செய்திகள் :

உண்ணாவிரதம் இருந்து தொல்லை கொடுத்த சினிமா இயக்குநர்; வழக்கு தொடர்ந்த நடிகை மஞ்சு வாரியர்!

post image

திரைப்பட இயக்குநர் சனல்குமார் சசிதரன் இயக்கிய 'கயற்றம்' சினிமாவில் நடிகை மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடித்திருந்தார். அப்படத்தின் படப்பிடிப்பிற்குப் பிறகு, தன்னை சனல்குமார் பின்தொடர்ந்து தொல்லை செய்வதாகவும், சமூக வலைதளங்களில் தன்னைப்பற்றி அவதூறு பரப்புவதாகவும் கூறி 2022-ம் ஆண்டு மஞ்சு வாரியர் எளமக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதன்பேரில் சனல்குமார் அப்போது கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார். ​தற்போது மீண்டும் அதேபோன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார் சனல்குமார் சசிதரன். மஞ்சு வாரியர் ஒரு குறிப்பிட்ட மாபியா கும்பலின் பிடியில் சிக்கியிருப்பதாகவும், அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் கூறி இயக்குநர் சனல்குமார் சசிதரன் கடந்த சில நாட்களாகத் திருவனந்தபுரத்தில் உள்ள தலைமைச் செயலகம் முன்பாகத் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார். அவர் உண்ணாவிரதம் இருக்கும் செய்தி மறுநாடன் மலையாளி என்ற யூடியூப் தளத்தில் வெளியிடப்பட்டிருந்தது. இதையடுத்து சமூக வலைதளங்கள் வாயிலாகத் தனக்கு எதிராகத் தொடர்ந்து அவதூறு பரப்பி வருவதாகக் கூறி, மலையாளத் திரைப்பட இயக்குநர் சனல்குமார் சசிதரனுக்கு எதிராக நடிகை மஞ்சு வாரியர் எர்ணாகுளம் முன்சீப் நீதிமன்றத்தில் சிவில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட சினிமா இயக்குநர் சனல்குமார் சசிதரன்

அந்த மனுவில், இயக்குநர் சனல்குமார் சசிதரன் முதன்மை எதிர்மனுதாரராகவும், மறுநாடன் மலையாளி யூடியூப் சேனலின் ஆசிரியர் ஷாஜன் ஸ்காரியா இரண்டாவது எதிர்மனுதாரராகவும் சேர்க்கப்பட்டுள்ளனர். அவதூறு கருத்துகள் பரவுவதைத் தடுக்கும் வகையில் ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா மூன்றாவது எதிர்மனுதாரராகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மனுவை விசாரித்த நீதிமன்றம், மஞ்சு வாரியருக்கு எதிராக அவதூறான கருத்துகளையோ, பதிவுகளையோ சமூக வலைதளங்களில் வெளியிட இயக்குநர் சனல்குமார் உள்ளிட்ட எதிர்மனுதாரர்களுக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது.

மேலும், இது தொடர்பாக விளக்கம் அளிக்கக் கோரி சனல்குமார், ஷாஜன் ஸ்காரியா உள்ளிட்டோருககு சம்மன் அனுப்ப உத்தரவிட்ட நீதிமன்றம், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் 30-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

​நீதிமன்ற நடவடிக்கைக்குப் பின் மஞ்சு வாரியர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சாந்தி மாயாதேவி செய்தியாளர்களிடம் கூறுகையில், "சமூக வலைதளங்கள் இருக்கின்றன என்பதற்காக யார் மீது வேண்டுமானாலும் எதையும் பேசிவிடலாம் என்ற தவறான போக்கு அதிகரித்து வருகிறது; இது சட்டப்படி முற்றிலும் தவறானது" என்று தெரிவித்தார்.

நடிகை மஞ்சு வாரியர்

இந்த விவகாரம் குறித்து தற்போது முகநூல் பதிவில் இயக்குநர் சனல்குமார் சசிதரன் கூறியுள்ளதாவது, "மஞ்சு வாரியர் எனக்கு எதிராக தொடுத்த வழக்கின் உத்தரவு மற்றும் மனுவின் நகல்கள் எனக்குக் கிடைத்தன. பல ஊடகங்கள் அதை மானநஷ்ட வழக்கு என குறிப்பிடுகின்றன. இது ஒரு மானநஷ்ட வழக்கு அல்ல; இதில் ‘மானநஷ்டம்’ என்ற ஒரு வார்த்தை கூட இல்லை.

​நான் முகநூலில் இந்த விவகாரத்தைப் பற்றி எழுதக்கூடாது என்பதற்கான ஒரு தடை உத்தரவு கோரும் மனு மட்டுமே இது. இந்த விவகாரம் மக்களிடம் போய்ச் சேர்ந்துவிடக் கூடாது, யாரும் உண்மையை அறிந்துகொள்ள முனையக் கூடாது என்பது மட்டுமே இதன் நோக்கம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

"அங்கு எல்லாமே கார்ப்பரேட் பாணியில் நடக்கிறது, ஆனால் மலையாள..!"- பாலிவுட் குறித்து பிரித்விராஜ்

சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் பிரித்விராஜ் கலந்துகொண்டிருக்கிறார். அப்போது அவரிடம் பாலிவுட் திரையுலகம் மலையாள திரையுலகத்திலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் என்னென்ன? என... மேலும் பார்க்க

Sreenath Bhasi: "மனைவியிடம் இருந்து பிரிந்து பெற்றோருடன் வசித்து வருகிறேன்!" - நடிகர் ஶ்ரீநாத் பாஸி

'கும்பளங்கி நைட்ஸ்', 'பீஷ்ம பர்வம்', 'மஞ்சும்மல் பாய்ஸ்' உள்ளிட்ட படங்களில் நடித்த மலையாள நடிகர் ஸ்ரீநாத் பாசி, தனது மனைவி ரீது ஜக்காரியாவுடனான திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்திருப்பதை பற்றித் தெரிவித்... மேலும் பார்க்க

"அந்த அனுபவத்திற்குப் பிறகு, துல்கர் சல்மானுடன் மீண்டும் பணியாற்ற முடியாது.!" - ஐஸ்வர்யா லட்சுமி

நடிகை ஐஸ்வர்யா லட்சுமி துல்கர் சல்மானுடன் இணைந்து நடித்த 'King of Kotha' படத்தின் அனுபவம் மற்றும் ட்ரோலிங் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். ‘King of Kotha’ படம் வெளியாகுவதற்கு முன்ப... மேலும் பார்க்க

Mammootty 75: "எங்களுக்குள் போட்டி மனப்பான்மை இருந்தது இல்லை!" - மம்மூட்டியை வாழ்த்தும் மோகன்லால்

நடிகர் மம்மூட்டிக்கு இன்று 75-வது பிறந்தநாள். அதையொட்டி நடிகர் மோகன்லால், மம்மூட்டியை வாழ்த்தித் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அத்தோடு, மலையாள ஊடகத்தின் வாயிலாக மம்மூட்டிக்கு பிற... மேலும் பார்க்க

Mammootty: "சினிமாவில் 10 ஆண்டுகால இடைவெளி ஏன்?" - அடூர் கோபாலகிருஷ்ணன் பதில்

மலையாள சினிமாவின் மூத்த இயக்குநரான அடூர் கோபாலகிருஷ்ணன், 10 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மம்மூட்டியை வைத்து ‘பாதயாத்ரா’ படத்தை இயக்கியிருக்கிறார். 2016-இல் வெளியான ‘பின்னையும்’ திரைப்படத்திற்குப் பிறகு இ... மேலும் பார்க்க

Mohanlal: "நான் மோகன்லாலை திருமணம் செய்ய விரும்புவதாக வீட்டில் சொன்னப்போ..." - சுசித்ரா மோகன்லால்

நடிகர் மோகன்லாலின் மனைவி சுசித்ரா, சமீபத்தில் மலையாளத்தில் அளித்த பேட்டி ஒன்றில் மோகன்லாலுடனான தனது முதல் சந்திப்பு குறித்தும், தங்களுடைய திருமணம் குறித்து தனது தந்தை கொடுத்த எச்சரிக்கை குறித்தும் பகி... மேலும் பார்க்க