செய்திகள் :

'இந்திய அணியின் வெற்றிக்கு உதவிய அந்த 45 நிமிட பயிற்சி!' - ரகசியம் என்ன தெரியுமா?

post image

தென்னாப்பிரிக்க அணியை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய பெண்கள் அணி உலகக்கோப்பையை வென்றிருக்கிறது. இந்திய பெண்கள் அணி வெல்லும் முதல் உலகக்கோப்பை என்பதால் இது ஒரு வரலாற்று வெற்றியாக பார்க்கப்படுகிறது. போட்டிக்கு முந்தைய நாளில் ஒரு 45 நிமிடங்களுக்கு இந்திய வீராங்கனைகள் செய்த ஒரு பயிற்சி அவர்கள் வெற்றி பெற காரணமாக அமைந்ததாக வீராங்கனைகளே கூறியிருக்கின்றனர்.

Team India
Team India

ஜெமிமா பேசுகையில், 'இந்த வெற்றி எங்களுக்கானது மட்டும் இல்லை. எங்களுக்கு முன்பு ஆடியவர்களுக்கும்தான். அதுமட்டுமல்ல இது வருங்கால சந்ததியினருக்கானதும் கூட. பெண்கள் கிரிக்கெட் எப்படி மாறப் போகிறது என காண ஆவலாக இருக்கிறேன். இது கனவு போல இருக்கிறது. இந்த இடத்தில் இருக்க நான் தேர்வு செய்யப்பட்டிருக்கிறேன் என நினைக்கிறேன்.

வெற்றி தோல்வி இரண்டிலும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டுமென நினைத்தோம். நாங்கள் எல்லோரும் ஒரு விஷயத்தை குறிப்பாக செய்தோம். அது 'Visualisation'. போட்டிக்கு முந்தைய நாளில் மைதானத்தில் 45 நிமிடங்கள் அமர்ந்து நாங்கள் உலகக்கோப்பையை வென்றதை போல மனதுக்குள் சித்திரமாக ஓட்டி பார்த்துக்கொண்டோம். இந்தியா உலக சாம்பியன்ஸ் 2025 என்பது எங்களின் மனதுக்குள் ஓட்டிக்கொண்டே இருந்தோம். அந்த 'Visualisation' பயிற்சி எங்களின் வெற்றிக்கு பெரியளவில் உதவியது.' என்றார்.

Team India
Team India

ஸ்மிருதி மந்தனா பேசுகையிலும் இந்த 'Visualisation' பயிற்சி பற்றி கூறியிருந்தார். அவர் பேசியதாவது, 'நேற்று ஒரு 'Visualisation' செஷனில் கலந்துகொண்டோம். நாங்கள் உலகக்கோப்பையை வென்றதைப் போல மனதுக்குள் சித்திரத்தை ஓடவிட்டுக் கொண்டோம். அது எங்களுக்கு உத்வேகத்தை கொடுத்தது.' என்றார்.

நாம் செய்ய நினைப்பவற்றை முன்பாகவே மனதுக்குள்ளாக அசைபோட்டு, அதை செய்வதற்கான உத்வேகத்தையும் நேர்மறை எண்ணத்தையும் 'Visualisation' முறைப்படி பெற முடியும் என்கின்றனர். உலகளவில் சாதிக்கும் பல விளையாட்டு வீரர்களுமே இந்த 'Visualisation' பற்றி நம்பிக்கையோடு நிறைய பேசியிருக்கின்றனர்.

'இது ஒரு தொடக்கம்தான்; இனி நிறைய ஜெயிப்போம்!' - வெற்றி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர்!

உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வரலாறு படைத்திருக்கிறது. இந்திய பெண்கள் அணிக்காக முதல் ஐ.சி.சி கோப்பையை வென்று கொடுத்திருக்கும் ஹர... மேலும் பார்க்க

'இந்த பொண்ணுங்க அவ்வளவு உழைச்சிருக்காங்க!' - உருகும் இந்திய அணியின் பயிற்சியாளர் அமோல் மஜூம்தார்

உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வரலாறு படைத்திருக்கிறது. வெற்றிக்குப் பிறகு இந்திய அணியின் பயிற்சியாளர் அமோல் மஜூம்தார் அவரது வீரா... மேலும் பார்க்க

'நல்லதோ கெட்டதோ, எல்லாரும் ஒன்னா நிற்போம்!' - வெற்றி குறித்து ஸ்மிருதி மந்தனா நெகிழ்ச்சி!

உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வரலாறு படைத்திருக்கிறது. வெற்றிக்குப் பிறகு இந்திய அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா நெக... மேலும் பார்க்க

வரலாறு படைத்த இந்தியா; உலகக்கோப்பையை வெல்ல காரணமாக அமைந்த அந்த 4 தருணங்கள்!

நவி மும்பையில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி முதல் முறையாக உலகக்கோப்பையை வென்று வரலாறு படைத்திருக்கிறது இந்திய பெண்கள் அணி. போட்டிக்கு முன்பான பத்திரிகையாளர் சந்திப்பில் பேட் கம்மின்ஸ் ஸ்டைலில், 'நாங்கள... மேலும் பார்க்க

'தலைமுறைகளின் கனவு வெற்றி!' - உலகக்கோப்பையை வென்ற இந்தியா; மகுடம் சூடிய வீராங்கனைகள்!

இந்திய கிரிக்கெட் இதுவரை ஆண் கிரிக்கெட்டர்களால் மட்டுமே அடையாளப்படுத்தப்பட்டுக் கொண்டிருந்தது. கபில்தேவும், சச்சினும், தோனியும் கோலியும்தான் விளையாட்டை விரும்பும் இளைஞர்களின் ஆஸ்தானமாக மதிக்கப்பட்டார்... மேலும் பார்க்க