தமிழ்நாடு அரசின் திரைப்பட & சின்னத்திரை விருதுகள்; அசுரன், ஜெய் பீம் `டு' மாநகரம...
தமிழ்நாடு அரசின் திரைப்பட & சின்னத்திரை விருதுகள்; அசுரன், ஜெய் பீம் `டு' மாநகரம்! - முழு விவரம்!
தமிழ்நாடு அரசின் சார்பில், சமூகச் சிந்தனைகளுடன் மனிதநேயத்தை பிரதிபலிக்கும் திரைப்படங்களை ஊக்குவிக்கும் வகையில்
சிறந்த திரைப்படங்கள், நடிகர், நடிகை, தொழில்நுட்பக் கலைஞர்கள் ஆகியோருக்கு திரைப்பட விருதுகளும்,
சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சிறந்த தொடர்கள்,
கதாநாயகன், கதாநாயகி, ஆண்டின் சிறந்த சாதனையாளர்,
ஆண்டின் வாழ்நாள் சாதனையாளர் உள்ளிட்டோருக்கு
சின்னத்திரை விருதுகளும் வழங்கப்படுகின்றன.
அந்த வகையில், தமிழ்நாடு அரசு, 2016–2022 ஆம் ஆண்டுகளுக்கான திரைப்பட விருதுகள் மற்றும் 2014–2022 ஆம் ஆண்டுகளுக்கான சின்னத்திரை விருதுகளை அறிவித்திருக்கிறது.
வரும் 13.02.2026 அன்று அறிவிக்கப்பட்ட விருதுகளை, தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சென்னை கலைவாணர் அரங்கில் வழங்கவிருக்கிறார்.
விருதுகள் அறிவிப்பு... சுருக்கமாக இங்கே!

2016 ஆம் ஆண்டுக்கான திரைப்பட விருதுகள்
சிறந்த படம் – முதல் பரிசு : மாநகரம்
சிறந்த படம் – இரண்டாம் பரிசு : புரியாத புதிர்
சிறந்த படம் – மூன்றாம் பரிசு : மாவீரன் கிட்டு
சிறந்த படம் (சிறப்பு) : மனுசங்கடா
பெண்களை உயர்வாக சித்தரிக்கும் படம் : அருவி
சிறந்த நடிகர் : விஜய் சேதுபதி (புரியாத புதிர்)
சிறந்த நடிகை : கீர்த்தி சுரேஷ் (பாம்பு சட்டை)
சிறந்த இயக்குநர் : லோகேஷ் கனகராஜ் (மாநகரம்)

2017 – 2022 திரைப்பட விருதுகள்
2017 :
சிறந்த படம் – அறம்
சிறந்த நடிகர் – கார்த்தி
சிறந்த நடிகை – நயன்தாரா
2018 :
சிறந்த படம் – பரியேறும் பெருமாள்
சிறந்த நடிகர் – தனுஷ்
சிறந்த நடிகை – ஜோதிகா

2019 :
சிறந்த படம் – அசுரன்
சிறந்த நடிகர் – ஆர். பார்த்திபன்
சிறந்த நடிகை – மஞ்சு வாரியர்
2020 :
சிறந்த படம் – கூழாங்கல்
சிறந்த நடிகர் – சூர்யா
சிறந்த நடிகை – அபர்ணா பாலமுரளி

2021 :
சிறந்த படம் – ஜெய் பீம்
சிறந்த நடிகர் – ஆர்யா
சிறந்த நடிகை – லிஜோ மால் ஜோஸ்
2022 :
சிறந்த படம் – கார்கி
சிறந்த நடிகர் – விக்ரம் பிரபு
சிறந்த நடிகை – சாய் பல்லவி

சின்னத்திரை விருதுகள் (2014 – 2022)
2014
சிறந்த தொடர் – அழகி
சிறந்த நடிகர் – எம். ராஜ்குமார்
சிறந்த நடிகை – ஆர். ராதிகா சரத்குமார்

2015
சிறந்த தொடர் – ரோமாபுரி பாண்டியன்
சிறந்த நடிகர் – ஆர். பாண்டியராஜன்
சிறந்த நடிகை – சானியா போஜன்

2016
சிறந்த தொடர் – ராமானுஜர்
சிறந்த நடிகர் – கௌசிக்
சிறந்த நடிகை – நீலிமா ராணி
2017
சிறந்த தொடர் – நந்தினி
2018
சிறந்த தொடர் – பூவே பூச்சூடவா
2019
சிறந்த தொடர் – செம்பருத்தி
மேலதிக விவரங்களுக்கு கீழே இணைக்கப்பட்டுள்ள PDF-ஐ ஓபன் செய்து பார்க்கவும்!

















