காவிரி - வைகை - குண்டாறு இணைப்புத் திட்டம்: `மாயனூர் கதவணை டு புதுக்கோட்டை வெள்...
`இந்தியாவிலேயே அதிக விலை' டெல்லியில் ரூ.271 கோடிக்கு சொகுசு பங்களா வாங்கிய தொழிலதிபர் மானவ் சர்தானா
டெல்லி மற்றும் அதன் அருகில் உள்ள குருகிராம் பகுதியில் சொகுசு அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் பங்களாக்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் டி.எல்.எப் என்ற கட்டுமான நிறுவனம் அடுக்கு மாடி மற்றும் தனி பங்களாக்களை கட்டி விற்பனை செய்து வருகிறது. இதில் ஹரியானாவை சேர்ந்த தொழிலதிபர் மானவ் சர்தானா, குருகிராமில் டி.எல்.எப் நிறுவனம் கட்டி வரும் அதி-சொகுசு குடியிருப்பு திட்டமான 'டஹ்லியாஸ்(The Dahlias) இல் ரூ.271 கோடிக்கு ஒரு பென்ட்ஹவுஸை( தனி சொகுசு ஆடம்பர பங்களா) வாங்கியுள்ளார்.
இது இதுவரை நாட்டிலேயே மிகவும் அதிக விலையுள்ள வீடு விற்பனைகளில் ஒன்றாகும். டஹ்லியாஸ் வளாகம் கோல்ஃப் மைதான வசதியுடன் குருகிராமின் 54வது செக்டரில் அமைந்துள்ளது. மானவ் சர்தானா வாங்கி இருக்கும் இந்த பென்ட்ஹவுஸ் 17,200 சதுர அடி கொண்டதாகும் .அதன் கார்பெட் ஏரியா சுமார் 10,500 சதுர அடியாகவும் உள்ளது.

அதன் கார்பெட் ஏரியா மதிப்பு ஒரு சதுர அடிக்கு சுமார் ரூ. 2.6 லட்சம் என்ற அளவில் வாங்கப்பட்டுள்ளது. இந்த அளவுக்கு அதிக விலை கொடுத்து இந்த சொகுசு பங்களாவை வாங்கி இருக்கும் மானவ் சர்தானா குறித்து வெளியுலகில் பெரிய அளவில் அறியப்படாவிட்டாலும், ஆட்டோமொபைல் துறையில் மிகவும் அதிக அளவில் பிரபலம் ஆவார்.
குருகிராமில் டி.எல்.எப் நிறுவனம் தனது 5வது கட்ட திட்டத்தில் 17 ஏக்கர் பரப்பளவில் அதி-சொகுசுத் திட்டமான 'தி டாலியாஸ்' (The Dahlias)-ஐ கடந்த 2024ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. இந்தத் திட்டத்தில் சுமார் 420 அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் பென்ட்ஹவுஸ்கள் அடங்கியுள்ளன. இவற்றில் தனிப்பட்ட குடியிருப்புகளின் விலை ரூ. 100 கோடி முதல் ரூ. 170 கோடி வரை உள்ளது. பென்ட்ஹவுஸ்கள் அவற்றின் அளவு மற்றும் அமைவிடம் ஆகியவற்றை பொருத்து இன்னும் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. இந்தத் திட்டம் மூலம் ரூ. 40,000 கோடிக்கும் அதிகமான வருவாயை ஈட்ட முடியும் என டி.எல்.எப் நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. இதில் கட்டப்பட்டு வரும் வீடுகளில் ஏற்கனவே 65% க்கும் மேற்பட்ட யூனிட்களை விற்றுவிட்டது.
யார் இந்த மானவ்?
100 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியம் கொண்ட டெல்லியை சேர்ந்த வணிகக் குழுமமான சர்தானா குடும்பத்தைச் சேர்ந்த மானவ் சர்தானா ஒரு தொழிலதிபர் ஆவார். 1969-ல் மானவின் தந்தை எஸ்.பி. சர்தானா மற்றும் ஜக்ஜித் சிங் ஆகியோரால் இணைந்து வாகன உதிரிபாகங்கள் தயாரிக்கும் இம்பீரியல் ஆட்டோ இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தை தொடங்கினர். தற்போது இந்த இம்பீரியல் நிறுவனத்தில் முக்கிய பங்கு வகித்து வரும் மானவ் சர்தானா தனியார் பங்கு வர்த்தக நிறுவனமான வார்பர்க் பிங்கஸ் நிறுவனத்தை இம்பீரியல் ஆட்டோ நிறுவனம் வாங்கியதில் முக்கிய பங்கு வகித்தார்.
தற்போது தொடர்ந்து குடும்பத் தொழிலில் ஈடுபட்டு வரும் மானவ், இம்பீரியல் ஆட்டோ குழுமத்துடன் தொடர்புடைய பன்னிரண்டுக்கும் மேற்பட்ட நிறுவனங்களில் இயக்குநராக உள்ளார்.

இவற்றில் இம்பீரியல் சிலிக்கான் பிரைவேட் லிமிடெட், க்ரூஸ் ஹைட்ராலிக்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் இம்பீரியல் மார்டோர் என்ஜின் ட்யூப்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகியவை அடங்கும்.
கொரானா பெருந்தொற்றுக்குப் பிறகு இந்தியாவின் ஆடம்பர வீடுகளுக்கான தேவை வலுவாக அதிகரித்துள்ளது. குறிப்பாக குருகிராம் மற்றும் மும்பை ஆகிய நகரங்களில், வசதி படைத்த வாடிக்கையாளர்கள் பரந்த மற்றும் தனித்துவமான வீடுகளை அதிகம் விரும்புவதால், அதிக மதிப்புள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் 'பென்ட்ஹவுஸ்' (penthouse) விற்பனை பெருமளவில் நடைபெற்று வருகின்றன. இந்தியாவின் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் ஒன்றான DLF, 352 மில்லியன் சதுர அடிக்கும் அதிகமான பரப்பளவில் 185-க்கும் மேற்பட்ட திட்டங்களை செயல்படுத்தி வருகிற்து.



















