செய்திகள் :

உத்தரபிரதேசம்: நீதிமன்றத்தில் தனது மாமியாரை திருமணம் செய்து கொண்ட மருமகன்!

post image

உத்தரப்பிரதேசத்தில் பெண் ஒருவர் தனது சொந்த மருமகனையே திருமணம் செய்து அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறார். கான்பூர் அருகில் அக்பர்பூர் என்ற இடத்தை சேர்ந்த நிஷா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண் தனது சொந்த மருமகனை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இருவரும் அங்குள்ள கோர்ட்டில் தங்களது திருமணத்தை முறைப்படி பதிவு செய்து கொண்டுள்ளனர். அவர்கள் இருவரும் சேர்ந்து தங்களது திருமண சான்றுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் மற்றும் காணொலி சமூக ஊடகத்தில் பரவி வருகிறது.

புதுமணத் தம்பதியினர் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், தங்களது உறவை ஏற்றுக்கொண்டு எங்களை ஆசிர்வதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர். இருவரும் நீண்ட காலமாக நெருங்கிய தொடர்பில் இருந்ததாக உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் குடும்ப உறுப்பினர்களையும் அப்பகுதி மக்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. இச்செய்தி சமூக ஊடகத்தில் வெளியானவுடன் அது வைரலாக பரவியது.

சமூக ஊடகங்களில் நெட்டிசன்கள் சிலர் இது அவர்களது தனிப்பட்ட விருப்பம் என்று தெரிவித்துள்ளனர். மற்ற சிலர் சமூக தாக்கங்கள் குறித்து கேள்வி எழுப்பி இருக்கின்றனர். இத்திருமணம் குறித்து இது வரை போலீஸில் புகார் செய்யப்படவில்லை. அதேசமயம் இந்த செய்தி அதிகாரப்பூர்வமாகவும் உறுதிபடுத்தப்படவில்லை. அதிகாரிகள் மட்டத்திலும் இது குறித்து எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. இப்போது தாயும், மகளும் ஒரே வீட்டில் வசிக்கப்போகிறார்களா அல்லது தனித்தனியாக வசிக்கப்போகிறார்களா என்பது அனைவரின் கேள்வியாக இருக்கிறாதாம்.!

'தாயிடம் யாசகம் வாங்கணும்' - 15 வயதில் காணாமல் போனவர் 65 வயதில் சாமியாராகத் திரும்பிய சுவாரஸ்யம்!

குழந்தைகள் சிறுவயதில் பெற்றோரிடம் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு செல்வதுண்டு. அவர்கள் சில ஆண்டுகள் கழித்து திரும்ப வந்துவிடுவதுண்டு. ஒரு சிலர் அப்படி திரும்ப வராமலே போய்விடுவர். காணாமல் போய் பல சகாப்த... மேலும் பார்க்க

மும்பை தமிழர்களின் நீண்டநாள் கனவு; `தமிழ்நாடு பவன்' அமைய த.வெ.க அரசு உதவுமா?

மும்பையில் அனைத்து மாநிலங்களுக்கும் விருந்தினர் விடுதி எனப்படும் கேரளா பவன், அஸ்ஸாம் பவன் என்று இருக்கிறது. ஆனால் தமிழ்நாடு அரசு மட்டும் மும்பையில் அது போன்ற ஒன்றை இது வரை கட்டவில்லை. இதற்கு தமிழ்நாட்... மேலும் பார்க்க

தோல்வி நிரந்திரம் அல்ல! ஐஐடியில் இடம் கிடைக்காத மகன், தந்தைக்கு ரூ.55 லட்சம் கார் பரிசளித்த தருணம்!

ஐஐடி நுழைவுத் தேர்வில் தோல்வியடைந்தது, உடல் எடை அதிகரிப்பு, எதிர்காலம் குறித்த நிச்சயமற்ற தன்மை என ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பெரும் மன உளைச்சலில் இருந்த 26 வயது இளைஞர், இன்று தனது விடாமுயற்சியால் வாழ்... மேலும் பார்க்க

பல நாடுகளின் GDP-ஐ ஓவர்டேக் செய்யும் எலான் மஸ்க்! - பின்னால் இருப்பது டெஸ்லாவா, ஸ்பேஸ்எக்ஸ்?

உலகின் முதல் டிரில்லியனர் என்ற சாதனையை இதுவரை எந்தவொரு தனிநபரும் எட்டியதில்லை. ஆனால், அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லை உலகின் மிகப்பெரிய பணக்காரரான எலான் மஸ்க் விரைவில் அடையக்கூடும் என்று தற்போத... மேலும் பார்க்க

தெலங்கானா: "தனியார் பள்ளிக்கு பிள்ளைகளை அனுப்பினால் அபராதம்"- கவனம் ஈர்க்கும் கிராம மக்கள் தீர்மானம்

"தங்கள் கிராமத்திலுள்ள அனைத்துப் பிள்ளைகளும் அரசுப் பள்ளியில்தான் படிக்க வேண்டும், தனியார் பள்ளிகளில் சேர்க்கக் கூடாது" என்று மக்கள் எல்லோரும் சேர்ந்து தீர்மானம் நிறைவேற்றி உறுதிமொழி எடுத்துள்ளது, தெ... மேலும் பார்க்க

ரூ.6,000 சம்பளம் வாங்கும் அரசு பொறியாளரிடம் சிக்கிய ரூ.2 கோடி, சொத்து ஆவணங்கள்... ஒடிசா அதிர்ச்சி!

ஒடிசா மாநிலம், கந்தமால் மாவட்டத்தில் உள்ள பாலிகுடா என்ற இடத்தில் செயல்பட்டு வரும் பழங்குடியினர் மேம்பாட்டு ஏஜென்சியான ITDAயில் உதவி நிர்வாக பொறியாளராக பணியாற்றி வருபவர் பைகுந்தநாத். இவர் வருமானத்துக்க... மேலும் பார்க்க