Job Interview: "என்னை நேர்காணல் செய்தவர் மனிதரே இல்லை" - AI குழப்பத்தில் ரெட்டிட...
'இந்த' தங்கத்தில் முதலீடு செய்யாதீர்கள்; அதற்கு நாங்கள் பொறுப்பல்ல - எச்சரிக்கும் செபி
செய்கூலி, சேதாரம், நாளடைவில் மதிப்பு தேய்மானம் போன்ற காரணங்களால், தற்போது பலரும் பிசிக்கல் தங்கத்தைத் தாண்டி, டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கியுள்ளனர்.
இந்த டிஜிட்டல் தங்கம் முதலீடுகள் குறித்து தற்போது எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது செபி.
செபி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் எலெக்ட்ரானிக் தங்க ரசீதுகள் வழங்கும் கான்ட்ராக்ட்டுகள், தங்கம் இ.டி.எஃப்கள் ஆகியவை செபியால் அங்கீகரிக்கப்பட்ட தங்கம் முதலீடுகள்.
இவற்றில் செபியில் பதிவுசெய்த இடைத்தரகர்கள் மற்றும் செபியால் பரிந்துரைக்கப்பட்ட ஒழுங்குமுறை கட்டமைப்புகள் மூலம் முதலீடு செய்யலாம்.
எச்சரிக்கை
தற்போது டிஜிட்டல் மற்றும் ஆன்லைன் வலைதளங்களில் டிஜிட்டல் தங்கம் மற்றும் இ-தங்கப் பொருள்கள் விற்கப்படுவதாக எங்களது கவனத்திற்கு வந்துள்ளது. இந்த டிஜிட்டல் தங்கங்கள் பிசிக்கல் தங்கத்திற்கு மாற்றாக சந்தைப்படுத்தப்படுகின்றன.
இவை செபியால் அங்கீகரிக்கப்பட்டதில்லை. இவை செபி அங்கீகரித்த தங்க முதலீடுகளில் இருந்து முற்றிலும் மாறானது.
இந்தத் தங்க முதலீடுகள் செபியின் கண்காணிப்பிற்கு உட்பட்டதில்லை.
இந்த டிஜிட்டல் தங்க முதலீடுகளில் ரிஸ்க் உள்ளது" என்று எச்சரித்துள்ளது.

















