செய்திகள் :

'இனப்படுகொலை' - நெதன்யாகு மீது கைது வாரன்ட் பிறப்பித்த துருக்கி

post image

'போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகிவிட்டது. இனி பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தாது. இனி பாலஸ்தீன மக்கள் நிம்மதியாக வாழலாம்' என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்து இன்னும் ஒரு மாதம்கூட முழுமையாக முடியவில்லை.

அதற்குள் இஸ்ரேல் தொடர்ந்து பாலஸ்தீனத்தின் மீது தாக்குதல் நடத்திக்கொண்டே தான் இருக்கிறது. நூற்றுக்கணக்கான மக்கள் இறந்துகொண்டே தான் இருக்கிறார்கள்.

போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்தத் தாக்குதலை இஸ்ரேல் முதன்முதலில் தொடங்கியபோது, 'எங்களது ராணுவ வீரர் ஒருவரை ஹமாஸ் கொன்றுவிட்டது. அதற்கான‌ பதிலடி நடவடிக்கை இது' என்று காரணம் கூறியது.

ட்ரம்ப்
ட்ரம்ப்

ட்ரம்ப் பதில்

இதுகுறித்து ட்ரம்ப்பிடம் கேட்டபோது, 'தங்களை தற்காத்துக்கொள்ள அனைத்து உரிமையும் இஸ்ரேலுக்கு உள்ளது' என்று கையை விரித்துவிட்டார்.

இப்படியான காரணங்களைக் கூறிக்கொண்டே இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தாக்குதலை நிறுத்துவதாகத் தெரியவில்லை.

துருக்கி...

இதனையடுத்து, துருக்கி நெதன்யாகு மீது கைது வாரன்ட்டை பிறப்பித்துள்ளது. மேலும், இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், தேசிய பாதுகாப்பு அமைச்சர் இடாமர் பென் க்விர் மற்றும் இராணுவத் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் இயால் ஜமீர் ஆகியோருக்கும் கைது வாரன்ட்டை பிறப்பித்துள்ளது துருக்கி.

இந்தக் கைது வாரன்ட்டிற்கு, 'மனிதத்திற்கு எதிரான இனப்படுகொலை மற்றும் குற்றம்' என்று காரணம் கூறியுள்ளது.

"திமுகவில் உள்ள 16 அமைச்சர்கள் அதிமுகவிலிருந்து போனவர்கள்தானே" - ஆர்.பி.உதயகுமார்

எடப்பாடி பழனிசாமி எடுத்துள்ள கருத்துக்கணிப்பில் மதுரை மாவட்டத்தின் 10 தொகுதிகளில் 8-ல் அதிமுக வெற்றி பெறுவது உறுதி என முன்னாள் அமைச்சரும் எதிர்க்கட்சித் துணை தலைவருமான ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார... மேலும் பார்க்க

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: "SIR-ஐ எதிர்த்து 11ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்" - ஸ்டாலின்

இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திமுக மாவட்டச் செயலாளர்களுடன் காணொளி காட்சி மூலம் கூட்டம் ஒன்றை நடத்தினார்.அந்தக் கூட்டத்தில் என்னென்ன ஆலோசிக்கப்பட்டன என்பது குறித்து ஸ்டாலின் பதிவிட்டிருப்ப... மேலும் பார்க்க

அதிமுக: "உழைப்பவர்களை எவராலும் வீழ்த்த இயலாது" - என்ன சொல்கிறார் செங்கோட்டையன்?

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் இன்று (நவ. 9) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்.அப்போது, "எனக்கு சங்கங்களிலிருந்து நி... மேலும் பார்க்க