தூத்துக்குடி – கொழும்பு இடையே நேரடி கப்பல் கண்டெய்னர் சேவை தொடக்கம்! வாரம் 4 முற...
'Crooked and Stupid' - NBC தொகுப்பாளரை திட்டிவிட்டு; பேட்டியின் பாதியில் கிளம்பிய ட்ரம்ப்
அமெரிக்க நேரப்படி, நேற்று முன்தினம், NBC நிகழ்ச்சியில் 'Meet the Press' நிகழ்ச்சிக்காக அமெரிக்க அதிபர் ட்ரம்பை பேட்டி எடுத்தார் அந்தச் சேனலின் தொகுப்பாளர் கிறிஸ்டன் வெல்கர்.
அந்தப் பேட்டியின் ஒரு பகுதியில், 'கலிஃபோர்னியா தேர்தலின் வாக்கு எண்ணிக்கை' குறித்து பேச்சு வந்தது.
ட்ரம்ப் உட்பட பல குடியரசுக் கட்சியினர் கலிஃபோர்னியா தேர்தல் வாக்கு எண்ணிக்கை தாமதமாகி வருவதற்கு 'மோசடி' தான் காரணம் என்ற விமர்சனத்தை முன்வைக்கின்றனர்.

கடந்த ஜூன் 2-ம் தேதி,கலிஃபோர்னியாவில் தேர்தல் நடைபெற்றது.
வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் குடியரசுக் கட்சி அதிக வாக்குகளைப் பெற்று வந்தது. அதன் பின், மெயில் வாக்குகள் எண்ணிக்கை தொடங்கிய சில நாள்களில், குடியரசுக் கட்சியின் வாக்குகள் எண்ணிக்கை குறைந்தது.
காலிஃபோர்னியா தேர்தல் முதல் நாளில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை அன்றே வெளியிடப்பட்டது.
இந்தத் தேர்தலில் நாளை (ஜூன் 9) வரை மெயில் மூலம் வாக்களிக்கலாம். அந்த வாக்குகளின் எண்ணிக்கை அவ்வப்போது வெளியிடப்படும்.
அதில் தான் குடியரசுக் கட்சியின் வாக்குகள் குறைந்துள்ளது என்று ட்ரம்ப் குற்றம் சாட்டுகிறார்.
இந்தக் குற்றச்சாட்டிற்கான ஆதாரத்தை கிறிஸ்டன் வெல்கர் பேட்டியில் கேட்டப்போது, ட்ரம்ப் கோபமடைந்து அவரை முட்டாள் (Crooked and Stupid) என்று திட்டிவிட்டு, பேட்டியில் இருந்து வெளியேறி இருக்கிறார்.


















