செய்திகள் :

"இந்த வெற்றி இன்னும் இனிக்கிறது"- சிம்புவின் 'மாநாடு' படம் குறித்து தயாரிப்பாளர் நெகிழ்ச்சி

post image

வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘மாநாடு’.

இந்தப் படத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன், வாகை சந்திரசேகர், மனோஜ் பாரதிராஜா, பிரேம்ஜி அமரன், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்தார். சுரேஷ் காமாட்சி படத்தை தயாரித்தார்.

வெங்கட் பிரபு, சிம்பு, சுரேஷ் காமாட்சி
வெங்கட் பிரபு, சிம்பு, சுரேஷ் காமாட்சி

இப்படம் வெளியாகி 4 வருடங்களான நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி 'மாநாடு' படம் குறித்து தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்திருக்கிறார்.

அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், " எனக்கு, எஸ்டிஆருக்கு, இயக்குநர் வெங்கட் பிரபுவிற்கு பெரிய நம்பிக்கை இருந்தது மாநாடு படத்தின் மீது.

கோவிட் தாமதம் மற்ற தாமதங்கள் நிகழ்ந்தபோதும் அந்தப் படத்திற்கு ஒரு பாஸிட்டிவிட்டி இருந்துகொண்டே இருந்தது.

வெளியிலிருந்தும், படத்தின் குழுவிலிருந்தும் நம்பிக்கை பரவிக்கொண்டே இருந்தது.

இசை, ஒளிப்பதிவு, எடிட்டிங், சண்டைப்பயிற்சி, கலை இயக்கம், ஆடை வடிவமைப்பு, லைட் மேன்ஸ், தயாரிப்பு நிர்வாகம் செய்த அனைவரும் தந்த உண்மையான உழைப்பே மாபெரும் வெற்றிக்குக் காரணம்.

நான்கு வருடங்கள் தொட்டாலும் இந்த நிஜமான வெற்றி இன்னும் இனிக்கிறது. எஸ்டிஆரின் ரசிகர்கள் வைத்த நம்பிக்கை வெற்றிக்கு வித்திட்டது.

உடன் நின்ற பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் நன்றி." என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார்.

AVM Saravanan: ``ஏவி.எம் என்ற பெரும் தோப்பில் நடப்பட்ட ஒரு சிறு செடி நான்" - கமல் இரங்கல்

தமிழ் சினிமாவின் முதுபெரும் தயாரிப்பாளர் ஏவி.எம் சரவணன் இன்று இயற்கை எய்தினார்.ரஜினிகாந்த் உள்ளிட்ட திரைப் பிரபலங்களும், முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் அவரின் உடலுக்கு நேரில் சென்று அஞ... மேலும் பார்க்க

AVM Saravanan: முரட்டு காளை, அயன், சிவாஜி - தமிழ் சினிமாவில் புதிய பாய்ச்சலை நிகழ்த்திய சரவணன்

முதுபெரும் தயாரிப்பாளர் ஏ.வி.எம். சரவணன் இயற்கை எய்தியிருக்கிறார். தந்தை ஏ.வி.எம். மெய்யப்ப செட்டியார் தொடங்கிய தயாரிப்பு நிறுவனத்தை அடுத்தடுத்த உயரங்களுக்குக் எடுத்துச்சென்ற பெருமை ஏ.வி.எம். சரவணனுக்... மேலும் பார்க்க

AVM Saravanan: "அவரோட நியாபகமாதான் சூர்யாவுக்கு சரவணன்னு பேர் வச்சேன்"- கண்ணீரில் சிவகுமார்

ஏ.வி.எம் சரவணன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய சிவகுமார் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். ஏ.வி.எம் நிறுவனம் 73 வருடங்களில் 175 படங்கள் எடுத்திருக்கிறது. இந்த ஸ்டுடியோவில் நடிக்காத நடிகர்களே க... மேலும் பார்க்க