செய்திகள் :

"என் போட்டோ வச்சு 'மணி பசிக்குது மணி'னு ஒரு ஹோட்டலே வந்துருச்சு" - நடிகர் ஜெயராம் கலகல | Mimicry

post image

ஜெயராம் - ஊர்வசி இணைந்து நடித்திருக்கும் 'பரிமளா & கோ' திரைப்படம் ஜூன் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இப்படத்தின் ப்ரோமோஷனில் படக்குழுவினர் பரபரப்பாக இயங்கி வருகின்றனர். இந்நிலையில், இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக நடிகர் ஜெயராம் நம் விகடன் ப்ரஸ் மீட் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

‘பரிமளா & கோ' படத்தில்...
‘பரிமளா & கோ' படத்தில்...

'பொன்னியின் செல்வன் 1' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ஜெயராம் நடிகர் பிரபு மற்றும் மணி ரத்னம் போலவே மிமிக்ரி செய்த காணொளி அப்போது வைரலானது.

நம் விகடன் ப்ரஸ் மீட் நிகழ்வில் பலரைப் போலவே மிமிக்ரி செய்துகாண்பித்தவர், நடிகர் பிரபு மற்றும் இயக்குநர் மணி ரத்னம் போல மிமிக்ரி செய்துகாண்பித்து அந்த நிகழ்வு தொடர்பாகப் பேசியிருக்கிறார்.

ஜெயராம் பேசுகையில், "மணி ரத்னம் சார் மாதிரி நான் மிமிக்ரி பண்ணின வீடியோ பயங்கர வைரல் ஆகிடுச்சு. அப்போ, நான் சுஹாசினி மேம்கிட்ட அனுமதி வாங்கிட்டுதான் மேடையில மிமிக்ரி பண்ணினேன்.

'பொன்னியின் செல்வன்' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா 6.30 மணிக்கு ஆரம்பிக்க வேண்டியது. ஆனா, தயாரிப்பாளர்கள் வரத் தாமதமானது. அப்போ மணி ரத்னம் சார் ஒரு லெட்டர்ல 'ஸ்டேஜ்ல ஏதாவது பெர்பார்ம் பண்ண முடியுமா'னு கேட்டு அனுப்பினார்.

தொடர்ந்து, பிரபு சார்கிட்டையும் அனுமதி வாங்கி மேடையில பெர்பார்ம் பண்ணினேன். அப்போ பிரபு சார் 'என்னை அசிங்கப்படுத்தப் போறீயா! நல்லதுதானே சொல்லப்போற, பண்ணு'னு சொன்னார். மணி ரத்னம் சார் மாதிரி எல்லோரும் மிமிக்ரி பண்ணிக் காட்டுவாங்க.

Actor Jayaram
Actor Jayaram

நான் மிமிக்ரி பண்ணின வீடியோவை பார்த்துட்டு நடிகர் அபிஷேக் பச்சனும் 'நான் மணி சார் மாதிரி பண்றேன்'னு அவருடைய வெர்ஷனை செய்துகாண்பித்தார்.

ஆனால், அவர் முன்னாடி யாரும் அதனைச் செய்ய மாட்டாங்க" என்றவர், "நான் மிமிக்ரி பண்ணின வீடியோ வைரல் ஆன பிறகு பிரபு சார் 'வீடியோ மில்லியன் போயிடுச்சுப்பா'னு போன் பண்ணி சொன்னார். பிறகு 'மணி பசிக்குது மணி'னு அவரை சந்திப்பவர்கள் சொல்லும்போது எனக்குக் கால் பண்ணி அவர்களைக் காட்டுவார்.

இப்போ 'மணி பசிக்குது மணி'னு கேரளாவுல ரெண்டு ஹோட்டல் திறந்துட்டாங்க. ஒரு பக்கம் என்னுடைய புகைப்படம், இன்னொரு பக்கம் பிரபு சாருடைய புகைப்படத்தை அந்த ஹோட்டல் பெயர் பலகையில பயன்படுத்தியிருந்தாங்க" என நகைச்சுவையாகப் பேசினார்.

'உப்பு புளி காரம்' சீசன் 2 எதனால் 'ப்ரதர்ஸ் & சிஸ்டர்ஸ்' என மாற்றப்பட்டது? - ராஜ் ஐயப்பா பேட்டி

ஜியோ ஹாட்ஸ்டாரில் 'ப்ரதர்ஸ் & சிஸ்டர்ஸ்' சீரிஸ் நேற்று முதல் ஒளிபரப்பாகத் தொடங்கியிருக்கிறது. 100 எபிசோடுகள் கொண்ட 'Long Format' வெப் சீரிஸாக இது வெளிவரவிருக்கிறது. நடிகர் போஸ் வெங்கட், மெட்டி ஒலி... மேலும் பார்க்க

`பசங்க கல்யாணத்தை பார்க்காம போயிட்டா, அதான் கஷ்டமா இருக்கு!' - மறைந்த‌ நடிகை தமிழ்செல்வியின் கணவர்

'சம்சார சங்கீதம்' படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் தொடங்கி தனது திருமணம் வரை சுமார் ஐம்பது படங்கள் வரை நடித்திருப்பவர் நடிகை தமிழ்செல்வி.'காலம் மாறிப் போச்சு', 'பொற்காலம்', 'வெற்றிக் கொடி கட்டு'... மேலும் பார்க்க

"அவரை நான் மீட் பண்ணினப்போ!" - 'முதல்வன் Meets முதல்வர்' தருணம் பற்றி அர்ஜூன்!

அறிமுக இயக்குநர் சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் ஆகியோர் நடித்திருக்கும் 'ப்ளாஸ்ட்' திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. சமீபத்தில் நடிகர் அர்ஜுன் முதல்வர் விஜய... மேலும் பார்க்க

"இவரால் பாதிப்படைந்தவர்களில் நானும் ஒருவன்!" - 'ரெட் ஜெயண்ட்' செண்பமூர்த்தி பற்றி சுரேஷ் காமாட்சி

ரெட் ஜெயண்ட் மூவிஸ் செண்பகமூர்த்தி இன்று காலை அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை நேரில் சந்த்திருந்தார். விளையாட்டு மீது செண்பகமூர்த்தி ஆர்வம் கொண்டவர் என்பதனால், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சரான ஆதவ் அர்ஜ... மேலும் பார்க்க

"என் மகள் அனந்திதா, சுந்தர்.சி சார் மாதிரி!"- பெருமைப்பட்ட தாய் குஷ்பு; கண்கலங்கிய மகள்!

சுந்தர்.சியின் 'அவ்னி மூவிஸ்' தயாரிப்பில் உருவாகியிருக்கிற 'டபுள் ஆக்குபன்சி' திரைப்படம் ரிலீஸுக்குத் தயாராகி வருகிறது. சுந்தர்.சி மற்றும் குஷ்புவின் இளைய மகளான அனந்திதா சுந்தர் இப்படத்தில் கிரியேட்டி... மேலும் பார்க்க