செய்திகள் :

இன்னும் 9 போட்டிகள்தான் இருக்கு; WTC இறுதிப் போட்டிக்கு இந்தியா முன்னேறுவதற்கான வழி என்ன?

post image

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடங்கப்பட்ட பிறகு முதல் இரண்டு எடிஷனில் (2019-21, 2021-23) இறுதிப் போட்டி வரை சென்ற இந்திய அணி.

கடந்த எடிஷனில் (2023-25) இறுதிப் போட்டிக்கு செல்ல சுலபமான வாய்ப்பிருந்தும் சொந்த மண்ணில் நியூசிலாந்திடம் 3 - 0 என தொடரை இழந்து அந்த வாய்ப்பைக் கடினமாக்கிக் கொண்ட இந்தியா, அதைத்தொடர்ந்து ஆஸ்திரேலியாவிடம் 3 - 1 எனப் பார்டர்-கவாஸ்கர் தொடரை இழந்ததால் இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியாமல் போனது.

இந்த நிலையில், தென்னாப்பிரிக்காவுடனான டெஸ்ட் தொடரில் 2 - 0 என இந்தியா ஒயிட் வாஷ் ஆனதால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு சவாலானதாக மாறியிருக்கிறது.

இந்திய கிரிக்கெட் அணி - BCCI
India - BCCI

நடப்பு எடிஷனில் (2025-27) இதுவரை இந்திய அணி 3 டெஸ்ட் தொடர்களில் ஆடியிருக்கிறது.

அதில், 9 டெஸ்ட் போட்டிகளில் (இங்கிலாந்து 5, வெஸ்ட் இண்டீஸ் 2, தென்னாப்பிரிக்கா 2) 4-ல் வெற்றியும், 4-ல் தோல்வியும், ஒன்றில் டிராவும் கண்டு புள்ளிப்பட்டியலில் 48.15 சதவிகித புள்ளிகளுடன் 5-வது இடத்துக்கு இறங்கியிருக்கிறது.

தென்னாப்பிரிக்காவுடனான தொடருக்கு முன்பாக புள்ளிப்பட்டியலில் 55.88 சதவிகித புள்ளிகளுடன் 3-வது இடத்தில் இருந்தது.

தற்போது 7 சதவிகித புள்ளிகள் குறைந்து 5-வது இடத்துக்கு இந்தியா இறங்கிவிட்டதால் இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பு கடினமாகியிருக்கிறது.

நடப்பு எடிஷனில் இந்தியாவுக்கு இன்னும் 3 டெஸ்ட் தொடர்கள்தான் இருக்கிறது.

அடுத்தாண்டு ஆகஸ்ட்டில் இலங்கையில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், அக்டோபரில் நியூசிலாந்தில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், 2027 ஜனவரியில் சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கெதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் இந்தியா விளையாடவிருக்கிறது.

உலக டெஸ்ட் சாம்பியாயன்ஷிப் (2025-27) புள்ளிப்பட்டியல்
WTC 2025-27 Points Table

இந்த 9 டெஸ்ட் போட்டிகளில் குறைந்தபட்சம் 7 வெற்றி பெற்றால்தான் இந்தியாவால் இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியும். அதற்கும் மற்ற அணிகளின் முடிவுகள் அவசியம்.

9-க்கு 9-லும் வெற்றிபெற்றால் இறுதிப் போட்டிக்குச் செல்வது உறுதி. ஒருவேளை 2-க்கும் மேற்பட்ட டெஸ்ட் போட்டிகளில் தோல்வியடைந்தால் இறுதிப் போட்டி கனவை இந்தியா மூடிவைத்துவிடலாம்.

கம்மின்ஸ் (ஆஸ்திரேலியா) - பவுமா (தென்னாபிரிக்கா)
கம்மின்ஸ் (ஆஸ்திரேலியா) - பவுமா (தென்னாபிரிக்கா)

தற்போதைய நிலவரப்படி புள்ளிப்பட்டியலில் ஆஸ்திரேலியா 4 போட்டிகளில் 4 வெற்றியுடன் 100 சதவிகித புள்ளிகளுடன் முதலிடத்திலும், நடப்பு சாம்பியன் தென்னாப்பிரிக்கா 4 போட்டிகளில் 3-ல் வெற்றி, ஒன்றில் தோல்வியுடன் 75 சதவிகித புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா இறுதிப்போட்டிக்கு செல்லுமா என்பது பற்றிய உங்களின் கருத்துக்களை கமெண்ட்டில் பதிவிடுங்கள்.

"டாஸ் போடுறது மட்டுமே கேப்டன் வேலை இல்ல" - சூர்யகுமார் யாதவ் மீது முன்னாள் வீரர் கடும் விமர்சனம்

தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி கடந்த நவம்பர் முதல் இந்தியாவில் டெஸ்ட், ஒருநாள், டி20 தொடர்களில் ஆடி வருகிறது.முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 2 - 0 என இந்தியாவை தென்னாப்பிரிக்கா ஒயிட் வாஷ் செய்ய, அடுத... மேலும் பார்க்க

``என் கணவர் எந்தப் பழக்கத்துக்கும் அடிமையாகவில்லை; ஆனால் அணியினர்.!" - ஜடேஜா மனைவி ரிவாபா

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா. முதல்முறையாக 2009-ல் இலங்கை அணிக்கெதிரான ஒருநாள் தொடர் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான ஜடேஜா, 2013 சாம்பியன்ஸ் டிராபி, 2024 டி20 ... மேலும் பார்க்க

``என் வாழ்வில் அதை விட வேறெதையும் நான் அதிகம் காதலிக்கவில்லை!" - மனம் திறந்த ஸ்மிருதி மந்தனா

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனையும், துணைக் கேப்டனுமான (ODI) ஸ்மிருதி மந்தனாவுக்கு, பலாஷ் முச்சல் என்பவருடன் கடந்த மாதம் திருமணம் நடைபெறவிருந்தது.ஆனால், திருமணத்துக்கு முந்தைய நாள... மேலும் பார்க்க

google Search 2025: உலகளவில் தேடப்பட்ட இந்திய கிரிக்கெட் வீரர்கள்; முதல் 10 இடம் யாருக்கு?

இந்த 2025 ஆண்டு இந்தியாவிற்குப் புதிய கிரிக்கெட் வீரர்களை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியது. இந்தியா - பாகிஸ்தான் இடையே இருந்த தீவிர அரசியல் முரண்பாடுகளுக்கு இடையேயும் இந்திய கிரிக்கெட் வீரர்களின் தாக்... மேலும் பார்க்க

IND vs SA: ஹர்திக்கின் அதிரடி; 101 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி!

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஆரம்பமாகியிருக்கின்றன. தென்னாப்பிரிக்கா அணி டாஸை வென்று, பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய இந்திய அணியில் அபிஷேக் சர்மா 1... மேலும் பார்க்க

"வருண் சக்கரவர்த்தியை இந்தப் போட்டியில் பயன்படுத்தாதீங்க, ஏன்னா..!" - கம்பீருக்கு அஷ்வின் ஐடியா!

இந்தியாவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் தென்னாப்பிரிக்க அணி 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது.டெஸ்ட் தொடரில் தென்னாப்பிரிக்க அணி வெற... மேலும் பார்க்க