செய்திகள் :

M-Sand விலை ரூ.650 டு ரூ.900: தமிழகத்தில் இன்னும் என்னென்ன கட்டுமானப் பொருள்களின் விலை உயர்வு?

post image

தமிழ்நாட்டில் தற்போது கட்டுமானப் பொருள்களின் விலை உயர்ந்துள்ளது.

விலை உயர்வு...

M Sand - ஒரு யூனிட்டின் விலை தற்போது ரூ.900 ஆக உயர்ந்துள்ளது. இதன் முந்தைய விலை ஒரு யூனிட்டிற்கு ரூ.650 - 700.

P Sand - ஒரு யூனிட்டின் விலை தற்போது ரூ.1,000 ஆக உயர்ந்துள்ளது. இதன் முந்தைய விலை ஒரு யூனிட்டிற்கு ரூ.800.

ஜல்லி - ஒரு யூனிட்டின் விலை தற்போது ரூ.600 ஆக உயர்ந்துள்ளது. இதன் முந்தைய விலை ஒரு யூனிட்டிற்கு ரூ.450 - 500.

ஜல்லி
ஜல்லி

விலை உயர்விற்கு என்ன காரணம்?

சமீபத்தில், தமிழ்நாட்டில் சட்டவிரோத குவாரிகள் சீல் வைக்கப்பட்டன. அதனால், முன்பிருந்த உற்பத்தி அளவு தற்போது இல்லை.

அதனால், M Sand-க்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதே அளவு தேவையும் ஏற்பட்டுள்ளது. இதனால், தற்போது கட்டுமானப் பொருள்களின் விலை உயர்ந்துள்ளது.