செய்திகள் :

`உறுதிப்பத்திரம் கொடுத்தால்தான் அனுமதி' - கேதார்நாத் வரும் இந்து அல்லாதவர்களுக்கு புது கட்டுப்பாடு

post image

இந்துக்களின் புனித இடங்களான கேதார்நாத் மற்றும் பத்ரிநாத்திற்கு வரும் இந்துக்கள் அல்லாத பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் புதிய நிபந்தனைகளை விதித்து இருக்கிறது. அதன்படி, இந்து அல்லாதவர்கள் பத்ரிநாத் மற்றும் கேதார்நாத் கோவில்களில் வழிபாடு செய்ய வேண்டுமானால், தாங்கள் இந்து மதத்தின் மீது நம்பிக்கை கொண்டிருப்பதாக உறுதிமொழிப்பத்திரம் சமர்ப்பிக்க வேண்டும்.

இந்த உத்தரவு கேதார்நாத்திற்கு அடிக்கடி வருகை தரும் பாலிவுட் நடிகை சாரா அலிகான் உட்பட அனைத்து இந்து அல்லாத பக்தர்களுக்கும் பொருந்தும். இந்து அல்லாதவர்கள் நான் சனாதன தர்மத்தை நம்புகிறேன் என்று கையெழுத்திட்ட பத்திரம் அளிக்க வேண்டும்.

சாரா அலிகான்

சீக்கியர்கள், பௌத்தர்கள் மற்றும் சமணர்கள் சனாதன மரபின் ஒரு பகுதியாகக் கருதப்படுவதால் அவர்களுக்கு இதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கோவிலின் புனிதத்தைப் பாதுகாக்கவும், உண்மையான நம்பிக்கை கொண்டவர்களை மட்டும் அனுமதிக்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கோவில் குழுவின் தலைவர் ஹேமந்த் திவேதி,'' கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் கோவில்களில் தரிசனம் செய்ய விரும்பும் இந்து அல்லாத அனைத்து பார்வையாளர்களும் தாங்கள் இந்து மதத்தின் மீது நம்பிக்கை கொண்டிருப்பதாக உறுதிப்படுத்தும் பத்திரத்தை இனி சமர்ப்பிக்க வேண்டும். பார்வையாளர்கள் இந்து மதத்தின் மீது தங்களுக்கு உள்ள நம்பிக்கையை உறுதிப்படுத்தும் ஆவண ஆதாரங்களை வழங்க வேண்டும்'' என்று அவர் விளக்கினார். இந்த விதி, வழிபாட்டிற்காக வரும் எந்தவொரு இந்து அல்லாத பக்தருக்கும் ஒரே சீராகப் பொருந்தும்.

சாரா அலி கான் அடிக்கடி கேதார்நாத்திற்குச் வருவதைக் சுட்டிக்காட்டிய திவேதி, ``புதிய நிபந்தனையைப் பின்பற்றினால் அந்த நடிகை தொடர்ந்து வழிபாடு செய்ய அனுமதிக்கப்படுவார். சாரா அலி கான் சனாதன தர்மத்தின் மீது தனது பக்தியை வெளிப்படுத்தி, உறுதிமொழிப் பத்திரம் சமர்ப்பித்தால், அவரை வழிபாடு செய்ய அனுமதிப்போம்," என்று அவர் கூறினார்.

சாரா அலி கான் தனது அறிமுகத் திரைப்படமான 'கேதார்நாத்' படப்பிடிப்பின் போது அங்கு சென்றதில் இருந்து, அந்தத் தலத்திற்குத் தொடர்ந்து சென்று வருகிறார்.

ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் அறிமுகப்படுத்துகிறது ஸ்வர்ண யுகாதி! - தங்கத்தின் பிரகாசமான புதிய தொடக்கம்!

1964 முதல் பாரம்பரியத்தில் வேரூன்றிய ஜிஆர்டி ஜூவல்லர்ஸ், தலைமுறைகளை கடந்து வந்த நம்பிக்கையின் சின்னமாக திகழ்கிறது. நுணுக்கமான கைவினைத் திறனும், நிலையான மதிப்புகளுக்கு காரணமாக புகழ்பெற்ற இந்த நிறுவனம்.... மேலும் பார்க்க

விஐடி மொரீஷியஸ் சார்பில் தொழில்நுட்ப ஐடியாத்தான் போட்டி! - 5 நாடுகளை சேர்ந்த 1600 பேர் பங்கேற்பு

வேலூர் விஐடி மொரீஷியஸ் சார்பில் தொழில்நுட்ப ஐடியாத்தான் போட்டி இணையவழியில் நடத்தப்பட்டது.இந்த நிகழ்வு பொறியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் நிறுவனத்துடன் இணைந்து நடத்தப்பட்டது. இதில், உலகம் முழுவதும் இருந்... மேலும் பார்க்க

சிக்கன் பிரியாணியுடன் படகில் சென்று கங்கை ஆற்றில் இப்தார் விருந்து! - போலீஸார் வழக்கு பதிவு

கங்கை ஆற்றை இந்துக்கள் புனித நதியாக கருதுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் பல லட்சம் இந்துக்கள் இந்த கங்கை ஆற்றிற்கு வந்து புனித நீராடி செல்கின்றனர். இந்த கங்கை ஆற்றில் படகில் சிலர் இப்தார் பார்ட்டி நடத்துவதா... மேலும் பார்க்க

ரீல்ஸ் விபரீதம் : சொந்த தந்தையை சாக்குமூட்டையில் கட்டி கூரியரில் அனுப்ப முயன்ற பெண் - அதிர்ச்சி!

தமிழ் சினிமாவில் ஒருவர் தனது குடும்ப உறுப்பினர்களை சாக்குமூட்டையில் கட்டி கூரியரில் அனுப்ப முயன்றதை பார்த்திருப்போம். அது ஒரு காமெடி காட்சி. ஆனால் நிஜத்தில் ஒரு பெண் தனது தந்தையை அதேபோன்று கூரியரியில்... மேலும் பார்க்க

டெல்லி: துப்பாக்கியை வைத்து ரீல்ஸ்; நெஞ்சில் பாய்ந்த தோட்டா; மரணத்தில் முடிந்த வ்யூஸ் மோகம்

டெல்லியில் உள்ள தல்லுபுரா என்ற இடத்தில் வசித்து வந்தவர் பவன். இவர் தனது நண்பரிடம் இருந்த துப்பாக்கியைப் பயன்படுத்தி ரீல்ஸ் எடுக்க முடிவு செய்தார். இதற்காக பவன் துப்பாக்கியை கையில் எடுத்து அதற்கு தோட்ட... மேலும் பார்க்க

டைனோசர்களுக்கே சவால் விட்ட 'கடல் ராஜா'- உலகத்தையே அதிரவைத்த 11 வயது சிறுமியின் கண்டுபிடிப்பு!

சுமார் 20 கோடி ஆண்டுகளுக்கு முன்பு, நிலத்தில் டைனோசர்கள் ராஜாவாக வலம் வந்தபோது, கடலில் அதைவிடப் பெரிய 'கடல் அசுரன்கள்' வாழ்ந்து வந்தன. காலப்போக்கில் மறைந்துபோன அந்த ராட்சத உயிரினத்தைப் பற்றிய ஒரு ரகசி... மேலும் பார்க்க