செய்திகள் :

இலங்கை தொடரில் விளையாடாமல் தாயகம் திரும்பும் சாம் கான்ஸ்டாஸ்; காரணம் என்ன?

post image

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடாமல் ஆஸ்திரேலிய இளம் வீரர் சாம் கான்ஸ்டாஸ் தாயகம் திரும்புகிறார்.

ஆஸ்திரேலிய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி காலேவில் நாளை மறுநாள் (பிப்ரவரி 6) தொடங்குகிறது.

இதையும் படிக்க: 100-வது போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் இலங்கை வீரர்!

தாயகம் திரும்பும் சாம் கான்ஸ்டாஸ்

செஃபீல்டு ஷீல்டு தொடரில் குயின்ஸ்லாந்துக்கு எதிரான போட்டியில் நியூ சௌத் வேல்ஸ் அணிக்காக விளையாடுவதற்காக ஆஸ்திரேலிய இளம் வீரர் சாம் கான்ஸ்டாஸ் தாயகம் திரும்பவுள்ளார்.

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனில் சாம் கான்ஸ்டாஸ் விளையாடப் போவதில்லை என்பதால், அவர் தாயகம் திரும்பவுள்ளதாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதையும் படிக்க: சாம்பியன்ஸ் டிராபியை வெல்ல இந்திய அணி செய்ய வேண்டியதென்ன? ரெய்னா பேட்டி!

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியிலும் சாம் கான்ஸ்டாஸ் பிளேயிங் லெவனில் இடம்பெறாதது குறிப்பிடத்தக்கது.

ரஞ்சி அரையிறுதியில் சதமடித்த முதல் கேரள வீரர்..! வரலாற்று சாதனை!

ரஞ்சி கோப்பை அரையிறுதியில் கேரள அணி வலுவான நிலையில் உள்ளது.ரஞ்சி கோப்பை அரையிறுதியில் கேரளா, குஜ்ராத் அணிகள் மோதுகின்றன. இதில் முதல் இன்னிங்ஸில் பேட்டிங் ஆடும் கேரள அணி 2ஆம் நாள் முடிவில் 418/7 ரன்கள்... மேலும் பார்க்க

தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க பாபர் அசாம்தான் சரியான நபர்: முகமது ரிஸ்வான்

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க பாபர் அசாம்தான் சரியான நபர் என பாகிஸ்தான் அணியின் கேப்டன் முகமது ரிஸ்வான் தெரிவித்துள்ளார்.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் ... மேலும் பார்க்க

மெக்காவுக்குச் சென்ற முகமது சிராஜ்..!

இந்திய கிரிக்கெட் வீரர் முகமது சிராஜ் புனிதப் பயணமாக மெக்காவுக்குச் சென்றுள்ளார். கடந்த இரவு முகமது சிராஜ் சம்சாபாத்தில் அமைந்துள்ள ராஜீவ் காந்தி தேசிய விமான நிலையத்தில் இருந்து மெக்கா புறப்பட்டதாக வி... மேலும் பார்க்க

சாம்பியன்ஸ் டிராபியை வெல்வாரா ரோஹித் சர்மா?

இந்தியாவின் கேப்டன்களில் எம்.எஸ்.தோனி மட்டுமே அனைத்து வகையான ஐசிசி கோப்பைகளையும் வென்றுள்ளார். இவருக்கு அடுத்து கேப்டனான விராட் கோலி எந்த ஒரு ஐசிசி கோப்பையையும் வெல்லவில்லை. தற்போதைய கேப்டன் ரோஹித் சர... மேலும் பார்க்க

3-வது ஒருநாள்: மூவர் அரைசதம்; ஜிம்பாப்வேவுக்கு 241 ரன்கள் இலக்கு!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் முதலில் விளையாடிய அயர்லாந்து அணி 6 விக்கெட்டுகளை இழந்து 240 ரன்கள் எடுத்துள்ளது.ஜிம்பாப்வே மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடை... மேலும் பார்க்க

எந்த பந்துவீச்சாளருக்கும் சவாலளிக்கக் கூடியவர் விராட் கோலி: பாக். வீரர்

விராட் கோலி உலகத் தரத்திலான வீரர் எனவும், எந்த பந்துவீச்சாளருக்கும் சவாலளிக்கக் கூடியவர் எனவும் பாகிஸ்தான் வீரர் ஹாரிஸ் ரௌஃப் தெரிவித்துள்ளார்.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நாளை (பிப்ரவரி ... மேலும் பார்க்க