர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஓட்டுநர்கள் மராத்தியைக் கற்றுக்கொள்ளத் தயாராக உள்ளனர். இருப்பினும், அவர்கள் வெவ்வேறு வயதுப் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் என்பதோடு, முறையான கல்வியைப் பல ஆண்டுகளுக்கு முன்பே முடித்தவர்கள். அவர்கள் மராத்தியைக் கற்றுக்கொள்ள கூடுதல் அவகாசம் கோரி இருந்தனர்.

எனவே அவர்களுக்கு ஓராண்டு கால அவகாசம் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. மராத்தி மொழி தெரியாத ஓட்டுநர்கள் மீது இக்காலகட்டத்தில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாது'' என்று பட்னாவிஸ் தெளிவுபடுத்தினார்.

பயணிகளுடனான அன்றாட உரையாடல்களுக்குத் தேவைப்படும் பொதுவான சொற்றொடர்களை ஓட்டுநர்கள் கற்றுக்கொள்ள உதவும் வகையில், மராத்தி மொழி வகுப்புகளை நடத்தவும், அதற்கான பாடக்குறிப்புகளை வழங்கவும் அரசு தற்போது முடிவு செய்துள்ளது.

பொதுப் போக்குவரத்து ஓட்டுநர்களுக்கு அடிப்படை மராத்தி மொழித் திறன் அவசியம் என்ற அரசின் நிலைப்பாட்டை உறுதிப்படுத்தும் அதே வேளையில், ஓட்டுநர் சங்கங்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே அதிகரித்து வரும் பதற்றத்தைத் தணிக்க முதலமைச்சரின் தலையீடு உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏக்நாத் ஷிண்டே
ஏக்நாத் ஷிண்டே

உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா மற்றும் ராஜ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கட்சிகள் மண்ணின் மைந்தர்கள் கோரிக்கையைக் கையில் எடுத்து மும்பை மாநகராட்சி தேர்தலைச் சந்தித்தது.

அதனை எதிர்கொள்ள துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவைச் சேர்ந்த போக்குவரத்து துறை அமைச்சர் பிரதாப் சர்நாயக் ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுனர்கள் கட்டாயம் மராத்தி தெரிந்திருக்க வேண்டும் என்ற உத்தரவைக் கொண்டு வந்தார்.

தாராபுரம்: புழுதிப்புயலுக்குள் சீறிப்பாய்ந்த கார்கள் - களைகட்டிய கார் பந்தயம் | Photo Album

திருப்பூர் புழுதியை கிளப்பிய கார் பந்தயம்திருப்பூர் புழுதியை கிளப்பிய கார் பந்தயம்திருப்பூர் கார் பந்தயம்திருப்பூர் கார் பந்தயம்திருப்பூர் புழுதியை கிளப்பிய கார் பந்தயம்திருப்பூர் புழுதியை கிளப்பிய கா... மேலும் பார்க்க

வீட்டின் அகலம் வெறும் 72 செ.மீ… ஆனால் வீட்டுக்குள் அத்தனை வசதிகளா! ஒரு Home Tour போலாமா?

இரண்டு கட்டிடங்களுக்கு இடையில் இருக்கும் வெறும் 72 செ.மீ இடத்தில் ஒரு வீட்டையே கட்டியிருக்கிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா? போலந்தின் வார்சா நகரில் அமைந்துள்ள கெரெட் ஹவுஸ் (Keret House), உலகின் மிகக் ... மேலும் பார்க்க

அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் வன்முறை; டேப்பில் கட்டப்பட்ட பயணி; நடுவானில் என்ன நடந்தது?

டல்லாஸிலிருந்து நியூயார்க் நோக்கிப் புறப்பட்ட அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் 618, தனது பயணத்தின் இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருந்தபோது, விமானத்துக்குள் ஏற்பட்ட திடீர் குழப்பம் காரணமாக அதன் பயணத்தை ... மேலும் பார்க்க

"நான் சிறையில் இருந்தபோதுதான் எனக்கு புற்றுநோய் வந்தது" - உத்தவ் கட்சி எம்.பி பகீர் குற்றச்சாட்டு

சிவசேனா(உத்தவ்) கட்சியில் சர்ச்சைக்குறிய எம்.பியாக இருப்பவர் சஞ்சய் ராவுத். இவரால்தான் பா.ஜ.க மற்றும் சிவசேனா கூட்டணி முறிந்ததாக பா.ஜ.க தெரிவித்துள்ளது. சஞ்சய் ராவுத் கடந்த 2022ம் ஆண்டு பத்ரா சால் நில... மேலும் பார்க்க

"தினமும் மலை மீது 10 கிமீ ஏறிச்செல்வேன்" - 2 மாணவிகளுக்காக கல்வி கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்

மகாராஷ்டிராவில் கட்சிரோலி, பண்டாரா, கோண்டியா, தானே, கோலாப்பூர் போன்ற சில மாவட்டங்களில் அதிக அளவில் மலைப்பகுதிகள் இருக்கின்றன. இந்த மலையில் அதிக அளவில் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். அவர்களுக்... மேலும் பார்க்க

மும்பை: ரயில் இருக்கைகளை ஆக்கிரமித்து சீட்டாட்டம்; பயணிகள் கண்டனம்; வைரல் வீடியோவின் பின்னணி என்ன?

மும்பை புறநகர் ரயில்களில் பயணம் செய்பவர்கள் இருக்கைக்காகவும், வாசலில் நின்று பயணம் செய்வது தொடர்பாகவும் அடிக்கடி சண்டையிட்டுக்கொள்வதுண்டு. மும்பை சத்ரபதி சிவாஜி டெர்மினஸ், சர்ச்கேட், தாதர் ரயில் நிலைய... மேலும் பார்க்க