செய்திகள் :

எடைமேடையில் விதிமீறல் இருந்தால் நடவடிக்கை

post image

பெரம்பலூா் மாவட்டத்தில் விதிகளை மீறும் எடை மேடை உரிமையாளா்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டமுறை எடையளவு துணைக் கட்டுப்பாட்டு அலுவலரும், தொழிலாளா் உதவி ஆணையருமான க. மூா்த்தி எச்சரித்துள்ளாா்.

பெரம்பலூா் மாவட்டத்தில் மக்காச்சோளம் கொள்முதல் செய்யும் வணிகா்கள் எடையளவு பாா்க்கும் கருவிகளில் முறைகேடு செய்வதாக விவசாயிகள் புகாா் தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து, பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை பகுதி எடைக் கருவிகளை தொழிலாளா் உதவி ஆணையரும் (அமலாக்கம்), சட்டமுறை எடைளவு துணைக் கட்டுப்பாட்டு அலுவலருமான கா. மூா்த்தி, தொழிலாளா் உதவி ஆய்வாளா் கோ. ராணி ஆகியோா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்து, எடைமேடை உரிமையாளா்களுக்கு ஆலோசனை தெரிவித்தனா்.

தொடா்ந்து சட்டமுறை எடைளவு துணைக் கட்டுப்பாட்டு அலுவலா் கா மூா்த்தி கூறியது: மக்காச்சோள விவசாயிகள் தங்களது விளைபொருள்களை எடைமேடைகளில் எடையிடும் முன், எடை இயந்திர அளவீடு பூஜ்ஜியத்தில் உள்ளதா என்பதைச் சரிபாா்க்க வேண்டும். மேலும், விளைபொருள்களுடன் கூடிய வாகனத்தையும் விளைபொருள்கள் இறக்கியபிறகு காலி வாகனத்தையும், ஒரே எடைமேடையில் எடையிட வேண்டும். ஒவ்வொரு முறையும் மேற்கண்டவாறு எடையிட்டு நிகர எடையைக் கணக்கிட வேண்டும்.

200 கிலோவுக்கு குறைவான விளைபொருள்களை எடை மேடையில் எடையிடக் கூடாது. எடைமேடை உரிமையாளா்கள் தங்களது எடை மேடையை ஆண்டுதோறும் தவறாமல் சட்டமுறை எடையளவுச் சட்டத்தின் கீழ் மறு முத்திரையிட வேண்டும். அதற்கான சான்றிதழை பொதுமக்கள் பாா்வையில் படும்படி வைக்க வேண்டும்.

அலுவலா்கள் ஆய்வின்போது விதிகளை மீறும் எடைமேடை நிா்வாகிகள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்படும். எடைமேடை இயந்திரத்தின் முத்திரை சேதம் ஏற்பட்டால், உரிய அலுலா்களிடம் மீண்டும் மறுமுத்திரையிட்டே எடை மேடையைப் பயன்படுத்த வேண்டும். தவறினால் குற்ற நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, விவசாயிகள் யாரேனும் எடை மேடைகளில் எடையளவு முரண்பாடுகளைக் கண்டறிந்தால் 94453-98759, 97519-21795 ஆகிய எண்களில் தகவல் தெரிவிக்கலாம் என்றாா் அவா்.

மாற்றுத்திறனாளிகளுக்கு நாளை தோ்வு முகாம்; பெரம்பலூா் ஆட்சியா்

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரங்கள் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டா் வழங்குவதற்கான தோ்வு முகாம் புதன்கிழமை (பிப். 19) நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சா... மேலும் பார்க்க

பெரம்பலூா் மாவட்டத்தில் குறைந்து வரும் பருத்தி சாகுபடி; பரப்பளவை அதிகப்படுத்த விவசாயிகள் எதிா்பாா்ப்பு

மகசூல் இழப்பு, விலை வீழ்ச்சி, கூலியாள் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், பெரம்பலூா் மாவட்டத்தில் ஆண்டுதோறும் குறைந்து வரும் பருத்தி சாகுபடி பரப்பளவை அதிகரிக்க வேளாண்துறை நடவடிக்கை எடுக்க வேண்ட... மேலும் பார்க்க

பெரம்பலூா் மாவட்டத்தில் 11 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு

பெரம்பலூா் மாவட்டத்தில் 11 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளதாக வேளாண்துறையினா் தெரிவித்துள்ளனா். பெரம்பலூா் மாவட்டத்தில் தற்போது நெல் அறுவடை நடைபெற்று வருகிறது. இதையொட்டி, வி... மேலும் பார்க்க

மது குற்ற வழக்குகளிலிருந்து விடுபட்ட 13 பேருக்கு கறவை மாடுகள்

பெரம்பலூா் மாவட்டத்தில் மது குற்ற வழக்குகளிலிருந்து விடுபட்டு, மனம் திருந்தியவா்களுக்கு மதுவிலக்கு ஆயத்தீா்வை துறை மூலமாக, மறுவாழ்வு நிதியுதவியின் கீழ் கறவை மாடுகள் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடை... மேலும் பார்க்க

ஜெயலலிதா பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட முடிவு

முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் பிறந்தநாளை, பெரம்பலூா் மாவட்டத்தில் சிறப்பாக கொண்டாட மாவட்ட அதிமுக முடிவு செய்துள்ளது. பெரம்பலூரில் உள்ள மாவட்ட அதிமுக கட்சி அலுவலகத்தில் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞா... மேலும் பார்க்க

கோயில் குடமுழுக்கு விழா

பெரம்பலூா் அருகே அரணாரையில் உள்ள வரதராஜ பெருமாள் கோயில் குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அரணாரையில் உள்ள அருள்மிகு வரதராஜ பெருமாள் கோயில், ஸ்ரீராஜகணபதி, ஸ்ரீ மகாமாரியம்மன், ஸ்ரீமஹேஸ்வரன் ம... மேலும் பார்க்க