செய்திகள் :

மதுரை: யூட்யூபர் மாரிதாஸ் கைது!சென்னைக்கு அழைத்து சென்ற காவல்துறையினர்!

post image

பிரபல யூடியூபர் மாரிதாஸ். இவர் யூடியூப்பில் அரசியல் தொடர்பாக வீடியோக்களை வெளியிட்டு வந்தார். தற்போது பதவியேற்றுள்ள தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தலைமையிலான அரசு மற்றும் அமைச்சர்கள் தொடர்பாக விமர்சித்து வீடியோக்களை வெளியிட்டுவந்துள்ளார்.

இந்நிலையில் சென்னையிலிருந்து மதுரை வந்த சென்னை சைபர் கிரைம் தனிப்படை காவல்துறையினர் மற்றும் மதுரை மாநகர காவல் துறையுடன் இணைந்து மதுரை சூர்யா நகர் பகுதியில் உள்ள மாரிதாஸ் வீட்டைச் சுற்றி வளைத்தனர்.

மாரிதாஸ் வீடு

அதனைத் தொடர்ந்து பிரபல யூட்யூபர் மாரிதாஸை   காவல்துறையினர் கைது செய்து காவல்துறை வாகனத்தில் சென்னைக்கு அழைத்துச் சென்று உள்ளனர்.

காவல் துறையினர் அடுத்த கட்ட விசாரணைக்கு பின்னர் கைது தொடர்பான விவரங்கள் தெரியவரும் என கூறப்படுகிறது.

மீண்டும் மோதும் ஈரான், இஸ்ரேல்: 'இப்போது ஆரம்பித்தது ஈரான்தான்' - காரணம் என்ன?

கடந்த ஏப்ரல் மாதப் போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய நேரப்படி, இன்று ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. போர் நிறுத்தம் என்பது ஈரானில் மட்டுமல்ல... லெபனானிலும் இருக்க வேண்டும் என்பதில் மிக... மேலும் பார்க்க

`வெயிலில் நின்று வாக்குக் கேட்டோம்; அலைபேசியைப் பார்த்து வாக்களித்து விட்டார்கள்!' - அன்பில் மகேஸ்

முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி-யின் 103-வது பிறந்தநாள் விழா கருத்தரங்கம் தேவர் ஹாலில் நடைபெற்றது. இதில், பேசிய முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி,"வெற்றி தோல்விகளைக் கடந்து, நாளைய தலைமுறைய... மேலும் பார்க்க

ஈரான் போர்: `100 நாட்கள், 7000 உயிர்கள், முடிவற்ற அவலம்' - ட்ரம்ப் சொன்ன ‘விரைவான போர்’ இதுதானா?

ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் போர் தொடங்கி இன்றுடன் 100 நாட்கள் நிறைவடைகின்றன. "மிக விரைவாக முடிந்துவிடும்" என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஆரூடம் கூறிய இந்தப் போர், மத்திய கிழக்கை ரத்தக்களரியாக... மேலும் பார்க்க

'Crooked and Stupid' - NBC தொகுப்பாளரை திட்டிவிட்டு; பேட்டியின் பாதியில் கிளம்பிய ட்ரம்ப்

அமெரிக்க நேரப்படி, நேற்று முன்தினம், NBC நிகழ்ச்சியில் 'Meet the Press' நிகழ்ச்சிக்காக அமெரிக்க அதிபர் ட்ரம்பை பேட்டி எடுத்தார் அந்தச் சேனலின் தொகுப்பாளர் கிறிஸ்டன் வெல்கர். அந்தப் பேட்டியின் ஒரு பகுத... மேலும் பார்க்க

செந்தில் பாலாஜிக்கு மீண்டும் தலைவலி; பண மோசடி வழக்கை விசாரிக்க ஆளுநர் 'கிரீன்' சிக்னல்!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதுள்ள பண மோசடி வழக்கை விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதியளித்துள்ளார், தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர். 2011-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை... மேலும் பார்க்க