செய்திகள் :

``இந்தியாவின் அரசியல் வரைப்படத்தையே பாஜக மாற்ற முயற்சி செய்கிறது!" - ராகுல் காந்தி

post image

மகளிர் இடஒதுக்கீடு மசோதா மற்றும் தொகுதி மறுவரையறை மசோதா மீதான விவாதம் மக்களவையில் இரண்டாவது நாளாக நடைபெற்று வருகிறது.

விவாதங்களுக்கு பிறகு இன்று (ஏப்ரல்.17) மாலை வாக்கெடுப்பு நடைபெறும். அவையில் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு தேவை என்பதால் நாடாளுமன்றத்தில் காரசாரமான விவாதம் நடைபெற்று வருகிறது.

அந்தவகையில் தொகுதி மறுவரையறை மசோதா குறித்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, "இந்த மசோதாவை நாங்கள் ஒருபோதும் ஏற்க மாட்டோம்.

நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்

இந்தியாவின் அரசியல் வரைப்படத்தையே பாஜக மாற்ற முயற்சி செய்கிறது. ஜம்மு காஷ்மீரைப் போல அனைத்து மாநிலங்களையும் மாற்ற நினைக்கிறது பாஜக. அரசமைப்பை விட மனுஸ்மிருதியே பாஜகவிற்கு முக்கியம்.

தென் மாநிலங்களை அதிகாரமற்றதாக மாற்ற பாஜக அரசு முயற்சிக்கிறது. ஆனால் தென் மாநிலங்கள் கவலைப்பட வேண்டாம். இந்த மசோதா ஒரு போதும் நிறைவேறாது. தொகுதி மறுவரையறை மசோதா தேச விரோதமானது. தாங்கள் மட்டுமே இந்தியர்கள் என பாஜகவினர் நினைக்கின்றனர்.

பாஜக தொடர்ந்து ஆட்சியில் நீடிக்க தென்னிந்திய மற்றும் வடகிழக்கு மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை பறிக்க முயற்சி செய்கிறது. மேஜிக் செய்பவர்களை போல ஒன்றின் மீது ஒன்றை மறைத்து வித்தை காட்டுவது போல இந்த மசோதா உள்ளது.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

பந்துகளைத் தூக்கி போட்டு பிடிக்கும் வித்தைக்காரர் பந்துகளை பிடிக்காமல் விட்டால் மக்கள் சிரிப்பார்கள். பணமதிப்பிழப்பு, ஆப்ரேஷன் சிந்தூர் என பல மாயாஜாலத்தை நிகழ்த்திய வித்தைக்காரர் தற்போது பிடிப்பட்டுள்ளார்" என்று பிரதமர் மோடியை ராகுல் காந்தி சாடியிருக்கிறார். ராகுலின் இந்த பேச்சுக்கு பாஜக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

”2 ஊற்று கிணறுகள், 300 பனை மரங்கள் அழிப்பு; யாரும் ஓட்டு கேட்டு வராதீர்கள்!"- போராடும் மீனவ கிராமம்!

பேராவூணி அருகே சரபேந்திரராஜன் பட்டினம் பஞ்சாயத்தில் மனோரா சுற்றுலாதளம் அமைந்துள்ளது. இங்கு சின்னமனை, மனோரா மீனவர் காலனிகள் உள்ளன. இங்கு 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். மீன்பிடி முக்... மேலும் பார்க்க

"பெண் தெய்வமான காளியும் கருப்பு உடைதான் அணிந்துள்ளார்.!"- மோடியின் விமர்சனத்திற்கு கனிமொழி பதிலடி

மகளிர் இடஒதுக்கீடு மசோதா மற்றும் தொகுதி மறுவரையறை மசோதா மீதான விவாதம் மக்களவையில் இரண்டாவது நாளாக நடைபெற்று வருகிறது. விவாதங்களுக்கு பிறகு இன்று (ஏப்ரல்.17) மாலை வாக்கெடுப்பு நடைபெறும். அவையில் மூன்றி... மேலும் பார்க்க

அவிநாசி: தேர்தலில் தொடர்ந்து புறக்கணிக்கும் மக்கள், மகளிர் வாக்குகளை கவரும் முயற்சியில் எல்.முருகன்

எல்.முருகனுக்கும் தி.மு.க- வின் இளம் வேட்பாளரான‌ 26 வயதான மருத்துவ பெண்மணி கோகிலாமணிக்கும் நேரடி போட்டி நிலவி வருகிறது. வெற்றியை அடைய இருவரும் தீவிரமாகக் களமாடி வருகின்றனர். எல். முருகன் மத்திய இணை அம... மேலும் பார்க்க

தொகுதி மறுவரையறை: ``முதல்வரே... படித்துத் தெரிந்துகொள்ளுங்கள்" - நடிகை குஷ்பு காட்டம்

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் நடந்துவரும் நிலையில், மகளிர் இட ஒதுக்கீடு மசோதா குறித்தும், தொகுதி மறு சீரமைப்பு குறித்தும் விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நடிகையும், பா.ஜ.க நிர்வாகியுமான குஷ்ப... மேலும் பார்க்க

தொகுதி மறுவரையறை: ``இறுதியில் ஓர் அரசியல் மதிப்பிழப்பு நடவடிக்கையாகவே முடியும்" - எம்.பி சசி தரூர்

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தின் இரண்டாம் நாளான இன்று மகளிர் இட ஒதுக்கீடு மசோதா, தொகுதி மறுவரையறை மசோதா, யூனியன் பிரதேசங்களின் தொகுதி மறுவரையறை மசோதான் என மூன்று மசோதாக்கள் விவாதிக்கப்பட்டு வருகிறது. ... மேலும் பார்க்க