செய்திகள் :

"என்னால் எவ்வளவு காலம் முடியுமோ, அவ்வளவு காலம் இதில் நிலைத்திருப்பேன்" - கார் ரேஸ் குறித்து அஜித்

post image

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார் சர்வதேச அளவில் கார் பந்தயங்களில் பங்கேற்று வருகிறார்.

அந்தவகையில் பிரான்ஸில் நடந்த கார் பந்தயத்தில் பங்கேற்றிருந்தார். நேற்று நடந்த கார் பந்தயத்தில் 5 வது இடத்தை அஜித்குமாரின் அணி பிடித்திருந்தது.

இந்நிலையில் பந்தயத்திற்குப் பிறகு ஆங்கில ஊடகத்திற்கு பேட்டி கொடுத்த அஜித்குமார், " நான் தொடர்ந்து கார் பந்தயங்களில் பங்கேற்பேன். என்னால் எவ்வளவு காலம் முடியுமோ, அவ்வளவு காலம் இதில் நிலைத்திருப்பேன்.

அஜித்குமார்
அஜித்குமார்

ஒவ்வொரு ஆண்டும் கார் பந்தயத்தில் பங்கேற்க வேண்டும் என்பதே என் விருப்பம். கார் பந்தயத்தில் எனக்குள்ள ஈடுபாட்டின் காரணமாக, கடந்த 3 ஆண்டுகளாக நான் துபாயில் வசித்து வருகிறேன்.

ஆனால் என் குடும்பத்தினர் இந்தியாவில் இருக்கிறார்கள். பந்தயங்களில் நான் தொடர்ந்து பங்கேற்க வேண்டிய பொறுப்புகள் இருப்பதால், தற்போது பந்தயப் பயிற்சிகளுக்காக அதிக நேரத்தைச் செலவழித்து வருகிறேன்.

நாங்கள் இப்போது எங்களுடைய 2027-ஆம் ஆண்டிற்கான பந்தயத் திட்டத்தை தயார் செய்து கொண்டிருக்கிறோம்" என்று கூறியிருக்கிறார்.

''அப்படி செய்திருந்தால் 'அபூர்வ சகோதரர்கள்' தோல்வி படமாகியிருக்கும்!" - நினைவுகள் பகிரும் கமல்ஹாசன்

94-வது வயதில் இயக்குநர் சிங்கீதம் ஸ்ரீனிவாசராவ் 'சிங் கீதம்' என்ற தெலுங்குப் படத்தை எடுத்து முடித்திருக்கிறார். இத்திரைப்படம் வருகிற ஜூன் 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் ப்ரீ ரிலீஸ... மேலும் பார்க்க

'11-ம் தேதி காலை 9.30 மணி' - திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடுகிறாரா ராகவா லாரன்ஸ்?!

திருச்சி கிழக்குத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அந்தத் தொகுதியின் இடைத்தேர்தலில் தவெக சார்பாக நடிகர் ராகவா லாரன்ஸ் போட்டியிடப் போவதாகப் தகவல்கள் பேசப்... மேலும் பார்க்க

Ravi Mohan: ``பாதிக்கப்பட்ட அனைவரிடமும்..!" - மன்னிப்பு கேட்ட நடிகர் ரவி மோகன்!

நடிகர் ரவிமோகனுக்கும் அவரது மனைவி ஆர்த்திக்கும் இடையே ஏற்பட்ட திருமண கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களது விவாகரத்து கோரிய வழக்கு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் ... மேலும் பார்க்க

லதா ரஜினிகாந்த் 'மக்கள் மேடை' இயக்கத்தை நேற்றுதான் தொடங்கினாரா? - உண்மை என்ன?

நடிகர் ரஜினிகாந்தின் மனைவியான லதா ரஜினிகாந்த் 'மக்கள் மேடை' என்கிற பெயரிலான இயக்கம் குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில் பேசியிருந்த அவர், "எங்களுடைய இயக்கம் மூலமாக இந்த மாநிலத்து... மேலும் பார்க்க

நூறு சாமி: "சென்னையை விட்டு போயிருவேன்; இடம் தேடிட்டிருக்கேன்" - என்ன சொல்கிறார் விஜய் ஆண்டனி?

இயக்குநர் சசி இயக்கத்தில், விஜய் ஆண்டனி, ஸ்வாசிகா, அஜய் திஷன், லிஜோ மோல் ஜோஸ், கருணாஸ், முனிஷ்காந்த் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'நூறு சாமி'.இப்படம் ஜூன் 19 ஆம் தேதி வெளியாக இருக்க... மேலும் பார்க்க

What To Watch: 'பரிமளா & கோ' டு 'பேட்ரியாட்' வரை - இந்த வாரம் வெளியான படங்கள் என்னென்ன?

இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடி-யில் வெளியாகியிருக்கும் படங்கள் இவைதான்!பரிமளா அண்ட் கோ - தமிழ்பாண்டிராஜ் இயக்கத்தில் ஜெயராம், ஊர்வசி, மிஷ்கின், யோகி பாபு, சாண்டி, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, சந்தோஷ் ச... மேலும் பார்க்க