செய்திகள் :

"என் மகள் அனந்திதா, சுந்தர்.சி சார் மாதிரி!"- பெருமைப்பட்ட தாய் குஷ்பு; கண்கலங்கிய மகள்!

post image

சுந்தர்.சியின் 'அவ்னி மூவிஸ்' தயாரிப்பில் உருவாகியிருக்கிற 'டபுள் ஆக்குபன்சி' திரைப்படம் ரிலீஸுக்குத் தயாராகி வருகிறது.

சுந்தர்.சி மற்றும் குஷ்புவின் இளைய மகளான அனந்திதா சுந்தர் இப்படத்தில் கிரியேட்டிவ் தயாரிப்பாளராகப் பணியாற்றியிருக்கிறார்.

Double Occupancy Poster
Double Occupancy Poster

சந்தோஷ், ரேஷ்மா வெங்கடேஷ், சம்யுக்தா, வினோத் கிஷன் ஆகியோர் நடித்திருக்கும் இப்படத்தை அஸ்வின் கந்தசாமி என்பவர் இயக்கியிருக்கிறார். இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்றைய தினம் சென்னையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் குஷ்பு பேசுகையில், "பசங்களுக்கு இப்போ அட்வைஸ் தேவையில்லை. அவங்ககிட்ட இருந்து நம்மதான் கத்துக்கணும். நம்மகிட்ட நிறைய பழைய சிந்தனைகள் இருக்கும். இன்னைக்கு இருக்கிற இளைஞர்கிட்ட கேட்டுத் தெரிஞ்சுக்க வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கு. என்னுடைய மூத்த மகள் அவந்திகா சுந்தர் மலையாள திரைப்படத்துல நடிச்சிட்டு இருக்காங்க.

அதைத்தாண்டி தமிழ்ல ரெண்டு படங்கள்ல கமிட் ஆகியிருக்காங்க. தினமும் கதைக் கேட்டுட்டு இருக்காங்க. இந்த விஷயங்கள் தாயாக என்னை பெருமைப்பட வைக்குது. இரண்டாவது மகள் அனந்திதா சுந்தர் தயாரிப்பு நிறுவனத்தின் பணிகளை கவனிச்சிட்டு இருக்காங்க.

இந்த 'டபுள் ஆக்குபன்சி' படத்திற்குப் பிறகு 'மீசைய முறுக்கு 2' படத்தையும் அவங்க தயாரிச்சு முடிச்சிட்டாங்க. தினமும் தயாரிப்பிற்காக கதைகள் கேட்கிறாங்க. என்னுடைய மகள்கள் சரியான பாதையில போவதை நினைச்சு நானும் சுந்தர்.சி சாரும் ரொம்ப பெருமையாக உணர்கிறோம்.

Khushboo
Khushboo

எனக்கு இந்த நிகழ்வு ரொம்பவே முக்கியமான தருணம். என்னுடைய மகள் அவந்திகா சுந்தரின் பெயரை 'டபுள் ஆக்குபன்சி' படத்தின் போஸ்டர்ல பார்க்கும்போது ரொம்ப பெருமையாக இருக்கு. 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்திலையும் அவங்க வேலை பார்த்திருக்காங்க.

கடைசில ரோலிங் கிரெடிட்ஸ்ல எல்லோருடைய பெயரையும் போட்டது என்னுடைய மகள்தான். எல்லோருடைய பெயரை போட்டவங்க, தன்னுடைய பெயரை போடுறதுக்கு மறந்துட்டாங்க. 'அனந்திதா அவங்களுடைய பெயரை போடுறதுக்கு மறந்துட்டாங்க'னு மணி ரத்னம் சாரும் சொல்லி காண்பிச்சார்.

சுந்தர் சார்கிட்ட எப்படியான ஒரு தலைமைப்பண்பு இருக்கோ, அதுபோல என்னுடைய மகள் அனந்திதாவுக்கும் இருக்கு. அவங்க அப்படியே சுந்தர் சார் மாதிரிதான். தன்னம்பிக்கையும், அறிவுத்திறனும் கொண்டவங்க அனந்திதா" எனப் பேசினார்.

"முதல்வர் விஜய்க்கு திரைத்துறையினர் அழுத்தம் கொடுக்கக் கூடாது" - இயக்குநர் ஆர்.வி. உதயகுமார்

வட மஞ்சுவிரட்டு விளையாட்டை மையமாக வைத்து புதுமுக இயக்குநர் சங்கிலி இயக்கத்தில் அசோக் குமார், யாழினி ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வட மஞ்சுவிரட்டு’.இப்படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று (... மேலும் பார்க்க

"'இளையராஜா அனாதை ஆகிவிட்டாரு'ன்னு ஏன் எழுதணும்?" - கங்கை அமரன் காட்டம்

திரைக்கலைஞர் கங்கை அமரன் எழுதியுள்ள 'உயிரிணையே' ஆல்பம் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று (மே.25) நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய கங்கை அமரன், "பத்திரிகையாளர்கள் நல்லதை மட்டும் எழுதுங்கள். ... மேலும் பார்க்க

"மொத 'நம்ம சேர்ந்து டைரக்ட் பண்ணுவோம்'னுதான் RJ Balaji சொன்னார்" - 'கருப்பு' ரைட்டர் சரவணன் பேட்டி

'கருப்பு' படத்திற்கு மக்கள் பெரும் வரவேற்பைக் கொடுத்திருக்கிறார்கள். படம் வெளியாகி இரண்டாவது வாரத்திலும் 'ஹவுஸ்ஃபுல்'-ஆகக் காட்சிகள் நிறைந்திருக்கின்றன. 'கருப்பு' திரைப்படம் குறித்தான அறிவிப்பு கடந்த ... மேலும் பார்க்க

`புது படங்களுக்கு தினசரி ஐந்து காட்சிகள் திரையிட அனுமதி!' - திரைத்துறைக்கு முதல்வர் கொடுத்த `ட்ரீட்'

திரைத்துறையைச் சேர்ந்த பலரும் கடந்த மே 16-ம் தேதி முதல்வர் விஜய்யை சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்திருந்தனர். உள்ளாட்சி வரி ரத்து, திரைப்படம் வெளியான சில நாட்களுக்கு தினசரி ஐந்து காட்சிகளுக்கு... மேலும் பார்க்க