செய்திகள் :

`முதல்வரே பல்கலைக்கழகங்களின் வேந்தர் என்ற நிலைப்பாட்டை பின்பற்ற வேண்டிய கட்டாயம் இல்லை' - விஸ்வநாதன்

post image

இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு மதுரை தமுக்கம் தபால் தந்தி அலுவலகம் அருகே அமைந்துள்ள ஜவஹர்லால் நேரு அவர்களின் திருவுருவச்சிலைக்கு உயர் கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அமைச்சர் விஸ்வநாதன்," ரிசர்வ் வங்கியில் இருந்து நாசா தொடங்கி அனைத்து நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், ஐஐடி போன்ற இந்தியாவில் உள்ள அனைத்து நிறுவனங்களும் நேரு அவர்களால் கட்டமைக்கப்பட்டது.

மருத்துவம், பொறியியல் தேர்வில் தமிழ் மொழி இடம்பெறாதது அது டெக்னிக்கல் காரணம்.

இது தொடர்பாக உயர்கல்வித்துறை அதிகாரிகளுடன் கலந்து பேசவிருக்கிறேன். அதில் முதலமைச்சர் வழிகாட்டுதன்படி செயல்படவிருக்கிறோம் முதலமைச்சரின் முடிவுக்கு காத்திருக்கிறோம், கண்டிப்பாக இது சம்பந்தமான கேள்விக்கு உயர்கல்வித்துறை அமைச்சகத்தில் உள்ள அதிகாரிகளிடம் கலந்து பேசவுள்ளேன்.

ராகுல் காந்தி - மேலூர் விஸ்வநாதன் -
ராகுல் காந்தி - மேலூர் விஸ்வநாதன் -

முதலமைச்சரே பல்கலைக்கழகங்களின் வேந்தர் என்ற நிலைப்பாடு முந்தைய அரசினுடையது. எங்கள் அரசு பொறுப்பேற்ற பிறகு கொள்கை முடிவுகளை முதலமைச்சர் எடுப்பார். கடந்த அரசின் முறைகளை பின்பற்ற வேண்டிய கட்டாயம் எங்களுக்கு கிடையாது.

எங்கள் அரசு அமைந்த பிறகு முதலமைச்சர் விஜய் கண்டிப்பாக அமைச்சர்கள், அரசு உயரதிகாரிகள் உயர் கல்வி அமைச்சகத்தின் வழிகாட்டுதலை நெறிமுறைபடுத்துவார். முதலமைச்சர் வழிகாட்டுதல்படி விரைவில் அறிவிப்புகள் வரும்.

ஒரு கட்சியில் இருந்து அந்த கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் விருப்பத்திற்கு ஏற்றவாறு தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு விரும்பும் கட்சியில் இணைந்து மீண்டும் மக்களை சந்திக்கப் போகிறார். மீண்டும் மக்கள் அவர்களை தேர்ந்தெடுத்து சட்டமன்றத்திற்கு வர விரும்புகிறார்கள். இது ஜனநாயகத்தின் விரோதமாக இல்லை, என்னை பொறுத்தமட்டிலும் இதனை குதிரை பேரமாக கருதவில்லை

மாணிக்கம் தாக்கூர் எம்.பி
மாணிக்கம் தாக்கூர் எம்.பி

நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாணிக்கம் தாகூர் கருத்தும், ஜோதிமணியின் கருத்தும் முரண்பட்ட கருத்தாகவே நான் பார்க்கிறேன். காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு என்பது மாணிக்கம் தாக்கூருடையதுதான். மாணிக்கம் தாக்கூரின் கருத்து என்னுடைய கருத்து.

மேகதாது அணையில் கர்நாடக அரசு ஒரு செங்கலை வைக்கக்கூட அனுமதிக்க மாட்டோம். காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு அதுதான். தமிழக முதலமைச்சர் நிலைப்பாடு என்னவோ அந்த நிலைப்பாட்டில் காங்கிரஸ் கட்சி உறுதியாக நிற்கும்" என்றார்

பினராயி விஜயன் வீட்டில் ED சோதனை: ``எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிராக..." - ஸ்டாலின் கண்டனம்!

கேரள முன்னாள் முதலமைச்சரும், சிபிஐ(எம்) கட்சியின் மூத்த பொலிட்பீரோ உறுப்பினருமான பினராயி விஜயனின் வீடுகளில் அமலாக்கத்துறை இன்று (மே 27, 2026) அதிகாலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகிறது. கொச்சி கனிம மண... மேலும் பார்க்க

கேரளம்: பினராயி விஜயனின் வீடு, மருமகன் வீடு உள்ளிட்ட 12 இடங்களில் இடி ரெய்டு - பின்னணி என்ன?

கேரள மாநிலம் கொச்சியில் செயல்படும் மணல் ஆலை நிறுவனமான சி.எம்.ஆர்.எல் கம்பெனியுடன், கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணா விஜயனின் எக்ஸாலாஜிக் கம்பெனி நிதி ஒப்பந்தம் செய்ததும், செய்யப்படாத ... மேலும் பார்க்க

தவெக: 'பள்ளி மாணவர்களுக்கான சத்துணவு முட்டைகளில் முறைகேடு?' - அண்ணாமலையின் குற்றச்சாட்டு என்ன?

தமிழ்நாட்டின் பள்ளி மாணவர்களின் மதிய உணவுத் திட்டத்தில் வழங்கப்படும் முட்டைகளின் தரம் மற்றும் கொள்முதல் முறைகேடுகள் குறித்து, பா.ஜ.க முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்... மேலும் பார்க்க

விசிக: `ஸ்டாலின் அண்ணனின் மனசாட்சிக்குத் தெரியும்' - தொல்.திருமாவளவனின் உருக்கம்

விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கோவையிலிருந்து தன் தொண்டர்களுடன் முகநூல் லைவ் மூலம் உரையாடினார். அந்த உரையில், ``அரசியல் நெருக்கடியை உணர்ந்துதான் தவெக அரசுக்கு நம் ஆதரவை வழங்கியிருக்கிறோம். கடந்த 10 ஆண்... மேலும் பார்க்க

தவெக: ``அரசு குடியிருப்பு வழங்குவதில் சாதிய பாகுபாடு காட்டுவதா?" - மா.சுப்ரமணியன் கடும் தாக்கு!

சென்னை சைதாப்பேட்டையில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய வீடுகள் ஒதுக்கீட்டில் சாதிப் பாகுபாடு காட்டப்படுவதாகக் கூறி, த.வெ.க எம்.எல்.ஏ அருள் பிரகாசம் மீது கடுமையான குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வீடுகள... மேலும் பார்க்க

கர்னூல் : `எங்கள் மகளின் மரணத்தை அரசியலுக்குதான் பயன்படுத்தினீர்களா' - பவன் கல்யாண் மீது சாடும் தாய்

ஆந்திரப் பிரதேச துணை முதல்வர் பவன் கல்யாண், தங்கள் மகளின் மரணத்தை அரசியல் ஆதாயத்திற்காகப் பயன்படுத்திக்கொண்டு, தற்போது ஆட்சிக்கு வந்த பிறகு நீதியை வழங்கத் தவறிவிட்டார் என்று 2017-ல் கர்னூலில் பாலியல் ... மேலும் பார்க்க