செய்திகள் :

ஈரோடு: கொத்தடிமைகளாக இருந்த மத்தியப் பிரதேச சிறுவர், சிறுமியர்; மாவட்ட நிர்வாகம் மீட்ட பின்னணி என்ன?

post image

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகில் உள்ள ஓலப்பாளையம் பகுதியில் குறிப்பிட்ட சில தனியார் கரும்பு தோட்டங்களில் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலாளர்களைக் கொத்தடிமைகளைப் போல நடத்துவதாக மாவட்ட நிர்வாகத்திற்குப் புகார்கள் வந்துள்ளன.

Rep image AI

இதன் அடிப்படையில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள், மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த யுவராஜ் சிண்டோ என்ற நபர் 5 சிறுவர்கள், 4 சிறுமிகள் என மொத்தம் 24 நபர்களை அந்த மாநிலத்தில் இருந்து அழைத்து வந்து கரும்பு வெட்டும் பணிகளில் கொத்தடிமைகளாக ஈடுபடுத்தி வந்ததைக் கண்டறிந்து உறுதி செய்துள்ளனர்.

அந்த நபரைக் கைது செய்ததுடன் சிறுமியர் உட்பட நபர்களையும் மீட்டு வாக்கு மூலம் பெற்று வருகின்றனர்.

இது குறித்து தெரிவித்த வருவாய்த்துறையினர், "சொந்த மாநிலத்தில் இருந்து 24 நபர்களை அழைத்து வந்த இந்த நபர் அவர்களைச் சட்டவிரோதமாகக் கடுமையான பணிகளில் ஈடுபடுத்தியதுடன் முறையான ஊதியம் தராமலும் சொந்த ஊருக்குச் செல்லவிடாமல் அனுமதி மறுத்தும் வந்திருக்கிறார்.

Rep image AI

மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட யுவராஜ் சிண்டோ மீது வழக்குப்பதிவு செய்துள்ளோம். 24 நபர்களையும் திருமண மண்டபத்தில் தங்கவைத்து பராமரித்து வருகிறோம். அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.

சென்னை: ரௌடி, அவரின் நண்பன் கொடூர கொலை - அதிகாலையில் நடந்த அதிர்ச்சி!

சென்னை பல்லாவரம் அடுத்த திரிசூலம், துளசிங்க முதலியார் தெருவில் உள்ள வீட்டில் ரௌடி ஆறுமுகம் வாடகைக்கு குடியிருந்து வந்தார். அவரோடு அவரின் நண்பன் சதீஷ் என்பவரும் தங்கியிருந்தார். அதிகாலை நேரத்தில் பைக்க... மேலும் பார்க்க

தென்காசி: திருமணத்திற்கு மறுத்த காதலி; பள்ளியின் வாசலில் வைத்து கத்திரிக்கோலால் குத்திய காதலன் கைது

தென்காசியைச் சேர்ந்தவர் சொர்ணம். இவருக்கு ஏற்கெனவே திருமணமாகி கருத்து வேறுபாட்டால் கணவரைப் பிரிந்து வாழ்ந்து வருகிறார். தற்போது கடையநல்லூர் அருகேயுள்ள ஆய்குடியில் ஒரு தனியார் பள்ளியில் அலுவலக உதவியாளர... மேலும் பார்க்க

”2 வயதுக் குழந்தை முதல் 70 வயது மூதாட்டி வரை யாருக்கும் பாதுகாப்பு இல்லை” - செளமியா அன்புமணி காட்டம்

தூத்துக்குடி விமான நிலையத்தில்செய்தியாளர்களைச் சந்தித்த பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் செளமியா அன்புமணி, “கல்வி, மருத்துவம், சுகாதாரம் எனப் பல துறைகளில் பெரும் போராட்டங்களுக்குப் பிறகே பெண்கள் ஒரு நல... மேலும் பார்க்க

சிவகங்கை : கொலை முயற்சி வழக்கில் கைதான இளைஞர் உயிரிழந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் - காரணம் என்ன?

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஜீவா நகரைச் சேர்ந்​தவர் ஜெயக்​கு​மார். கோழிக்​கடை​யில் வேலை செய்​கிறார். இவரது நண்​பர் ஆதனூரைச் சேர்ந்த அழகர். இவர் உணவகத்​தில் பணிபுரி​கிறார். கடந்த 5-ம் தேதி இரவு இரு​வரு... மேலும் பார்க்க

பக்கத்துவீட்டுப் பெண்ணை அம்மா என அழைத்த மகள்; வாயிலும் கண்ணிலும் மிளகாய்த்தூள் போட்ட வளர்ப்புத் தாய்

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகில் உள்ள பிவாண்டியின் பாப்காவ் பகுதியில், தனது 3 வயது வளர்ப்பு மகளை கொடூரமாக தாக்கிய 35 வயது பெண் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக ப... மேலும் பார்க்க

மத்தியப் பிரதேசம்: 90 வயது மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை; முகமூடி அணிந்து வந்த கும்பலுக்கு வலை

மத்தியப் பிரதேச மாநிலம் கண்ட்வா மாவட்டத்தில், 90 வயது மூதாட்டி ஒருவர் முகமூடி அணிந்த நான்கு நபர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அதிர்ச்சிகரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. தனது விவசாய நிலத்தில... மேலும் பார்க்க