செய்திகள் :

ஆரோக்யா பால், தயிர் விலை உயர்வு

post image

கடந்த பிப்ரவரி முதல் வாரத்தில் தனியார் பால் நிறுவனங்கள் பால் விலையை உயர்த்தியிருந்த நிலையில், ஹட்சன் நிறுவனத்தின் ஆரோக்கியா பால் விலை லிட்டருக்கு ரூ.4 உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு வாடிக்கையாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த பால் சந்தையில் 84 சதவீதம் தனியார் நிறுவனங்களிடம் உள்ளன. அதனால் அவை கூட்டணி அமைத்துக் கொண்டு நிர்ணயிப்பது தான் பால் விலை என்றாகி விட்டது.

இந்த நிலையில், தனியார் பால் நிறுவனங்கள் பால் விலையை உயர்த்தியிருந்த நிலையில், ஹட்சன் நிறுவனத்தின் ஆரோக்கியா பால் விலை லிட்டருக்கு ரூ.4, தயிர் விலை கிலோவுக்கு ரூ.3 உயர்ந்துள்ளது. இதனால் நிறைகொழுப்பு பாலின் விலை லிட்டர் ரூ.82-க்கும், அரை லிட்டர் ரூ.40-க்கும் விற்பனையாகிறது. இந்த விலை உயர்வு வாடிக்கையாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் தங்கம் தென்னரசு மரியாதை!

தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த பால் சந்தையில் 84 சதவீதம் தனியார் நிறுவனங்களிடம் உள்ளன. அதனால் அவை கூட்டணி அமைத்துக் கொண்டு நிர்ணயிப்பது தான் பால் விலை என்றாகி விட்டது. தனியார் நிறுவனங்களில் கட்டணக் கொள்ளையை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்காதது ஏமாற்றம் அளிக்கிறது என வாடிக்கையாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

தனியார் பால், தயிர் விலை மீண்டும் அதிகரித்திருக்கும் நிலையில், தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கத்தின் மாநில தலைவர் பொன்னுசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

அசாம்: அரசு மகளிர் காப்பகத்தில் ஹோலி கொண்டாடிய ஆளுநர்!

வடகிழக்கு மாநிலமான அசாமின் ஆளுநர் அம்மாநில அரசின் மகளிர் காப்பகத்தில் வசிப்பவர்களுடன் ஹோலி பண்டிகையை கொண்டாடியுள்ளார்.குவாஹட்டி மாவட்டத்தின் ஜலுக்பாரி பகுதியிலுள்ள அரசு மகளிர் காப்பகத்தில் வசிப்பவர்கள... மேலும் பார்க்க

இலங்கை: ரயில் மோதி யானைகள் பலியாவதைத் தடுக்க நடவடிக்கை!

இலங்கையில் ரயில் பாதையில் யானைகள் குறுக்கே வந்து பலியாவைத் தடுக்க அந்நாட்டு ரயில்வே துறை நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த பிப்.20 அன்று இலங்கையின் கிழக்கிலுள்ள மட்டக்களப்பிலி... மேலும் பார்க்க

பார்சிலோனா அணியின் முன்னாள் வீரரிடம் நீதிபதி விசாரணை!

ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த பார்சிலோனா கால்பந்து அணியின் முன்னாள் வீரர் ஜெரார்ட் பிக்கேவிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பார்சிலோனாவின் முன்னாள் வீரர் ஜெரார்ட் பிக்கேவிடம், சவூதி அரேபியாவில் ஸ்பானிஷ் சூப... மேலும் பார்க்க

தில்லி வந்தடைந்தார் நேபாள வெளியுறவுத் துறை அமைச்சர்!

நேபாள நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் அர்ஸு ரானா டியூபா இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார். இந்தியவில் நடைபெறவுள்ள 2025 ஆம் ஆண்டிற்கான ரைசினா உரையாடல் மாநாட்டில் பங்கேற்பதற்காக நேபாளத்தின் வெளியுறவுத்... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் ஹோலி பண்டிகை கொண்டாட்டம்!

பாகிஸ்தான் நாட்டின் இந்து மக்களினால் ஹோலி பண்டிகை கடூம் பாதுகாப்புடன் கொண்டாடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் சிறுபான்மையினரின் வழிபாட்டு தளங்களை பராமரிக்கும் எவாக்யூ டிரஸ்ட் பிராப்பர்ட... மேலும் பார்க்க

ஹோலி: தன் மீது சாயம் பூசியதை எதிர்த்த இளைஞர் கொலை!

ராஜஸ்தான் மாநிலம் தௌஸா மாவட்டத்தில் தன் மீது சாயம் பூசுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த இளைஞர் கொலை செய்யப்பட்டுள்ளார். தௌஸா மாவட்டத்தின் ரல்வாஸ் கிராமத்தைச் சேர்ந்த ஹன்ஸ்ராஜ் (வயது 25) என்ற இளைஞர் கடந்த மா... மேலும் பார்க்க