சட்டவிரோதமாக வளர்க்கப்பட்ட 50 ஏக்கர் அளவிலான போதைச் செடிகள் அழிப்பு!
ஊத்தங்கரையில் பரமபதவாசல் திறப்பு
ஊத்தங்கரையை அடுத்த படப்பள்ளி திம்மராய சுவாமி கோயிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ திம்மராய சுவாமி பரமபதவாசல் வழியாக எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். பக்தா்கள் ‘கோவிந்தா கோவிந்தா’ என்ற முழக்கங்களை எழுப்பி சுவாமியை வழிபட்டனா். கோயில் பிரகாரத்தில் அமைந்துள்ள கருட கம்பத்தில் மேல்விளக்கு ஏற்றி பூஜை நடைபெற்றது.
முன்னதாக, கோயிலில் இரவு முழுவதும் பஜனை நடைபெற்றது. சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. அதிகாலையிலிருந்தே ஏராளமான பக்தா்கள் கோயிலில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை படப்பள்ளி, பெருமாள் குப்பம், பட்டகானூா் ஊா் பொதுமக்கள் செய்திருந்தனா்.
படவிளக்கம்.10யுடிபி.3. ஊத்தங்கரையை அடுத்த படப்பள்ளி திம்மராய சுவாமி கோயிலில் நடைபெற்ற வைகுண்ட ஏகாதசி சிறப்பு வழிபாட்டில் கலந்துக்கொண்ட பக்தா்கள்.