இந்து நெறிமுறைகளைப் பின்பற்றாத 18 ஊழியர்கள் நீக்கம்: திருப்பதி தேவஸ்தானம்!
``உலகில் வேறெங்கும் இல்லாத ஆன்மிக விழா இது..'' -மகா கும்பமேளா குறித்து சாய்னா நேவால் நெகிழ்ச்சி
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ்ஜில் 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா கும்பமேளா மிக விமர்சியாக நடந்து வருகிறது.
மொத்தம் 45 நாள்கள் இந்த கும்பமேளா நடக்கிறது. கோடிக்கணக்கான பக்தர்கள் மகா கும்பமேளாவில் பங்கேற்று வரும் நிலையில், இன்று பிரதமர் மோடி மகா கும்பமேளாவில் பங்கேற்று, திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி இருக்கிறார். பல லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர். பிரபலங்கள் பலரும் இந்த கும்பமேளாவில் பங்கேற்று புனித நீராடி வருகின்றனர்.
அந்தவகையில், பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலும் இந்த மகா கும்பமேளாவில் பங்கேற்று புனித நீராடி இருக்கிறார். கும்பமேளா குறித்து பேசிய சாய்னா நேவால், “ மகா கும்பமேளாவில் பங்கேற்க திரிவேணி சங்கமத்துக்கு வந்துள்ளேன். மாபெரும் திருவிழாவான இதில் பங்கேற்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது என் அதிர்ஷ்டம் இதைப் போன்ற ஆன்மிக விழா உலகில் வேறெதுவும் இல்லை. இது நம் நாட்டில் நடப்பதில் பெருமிதம் கொள்கிறேன். நம் தேசம் மேலும் மேலும் முன்னேற பிரார்த்திக்கிறேன்" என்று கூறியிருக்கிறார்.