செய்திகள் :

மும்பை தமிழர்களின் நீண்டநாள் கனவு; `தமிழ்நாடு பவன்' அமைய த.வெ.க அரசு உதவுமா?

post image

மும்பையில் அனைத்து மாநிலங்களுக்கும் விருந்தினர் விடுதி எனப்படும் கேரளா பவன், அஸ்ஸாம் பவன் என்று இருக்கிறது. ஆனால் தமிழ்நாடு அரசு மட்டும் மும்பையில் அது போன்ற ஒன்றை இது வரை கட்டவில்லை. இதற்கு தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்த அதிமுக மற்றும் திமுக அரசுகள் பெரிய அளவில் ஆர்வம் காட்டாமல் இருந்தது. அதிமுக ஆட்சிக்காலத்தில் தமிழ்நாடு பவன் கட்டுவதற்கு தேவையான நிலத்தை நவிமும்பை பகுதியில் தமிழ்நாடு அரசின் நிதியில் வாங்கினர். ஆனால் அதன் பிறகு ஆட்சிக்கு வந்த திமுக அரசு இதனை பெரிதாக கண்டுகொள்ளவில்லை.

அதோடு மும்பையில் உள்ள அரசியல்வாதிகளிடையே தமிழ்நாடு பவனை எங்கு அமைப்பது என்பதில் மாறுபட்ட கருத்து ஏற்பட்டது. இதனால் அத்திட்டம் அப்படியே கிடப்பில் உள்ளது. தற்போது தமிழ்நாட்டில் புதிய அரசு பதவியேற்று இருக்கிறது. இந்த அரசாவது மும்பையில் தமிழ்நாடு பவன் கட்ட உதவவேண்டும் என்று மும்பை மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

அவர்களின் கோரிக்கைக்கு வலுசேர்க்கும் விதமாக மகாராஷ்டிரா மாநில தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில பொறுப்பாளர் அ.அழகுசுந்தரம் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சருமான என்.ஆனந்த்தை தலைமைச் செயலகத்தில் சந்தித்து முக்கிய கோரிக்கை மனுவை வழங்கினார்.

அப்போது மராட்டிய மாநிலத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் வளர்ச்சிப் பணிகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. மேலும், மும்பையில் வாழும் புலம்பெயர்ந்த தமிழர்களின் பல்வேறு முக்கிய கோரிக்கைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. குறிப்பாக, மும்பையில் தமிழ்நாடு பவன் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது.

மனுவைப் பெற்றுக்கொண்ட அமைச்சர் என். ஆனந்த், சம்பந்தப்பட்ட (தமிழ்நாடு பவன் ) துறை அதிகாரிகளிடம் மனுவை விரைவாக பரிசீலனை செய்து, கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டது. இந்த சந்திப்பின்போது த.வெ.க. மாநில நிர்வாகிகள் வி.எஸ். ராஜகோபாலன், அண்ணா ஆலிவர் ரூபன் மற்றும் சுபாஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

முன்னதாக சென்னை பயணத்தின் போது பல்வேறு துறை சார்ந்த அமைச்சர்கள் செங்கோட்டையன், நிர்மல்குமார், வெங்கடரமணன், தமிழன் விஜய் பார்த்திபன், விஜய் பாலாஜி, சம்பத்குமார், விக்னேஷ்வரன், ஜெகதிஸ்வரி மற்றும் காந்திராஜ் ஆகியோரையும் அ. அழகுசுந்தரம் சந்தித்து மாநில வளர்ச்சி மற்றும் அமைப்பு பணிகள் குறித்து கலந்துரையாடினார்.

உத்தரபிரதேசம்: நீதிமன்றத்தில் தனது மாமியாரை திருமணம் செய்து கொண்ட மருமகன்!

உத்தரப்பிரதேசத்தில் பெண் ஒருவர் தனது சொந்த மருமகனையே திருமணம் செய்து அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறார். கான்பூர் அருகில் அக்பர்பூர் என்ற இடத்தை சேர்ந்த நிஷா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற ... மேலும் பார்க்க

'தாயிடம் யாசகம் வாங்கணும்' - 15 வயதில் காணாமல் போனவர் 65 வயதில் சாமியாராகத் திரும்பிய சுவாரஸ்யம்!

குழந்தைகள் சிறுவயதில் பெற்றோரிடம் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு செல்வதுண்டு. அவர்கள் சில ஆண்டுகள் கழித்து திரும்ப வந்துவிடுவதுண்டு. ஒரு சிலர் அப்படி திரும்ப வராமலே போய்விடுவர். காணாமல் போய் பல சகாப்த... மேலும் பார்க்க

தோல்வி நிரந்திரம் அல்ல! ஐஐடியில் இடம் கிடைக்காத மகன், தந்தைக்கு ரூ.55 லட்சம் கார் பரிசளித்த தருணம்!

ஐஐடி நுழைவுத் தேர்வில் தோல்வியடைந்தது, உடல் எடை அதிகரிப்பு, எதிர்காலம் குறித்த நிச்சயமற்ற தன்மை என ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பெரும் மன உளைச்சலில் இருந்த 26 வயது இளைஞர், இன்று தனது விடாமுயற்சியால் வாழ்... மேலும் பார்க்க

பல நாடுகளின் GDP-ஐ ஓவர்டேக் செய்யும் எலான் மஸ்க்! - பின்னால் இருப்பது டெஸ்லாவா, ஸ்பேஸ்எக்ஸ்?

உலகின் முதல் டிரில்லியனர் என்ற சாதனையை இதுவரை எந்தவொரு தனிநபரும் எட்டியதில்லை. ஆனால், அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லை உலகின் மிகப்பெரிய பணக்காரரான எலான் மஸ்க் விரைவில் அடையக்கூடும் என்று தற்போத... மேலும் பார்க்க

தெலங்கானா: "தனியார் பள்ளிக்கு பிள்ளைகளை அனுப்பினால் அபராதம்"- கவனம் ஈர்க்கும் கிராம மக்கள் தீர்மானம்

"தங்கள் கிராமத்திலுள்ள அனைத்துப் பிள்ளைகளும் அரசுப் பள்ளியில்தான் படிக்க வேண்டும், தனியார் பள்ளிகளில் சேர்க்கக் கூடாது" என்று மக்கள் எல்லோரும் சேர்ந்து தீர்மானம் நிறைவேற்றி உறுதிமொழி எடுத்துள்ளது, தெ... மேலும் பார்க்க

ரூ.6,000 சம்பளம் வாங்கும் அரசு பொறியாளரிடம் சிக்கிய ரூ.2 கோடி, சொத்து ஆவணங்கள்... ஒடிசா அதிர்ச்சி!

ஒடிசா மாநிலம், கந்தமால் மாவட்டத்தில் உள்ள பாலிகுடா என்ற இடத்தில் செயல்பட்டு வரும் பழங்குடியினர் மேம்பாட்டு ஏஜென்சியான ITDAயில் உதவி நிர்வாக பொறியாளராக பணியாற்றி வருபவர் பைகுந்தநாத். இவர் வருமானத்துக்க... மேலும் பார்க்க