செய்திகள் :

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் நிகழ்வில் கலந்துக் கொள்ள வேண்டுமா? நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்!

post image

திறமையான திரைக்கலைஞர்களை அங்கீகரிக்கும் வகையில் வருடந்தோறும், ஆனந்த விகடன் சினிமாவில் விருதுகள் நிகழ்வு நடைபெறும்.

ஒட்டுமொத்த தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் ஒன்றுகூடும் மகத்தான மேடை இது.

அந்த வகையில் 2025-ம் ஆண்டுக்கான ஆனந்த விகடன் சினிமா விருதுகள் நிகழ்வு, ஜூலை 3-ம் தேதி நடைபெறவிருக்கிறது.

இந்த ஆனந்த விகடன் சினிமா விருதுகள் விழாவில் சிறந்த படம், சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை என மொத்தம் 28 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படவுள்ளன.

இந்த விருதுகளுக்கான பரிந்துரைப் பட்டியல் (Nominees List) தற்போது வெளியாகியிருக்கிறது. awards.vikatan.com என்ற இணையதளத்தில் பரிந்துரைப் பட்டியல் முழுவதையும் நீங்கள் பார்க்கலாம்.

ஜூலை 3-ம் தேதி சென்னையில் பிரமாண்டமாக நடக்கவுள்ள ஆனந்த விகடன் சினிமா விருதுகள் - 2025 நிகழ்ச்சியில் நீங்களும் பங்கேற்கலாம்.

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2025
ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2025

அதற்கு நீங்கள் செய்யவேண்டியது ஒன்றே ஒன்றுதான். கீழே உள்ள லின்க்கை க்ளிக் செய்து 2025-ம் ஆண்டுக்கான வெற்றியாளர்களைச் சரியாகக் கணிக்க வேண்டும்.

அத்தோடு ஆனந்த விகடன் சினிமா விருதுகள் குறித்து ஓர் அட்டகாசமான ஸ்லோகனையும் பதிவு செய்ய வேண்டும்.

வெற்றியாளர்கள் குறித்த உங்களின் கணிப்பும், விகடன் தேர்வுக் குழுவின் தேர்வும் ஒன்றாக இருக்கும் பட்சத்தில், உங்களுக்குக் காத்திருக்கிறது விருது நிகழ்ச்சிக்கான இலவச டிக்கெட்!

இங்கே கிளிக் செய்யவும்.

விகடனின் 'லிங்கம்' வெப்சீரிஸ்: போலீஸ் ஆசை டு ரௌடிசம் - மாறும் வாழ்க்கைப் பாதை; கதிர் நடிப்பில்!

விகடன் டெலிவிஸ்டாஸின் 'லிங்கம்' வெப்சீரிஸ் வருகிற ஜூன் 26-ம் தேதி முதல் ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது.இந்த வெப்சீரிஸை லக்‌ஷ்மி சரவணகுமார் எழுதி, இயக்கி இருக்கிறார். ஹீரோவாக கதிரும், ஹீரோயினாக திவ்ய... மேலும் பார்க்க

'மாற்றத்தை விரும்பும் மக்களும் எங்களோடு கைகோர்க்கலாம்' - புதிய இயக்கத்தைத் தொடங்கிய லதா ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்தின் மனைவியான லதா ரஜினிகாந்த் தனியாக மக்கள் இயக்கம் ஒன்றைத் தொடங்கியிருக்கிறார். 'மக்கள் மேடை' என்கிற பெயரிலான இந்த இயக்கத்தை இன்று தொடங்கியிருக்கிறார் லதா ரஜினிகாந்த். View this post ... மேலும் பார்க்க

பரிமளா & கோ விமர்சனம்: சீரியஸாக காமெடி செய்யும் ஊர்வசி - ஜெயராம் - மிஷ்கின் கூட்டணி பாஸாகிறதா?!

அப்பா பரிமளா (ஜெயராம்), அம்மா சுதந்திரம் (ஊர்வசி), மகள்கள் பராசக்தி (சஞ்சனா) மற்றும் மதுமிதா (அனந்திகா) என சென்னையில் 'பரிமளா ஃபேமிலி' பட்ஜெட் போட்டு வாழ்க்கையைச் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள். பரிம... மேலும் பார்க்க

"ஆதி, இதன் லாபத்தை பார்க்காமல் நிதியுதவி செய்திருக்கிறார்!" - 'பொருநை' ஆவணப்பட இயக்குநர் பேட்டி!

'ஹிப் ஹாப் தமிழா' ஆதியின் 'தமிழண்டா இயக்கம்' தொடர்ந்து பல்வேறு ஆக்கப்பூர்வமான விஷயங்களை நிகழ்த்தி வருகிறது. கடந்த 2019-ம் ஆண்டு இந்த இயக்கம் மூலம் 'தமிழி' என்ற ஆவணப்பட இணையத் தொடர் வெளியாகி பாராட்டைப்... மேலும் பார்க்க

`` `உங்க மேல கோவம் வந்துருச்சு'ன்னு விஜய் சொன்னாரு"- முதல்வருடனான சந்திப்பு; பகிரும் எம்.எஸ்.பாஸ்கர்

முதலமைச்சர் விஜய்யை அவரது இல்லத்தில் நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் மரியாதை நிமித்தமாகச் சந்தித்திருக்கிறார். தேசிய விருது பெற்ற எம்.எஸ்.பாஸ்கர், விஜய்யுடன் 'திருப்பாச்சி', 'சிவகாசி' உள்பட பல படங்களில் சேர்ந்... மேலும் பார்க்க

SPB 80: "SPB பக்கத்தில் யாராலும் நெருங்கக் கூட முடியவில்லை!" - உருகும் இளையராஜா

மறைந்த பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் 80-ஆவது பிறந்தநாள் இன்று. இளையராஜா - எஸ்.பி.பி கூட்டணி என்பது தமிழ்த் திரையிசையில் முக்கியமான வெற்றிக் கூட்டணி. இளையராஜா இசையில் அதிக ஹிட் பாடல்களைப் ... மேலும் பார்க்க