செய்திகள் :

'உப்பு புளி காரம்' சீசன் 2 எதனால் 'ப்ரதர்ஸ் & சிஸ்டர்ஸ்' என மாற்றப்பட்டது? - ராஜ் ஐயப்பா பேட்டி

post image

ஜியோ ஹாட்ஸ்டாரில் 'ப்ரதர்ஸ் & சிஸ்டர்ஸ்' சீரிஸ் நேற்று முதல் ஒளிபரப்பாகத் தொடங்கியிருக்கிறது. 100 எபிசோடுகள் கொண்ட 'Long Format' வெப் சீரிஸாக இது வெளிவரவிருக்கிறது.

நடிகர் போஸ் வெங்கட், மெட்டி ஒலி காயத்ரி, ராஜ் ஐயப்பா எனப் பலரும் இந்த சீரிஸில் நடிக்கிறார்கள். சீரிஸ் வெளிவரத் தொடங்கியிருக்கும் நிலையில் நடிகர் ராஜ் ஐயப்பாவுடன் பேட்டி கண்டோம்.

Brothers & Sisters Series
Brothers & Sisters Series

நம்மிடையே பேசிய ராஜ் ஐயப்பா, "'ப்ரதர்ஸ் & சிஸ்டர்ஸ்' சீரிஸ் ரொம்பவே ஜாலியாகப் போகும். மூன்று சகோதரிகள் மற்றும் ஒரு தம்பி. இவர்களைச் சுற்றி நடக்கிற விஷயங்கள்தான் இந்த 100 எபிசோட் கொண்ட சீரிஸின் கதை.

இதுல நானும் என்னுடைய தங்கச்சி நம்ரிதாவும் சேர்ந்து நடிச்சிருக்கோம். இப்படியான சீரிஸ் தொடங்கப்போவதாகவும், அதில் நான் நடிக்கிறேன்னும் இயக்குநர் சிதம்பரம் எனக்கு முன்னாடியே சொல்லிட்டார்.

பிறகு ஆடிஷன் சமயத்துல அவர் நம்ரிதாவையும் ஒரு கேரக்டருக்கு ஆடிஷன் வரச் சொல்லிக் கேட்டார். அன்னைக்கு நாங்க ரெண்டு பேரும் சேர்ந்துதான் ஆடிஷனுக்குப் போனோம். இன்னொரு ஸ்பெஷலான விஷயம் என்னன்னா, என்னுடைய அப்பாதான் (நடிகர் பானு ப்ரகாஷ்) இந்த சீரிஸிலும் எனக்கு அப்பாவாக நடிக்கிறார்.

நாங்க மூணு பேரும் சேர்ந்து நடிக்கிறது ரொம்பவே ஸ்பெஷல்! அம்மாவும் எங்களை ஒன்றாகப் பார்க்கிறதுக்கு ஆசையோட காத்திருக்காங்க." என்றவரிடம், "இந்த சீரிஸ் 'உப்பு புளி காரம்' சீரிஸின் 2-வது சீசனாக தொடங்கப்பட்டது என்றார்களே, அது உண்மையா? எதனால் தலைப்பு மாற்றப்பட்டது?" எனக் கேட்டோம்.

Raj Ayyapa Family
Raj Ayyapa Family

அவர், "ஆமா, தொடங்கப்பட்டதுமே பலர் இது 'உப்பு புளி காரம் 2'-வான்னு கேட்டாங்க. ஆனா, இது ஒரு குடும்பத்திலிருக்கும் ப்ரதர்ஸ் & சிஸ்டர்ஸ்-களின் கதை. உப்பு புளி காரம்'ங்கிற டைட்டில் மற்ற மொழிகள்ல அதற்கான ரீஜனல் ரீச் கிடைக்காது. 'ப்ரதர்ஸ் & சிஸ்டர்ஸ்'ங்கிற டைட்டில் பொதுவானதாக இருக்கும். எல்லோருக்கும் போய் சேரும்ங்கிறதுனாலதான் இந்த டைட்டில் மாற்றம்" என்றார்.

Double Occupancy Review: 6-6 ஆண்; 6-6 பெண் சுவாரஸ்யமான ஒன்லைன் - படமாக பாஸாகிறதா?

பல வருடங்களாகக் குழந்தையில்லாமல் தவிக்கிறது ஒரு தம்பதி (போஸ் வெங்கட் - வினோதினி). கடவுளை நம்பாத போஸ் வெங்கட், கைகூப்பி கடவுளை வணங்கி வேண்டுகிறார். கடவுளின் அருளால் ஆண் குழந்தை பிறக்கிறது. ஆனால், பிறந்... மேலும் பார்க்க

Habeebi Review: தமிழ் இஸ்லாமிய வாழ்வியல் பின்னணியில் ஓர் அழகான காதல் கதை; ஆனால், படமாகக் கவர்கிறதா?

தென் தமிழகத்தில் தலைமுறை தலைமுறையாக நெசவுத் தொழிலை யூசுஃப் கானின் (கஸ்தூரி ராஜா) குடும்பம் கவனித்து வருகிறார்கள். கைத்தறித் தொழில் நலிவடைந்து வருவதால், யூசுஃப் கானின் தம்பி வளைகுடா நாட்டிற்குப் பணிக்க... மேலும் பார்க்க

Bharathiraja: "துயரத்தில் பங்கு கொண்ட அனைவருக்கும் நன்றி" - பாரதிராஜா மனைவி சந்திர லீலா

இயக்குநர் இமயம் பாரதிராஜா நேற்று முன்தினம் (ஜீன்.10) உடல்நலக் குறைவால் காலமானார். அவரது உடல் நேற்று சொந்த ஊரான தேனி மாவட்டத்தில் உள்ள காட் ரோட்டில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிலைய... மேலும் பார்க்க

பாரதிராஜா: ``உங்கள் மகனை உங்கள் மடியில் ஒப்படைத்துவிட்டோம்" - கவிஞர் வைரமுத்து உருக்கம்

இயக்குநர் இமயம் பாராதிராஜா மறைந்த நிலையில், அவரின் உடல் அவரின் சொந்த கிராமத்தில் அரச மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கவிஞர் வைரமுத்து தன் எக்ஸ் பக்கத்தில்,``பிறந்த... மேலும் பார்க்க

What To Watch: 'கருப்பு', 'டபுள் ஆக்குபன்சி', ஹபீபி' - இந்த வார ரிலீஸ்கள் என்னென்ன?

இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடி-யில் வெளியாகியிருக்கும் படங்கள்.டபுள் ஆக்குபென்சி - தமிழ்குஷ்பு தயாரிப்பில், அறிமுக இயக்குநரான அஸ்வின் கந்தசாமி இயக்கத்தில் சந்தோஷ், ரேஷ்மா வெங்கடேஷ், சம்யுக்தா விஸ்... மேலும் பார்க்க

Bharathiraja: 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் பாரதிராஜா உடல் நல்லடக்கம் | Photo Album

பாரதிராஜாவுக்கு மக்கள் மரியாதைபாரதிராஜாவுக்கு மக்கள் மரியாதைபாரதிராஜாவுக்கு மக்கள் மரியாதைபாரதிராஜாவுக்கு மக்கள் மரியாதைபாரதிராஜாவுக்கு மக்கள் மரியாதைபாரதிராஜாவுக்கு மக்கள் மரியாதைபாரதிராஜாவுக்கு மக்க... மேலும் பார்க்க