``அதிமுக - தவெக கூட்டணி அமைத்து வென்றால், விஜய்யை காலி செய்து விடுவார் எடப்பாடி'...
'நல்லதோ கெட்டதோ, எல்லாரும் ஒன்னா நிற்போம்!' - வெற்றி குறித்து ஸ்மிருதி மந்தனா நெகிழ்ச்சி!
உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வரலாறு படைத்திருக்கிறது. வெற்றிக்குப் பிறகு இந்திய அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா நெகிழ்ச்சியாக பேசியிருந்தார்.

ஸ்மிருதி மந்தனா பேசியதாவது, 'எப்படி என்னுடைய உணர்வுகளை வெளிப்படுத்துவது என தெரியவில்லை. ஒவ்வொரு உலகக்கோப்பையிலும் எங்களுக்கு நிறைய ஏமாற்றங்கள் நிகழ்ந்திருக்கிறது. ஆனால், எங்களுக்கு ஒரு பொறுப்புணர்வு இருக்கிறது என்பது எங்களுக்கு தெரியும்.
கடந்த 45 நாட்களில் எங்களுக்கு அவ்வளவு அன்பும் ஆதரவும் கிடைத்தது. 45 நாட்களாக நான் சரியாக தூங்கவில்லை. இந்தத் தருணத்துக்காகத்தான் காத்திருந்தேன்.

எங்கள் அணியின் ஒவ்வொரு வீராங்கனையும் சக வீராங்கனைக்காக சிந்திப்போம். சக வீராங்கனைகளுக்காக ஆடுவோம். நல்லதோ கெட்டதோ எல்லாரும் ஒன்றாக இருப்போம். அதுதான் இந்த அணியின் பலம்.' என்றார்.












