செய்திகள் :

`அவரின் அந்த பழக்கம்தான் அவர் நம்மை விட்டு சீக்கிரம் பிரிய காரணம்!' - இயக்குநர் ஓபிலி என்.கிருஷ்ணா

post image

மல்வுட் நடிகரான சலீம் குமார், கடந்த 6ம் தேதி மாரடைப்பினால் காலமானார். அவருக்கு வயது 57. மிமிக்ரி கலைஞராக தனது வாழ்க்கையை ஆரம்பித்தவர் குணச்சித்திரம், காமெடி என பன்முகக்கலைஞனாக புகழ்பெற்றார். 'ஆதாமிண்டே மகன் அபு'விற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது இவருக்கு வழங்கப்பட்டது. தமிழில் 'மரியான்', 'நெடுஞ்சாலை' ஆகிய படங்களில் நடித்திருக்கிறார் சலீம் குமார். உடல்நலக்குறைவினால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் மாரடைப்பினால் காலமானார். நேற்று ஞாயிற்றுகிழமை சலீம் குமாரின் உடலை கேரள அரசு மரியாதையுடன் தகனம் செய்திருந்தனர். 1990 களில் மலையாளப்பட உலகில் நடிக்கத் தொடங்கியிவர், 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

'நெடுஞ்சாலை' படத்தில் சலீம் குமாரின் நினைவுகள் குறித்து இயக்குநர் ஓபிலி என்.கிருஷ்ணாவிடம் கேட்டோம். நெகிழ்ச்சியுடன் பேச ஆரம்பிக்கிறார்.

சலீம் குமார்

`` `நெடுஞ்சாலை' கதையில் மாட்டு சேகர் கேரக்டரை எழுதினதும், என் மனதில் வந்து நின்றவர் சலீம்குமார் தான். ஏன்னா, அவர் நடிச்ச மலையாளப் படங்கள் நிறைய பாத்துருக்கேன். 'நெடுஞ்சாலை'க்காக அவரிடம் நடிக்கக் கேட்கலாம் என்று முடிவு செய்ததும் போனில் அவரை தொடர்பு கொண்டேன். அந்த சமயத்தில் அவர் டெல்லியில் தேசிய விருது பெறுவதற்காக சென்றிருந்தார் போல. எனக்கு அது தெரியாது. அவருக்கு போன் செய்ததும், 'படத்தின் ஒன்லைனை போனில் சொல்றீங்களா?' என கேட்டார்.

நான் உடனே கதையின் லைனை சொன்ன விநாடியே 'கேரக்டர் ரொம்ப பிடிச்சிருக்குது. பண்றேன்.'னு சொல்லிட்டார். நான் அவர்கிட்ட நீங்க பெரிய சம்பளம் வாங்குவீங்கனு கேள்விப்பட்டிருக்கேன். எங்களால அவ்வளவு கொடுக்க முடியுமானு தெரியல.. என்றதும், 'பணம் ஒரு பிரச்னை இல்லை. பாத்துக்கலாம்..'னு சொல்லி வந்தார். அதாவது முதல்நாள் டெல்லியில் இருந்தவர், மறுநாளே நேராக கதை கேட்பதற்காக வந்துவிட்டார்.

நெடுஞ்சாலை படத்தில்

முதல்நாள் படப்பிடிப்பு நல்லா ஞாபகம் இருக்குது. அவருக்கு சுத்தமா தமிழ் தெரியாது. மலையாளம் மட்டும்தான் பேசுவார். அன்னிக்கு நிறைய பேர்களோட அவருக்கு காம்பினேஷ் சீன். அவருக்கு மட்டும் தான் தமிழ் தெரியாது. அவர் என் டீம் கிட்ட, 'எனக்கு மட்டும்தான் மொழி தெரியாது. சரியா நடிக்கலைனா என்னால ஒன்மோர் போயிடக்கூடாது. அதனால சீனை சரியா செய்திடணும்'னு சின்னதொரு பதட்டத்துல இருந்தவர், அதன்பின் பக்காவாக ரிகர்சல் எடுத்துவிட்டு ஷாட்டுக்கு வந்தார். அந்த ஷாட்டில் அன்னிக்கு அவர் மட்டும் தான் சரியாக செய்திருந்தார். மத்தவங்க சொதப்பினாங்க. 'தமிழ்ல என்னால பண்ணமுடியும்'னு பெரிய நம்பிக்கை வந்திடுச்சு. 'இனிமேல் கலக்கிடுறேன் சார்'.

நெடுஞ்சாலையில் சலீம்

அதைப் போல ஒரு சீனில் ஆரி அவரை எட்டி உதைக்கணும். அப்படி உதைக்கும் போது அவர் ஒரு மூட்டை மேல விழணும். ரிகர்சல் எல்லாம் சரியாக இருந்ததால், டேக் போயிட்டோம். அப்போ தான் அந்த சம்பவம் நடந்தது. ஆரி உதைக்கும் போது அவர் ஸ்லிப் ஆனதுல சலீம் சார் மூக்கு மேல பட்டுடுச்சு. மொத்த யூனிட்டும் பதறிட்டோம். ஏன்னா, தவறுதலாக அவர் தெரியாமல் விழுந்திருந்தாலும் அவர் மூக்கில் இருந்து ரத்தம் வழியுது. சேலம் பக்கத்துல ஒரு இண்டீரியர் இடத்துல தான் படப்பிடிப்பு நடந்தது. பக்கத்துல மருத்துவமனை இல்லாததால, டாக்டர் கிட்ட போயிட்டு வரலாம்னு அவர் கூப்பிடுறோம். ஆனால், அவர் 'ஒண்ணுமில்லை. ஐஸ் கட்டி மட்டும் கொண்டாங்க'னு கேட்டு வாங்கி, காயத்தை சரிசெய்துக்கிட்டார். அடுத்த பத்து நிமிஷத்துல ஷாட்டுக்கு ரெடியாகி வந்து நின்னார். அப்படி ஒரு அர்ப்பணிப்பு கொண்டவர்.

ஓபிலி என். கிருஷ்ணா - 'பத்து தல'வில்

ஒரு நடிகராக மட்டுமல்ல. ஒரு மனிதராகவும் நல்ல குணம் உடையவர். ஒரு நல்ல நடிகரை இயக்கும் போது, ஒரு இயக்குநருக்கு ஒரு சௌகரியமான சூழல் அமையும். அது எனக்கு புரிஞ்சது. ஏன்னா, 'இப்படி செய்துக்கலாமா? அப்படி பண்ணலாமா? இதை பண்ணலாமா?' எனக் கேட்டு நடிப்பில் நிறைய ஆப்ஷன்ஸ் கொடுப்பார். அவர் அப்படி கொடுக்கலைனா, ஒரு இயக்குநரின் மனசுல என்ன இருக்கோ, அதை கொண்டு வர மெனக்கிட்டிட்டு இருப்போம். ஆனா, சலீம் சார், நாம அவர்கிட்ட கேட்டதை செய்துவிட்டு, இதே விஷயத்தை இப்படி மாத்தி பண்ணிக்கலாமா?னு அந்த கேரக்டரின் ஆழத்தை நமக்கு உணர்த்திடுவார். அவரை இயக்கிய எல்லா சீன்களிலும் இது நடந்தது.

ஓபிலி என்.கிருஷ்ணா

படப்பிடிப்பில் அவர்கிட்ட நான் ஒரு வேண்டுகோள் வச்சுக்கிட்டே இருப்பேன். ரொம்ப அதிகமாக புகை பிடிப்பார். நீங்க ரொம்ப அருமையா நடிக்குறீங்க. இந்த புகைப்பழக்கத்தை மட்டும் விட்டுடுங்களேனு சொல்லுவேன். சிரிச்சுக்கிட்டே கேட்டுக்குவார். 'புகையை நானும் விட்டுடலாம்னு தான் முயற்சி செய்துக்கிட்டிருக்கேன்'னு சொல்லுவார். அவரின் அந்த பழக்கங்கள் தான் அவரை நம்மை விட்டு சீக்கிரம் பிரிய காரணம்னு நினைக்கிறேன்! ஒரு நல்ல நடிகனை நாம இழந்துட்டோம்னு ஆத்மார்த்தமாக சொல்றேன். என்னோட அடுத்த படத்துல அவரை நடிக்க வைக்கலாம்னு எண்ணியிருந்தேன். அந்த எண்ணம் நிறைவேறாமல் போனது வருத்தமா இருக்கு.'' குரல் உடைந்து பேசினார் கிருஷ்ணா.

Nooru Saami: "'பிச்சைக்காரன்' வெற்றியால்தான் சொந்த வீடே வாங்கினேன்!" - இயக்குநர் சசி

இயக்குநர் சசி இயக்கியிருக்கும் 'நூறு சாமி' திரைப்படம் ஜூன் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. விஜய் ஆண்டனி, அவருடைய தங்கை மகன் அஜய் திஷான், ஸ்வாசிகா உள்ளிட்டோர் இப்படத்தின் முதன்மை கதாபாத்திரங்கள... மேலும் பார்க்க

"என்னால் எவ்வளவு காலம் முடியுமோ, அவ்வளவு காலம் இதில் நிலைத்திருப்பேன்" - கார் ரேஸ் குறித்து அஜித்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார் சர்வதேச அளவில் கார் பந்தயங்களில் பங்கேற்று வருகிறார். அந்தவகையில் பிரான்ஸில் நடந்த கார் பந்தயத்தில் பங்கேற்றிருந்தார். நேற்று நடந்த கார் பந்தயத்தில் 5 வது ... மேலும் பார்க்க

''அப்படி செய்திருந்தால் 'அபூர்வ சகோதரர்கள்' தோல்வி படமாகியிருக்கும்!" - நினைவுகள் பகிரும் கமல்ஹாசன்

94-வது வயதில் இயக்குநர் சிங்கீதம் ஸ்ரீனிவாசராவ் 'சிங் கீதம்' என்ற தெலுங்குப் படத்தை எடுத்து முடித்திருக்கிறார். இத்திரைப்படம் வருகிற ஜூன் 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் ப்ரீ ரிலீஸ... மேலும் பார்க்க

'11-ம் தேதி காலை 9.30 மணி' - திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடுகிறாரா ராகவா லாரன்ஸ்?!

திருச்சி கிழக்குத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அந்தத் தொகுதியின் இடைத்தேர்தலில் தவெக சார்பாக நடிகர் ராகவா லாரன்ஸ் போட்டியிடப் போவதாகப் தகவல்கள் பேசப்... மேலும் பார்க்க

Ravi Mohan: ``பாதிக்கப்பட்ட அனைவரிடமும்..!" - மன்னிப்பு கேட்ட நடிகர் ரவி மோகன்!

நடிகர் ரவிமோகனுக்கும் அவரது மனைவி ஆர்த்திக்கும் இடையே ஏற்பட்ட திருமண கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களது விவாகரத்து கோரிய வழக்கு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் ... மேலும் பார்க்க

லதா ரஜினிகாந்த் 'மக்கள் மேடை' இயக்கத்தை நேற்றுதான் தொடங்கினாரா? - உண்மை என்ன?

நடிகர் ரஜினிகாந்தின் மனைவியான லதா ரஜினிகாந்த் 'மக்கள் மேடை' என்கிற பெயரிலான இயக்கம் குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில் பேசியிருந்த அவர், "எங்களுடைய இயக்கம் மூலமாக இந்த மாநிலத்து... மேலும் பார்க்க