லண்டன்: ``ரயிலில் பயணிகளுக்கு கத்திகுத்து; 8-வது நிமிடத்தில் கைது'' - சம்பவத்தை ...
'இது ஒரு தொடக்கம்தான்; இனி நிறைய ஜெயிப்போம்!' - வெற்றி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர்!
உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வரலாறு படைத்திருக்கிறது. இந்திய பெண்கள் அணிக்காக முதல் ஐ.சி.சி கோப்பையை வென்று கொடுத்திருக்கும் ஹர்மன்ப்ரீத் கவுர் போட்டிக்கு பிறகு ரொம்பவே நெகிழ்ச்சியாக பேசியிருந்தார்.

ஹர்மன்ப்ரீத் கவுர் பேசியதாவது, 'இங்கு கூடியிருக்கும் அத்தனை ரசிகர்களுக்கும் நன்றி. எங்களின் வெற்றி தோல்வி இரண்டின் போதும் உடனிருந்தார்கள். தொடர்ந்து 3 போட்டிகளில் தோற்றாலும் இந்த அணியால் இதை செய்ய முடியும் என்பது தெரியும்.
அணியின் ஒவ்வொரு வீராங்கனையும் இரவு பகலாக உழைத்திருக்கிறார்கள். லாராவும் லீஸூம் பேட்டிங் ஆடிக்கொண்டிருந்த போது ஷெபாலியை பார்த்தேன். அவர் இன்றைக்கு நன்றாக பேட்டிங் ஆடியிருந்தார். இது அவருடைய நாள் என தோன்றியது. அவருக்கு ஒரு ஓவராவது கொடுக்க வேண்டுமென மனதில் தோன்றியது. நான் அவரிடம் ஒரு ஓவர் போடுகிறாயா என்றேன். அவர் எப்போதும் பந்து வீச தயாராக இருந்தார். ஷெபாலி அணிக்குள் வந்த போதே நீ 2-3 ஓவர்கள் வீச வேண்டியிருக்கும் என்றோம். அணிக்காக 10 ஓவர்களையும் கூட வீசுவேன் என அவர் கூறினார். அவர் எப்போதும் அணிக்காக நிற்கக்கூடியவர்.

மழை பெய்ததால் இன்றைக்கு பிட்ச் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. இறுதிப்போட்டியில் கொஞ்சம் கூடுதல் அழுத்தம் இருக்கும். அதனால் இந்த ஸ்கோரே போதும் என நினைத்தோம். ஒவ்வொரு உலகக்கோப்பைக்கு பிறகுமே கோப்பையை வெல்ல என்ன செய்ய வேண்டுமென அதிகம் விவாதிப்போம். கடந்த இரண்டு ஆண்டுகளாக பயிற்சியாளர் அமோல் எங்களுடன் இருக்கிறார். பெரிய தருணங்களின் சிறப்பாக செயல்பட நீங்கள் ஸ்பெசலாக ஒன்றை செய்ய வேண்டும் என்பார். கடந்த 2 ஆண்டுகளாக அணியில் நாங்கள் நிறைய மாற்றங்களை செய்யவில்லை.உலகக்கோப்பையை வெல்ல வேண்டுமென நினைத்தோம், அதற்காக காத்திருந்தோம், வென்றுவிட்டோம். இது ஒரு தொடக்கம்தான். இப்படி கோப்பைகளை வெற்றி பெறுவதை இனி வழக்கமாக மாற்ற வேண்டும்." என்றார்.














