செய்திகள் :

இன்ஸ்டாகிராமில் காதல், திருமணம்... மனைவி, மாமியார் என 2 பேரும் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட கொடூரம்

post image

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகில் உள்ள பச்சாபாளையத்தைச் சேர்ந்த 21 வயதான பூவரசி என்ற இளம்பெண் திண்டுக்கல்லைச் சேர்ந்த அக்ஷ்ய் என்ற 25 வயது இளைஞரை இன்ஸ்டாகிராம் மூலம் காதலித்து வந்திருக்கிறார்.

கடந்த சில ஆண்டுகளாகக் காதலித்து வந்த நிலையில், அண்மையில் யாருக்கும் தெரியாமல் இருவரும் திருமணமும் செய்திருக்கிறார்கள்.‌‌ மகளின் திருமணம் குறித்து அறிந்த தாய் தனலட்சுமி எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். அக்ஷய் உடனான தொடர்பைத் துண்டித்துக்கொள்ளும்படி கூறியிருக்கிறார்.

மேலும், பூவரசி கழுத்தில் இருந்த தாலியையும் அகற்றியிருக்கிறார். பூவரசியைச் சந்திப்பதற்காக திண்டுக்கலிலிருந்து திருப்பூர் வந்த அக்ஷய், தனியார் தங்கும் விடுதியில் வாடகைக்கு ரூம் எடுத்து தங்கி, பூவரசியைச் சந்திக்க கடந்த சில நாள்களாக முயற்சி செய்து வந்திருக்கிறார்.

பூவரசியின் தந்தை பழனிசாமி இன்று காலை வேலைக்குச்‌ சென்ற நிலையில், வீட்டிற்குச் சென்ற அக்ஷய் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்.

கைது செய்யப்பட்டுள்ள அக்ஷய்
கைது செய்யப்பட்டுள்ள அக்ஷய்

தொடர் வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த அக்ஷ்ய் அரிவாளால் பூவரசி மற்றும் அவரின் தாய் தனலட்சுமி ஆகிய இருவரையும் வெட்டியிருக்கிறார். படுகாயமடைந்த இருவரும் ரத்த வெள்ளத்தில் சரிந்து நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இதனைக் கண்டு பதறிய அக்கம்பக்கத்தினர் அக்ஷயைப் பிடித்து வைத்துள்ளனர். நிகழ்விடத்திற்குச் சென்ற காவல்துறையினர், இரண்டு உடல்களையும் மீட்டு கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அக்ஷயைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காதல் விவகாரத்தில் காதலி மற்றும் அவரின் தாயை பட்டப்பகலில் வீடு புகுந்து வெட்டிக் கொன்ற நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

தூத்துக்குடி: முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு; ஆர்.பி.உதயகுமார் மீது நடவடிக்கை எடுக்க புகார்

தூத்துக்குடியில் அ.தி.மு.க ஜெயலலிதா பேரவை சார்பில் கடந்த 8-ம் தேதி நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”உலகத்திலேயே வறட... மேலும் பார்க்க

சர்ச் நிர்வாகம் யாருக்கு? ஆர்த்தடாக்ஸ் - யாக்கோபாய பாதிரியார்கள் மோதல்; 22 பேர் மீது வழக்கு

கேரள மாநிலத்தில் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த ஆர்த்தோடாக்ஸ் பிரிவினருக்கும், யாக்கோபாய பிரிவினருக்கும் இடையே சில சர்ச்களை நிர்வகிப்பது சம்பந்தமாக வழக்கு நடைபெற்று வருகிறது. சில சர்சுகள் சம்பந்தமாக கோர்ட்... மேலும் பார்க்க

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு; ஆற்காடு இளைஞனுக்கு 14 ஆண்டுகள் கடுங்காவல் சிறை

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு நகர காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 15-12-2019 அன்று 15 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைச் செய்யப்பட்டார். இது சம்பந்தமாகப் பதியப்பட்ட போக்சோ வழக்கில் சிலம்ப... மேலும் பார்க்க

கும்பகோணம்: காரில் ஆயுதங்கள் வைத்திருந்த விவகாரம்; பாஜக நிர்வாகியைக் கைதுசெய்த போலீஸ்!

கும்பகோணம், சத்யம் நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் வேதா என்கிற வேதச்செல்வம் (52). இவர் பாஜக-வில் தஞ்சாவூர் வடக்கு மாவட்டப் பொதுச் செயலாளராக இருக்கிறார். இந்நிலையில், திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையி... மேலும் பார்க்க

'கொள்ளிடம் பாலத்தில் எல்லை மீறும் ஜோடிகள்; முகம் சுளிக்கும் மக்கள்!' - தகாத செயல்களை தடுக்க கோரிக்கை

திருச்சி புறநகரையும், மாநகரையும் இணைக்கும் பாலமாக நேப்பியர் பாலம் போன்று திருச்சி கொள்ளிடம் ஆற்றில் பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலம், கடந்த 2016 -ம் ஆண்டு 88 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மறைந்த ஜெயலலித... மேலும் பார்க்க

மர்மமாக இறந்து கிடந்த சிறுத்தை; யாருக்கும் தெரியாமல் எரித்த வனத்துறையினர் - அதிர்ச்சி பின்னணி

ஈரோடு மாவட்டம் அந்தியூர் வனச் சரகம், அத்தாணி பிரிவு, மாதையன் கோயில் காப்புக்காடு பகுதியில் சுமார் 3 மாதங்களுக்கு முன்பு சிறுத்தை ஒன்று மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளது. அதன் உடல் முழுமையாக அழுகி ச... மேலும் பார்க்க