``கவாஸ்கர் சார் கிட்டாருடன் நான் ரெடியாக இருக்கேன்" - வாக்குறுதியை நினைவூட்டிய ஜ...
எப்படியாவது டிவில வரனும்கிறதுதான் ஆசை; வெற்றிமாறன் சார் தான் அதுல ஜட்ஜ் - விகடன் மேடையில் ரியோ
சிறந்த சின்னத்திரைக் கலைஞர்களைக் கெளரவிக்கும் 2024-ம் ஆண்டுக்கான விகடன் சின்னத்திரை விருதுகள் விழா சமீபத்தில் நடைபெற்றது.
இந்த விழாவில் 'ஆண் பாவம் பொல்லாதது' படக்குழுவினர் கலந்துக்கொண்டிருந்தனர்.
அப்போது பேசிய ரியோ ராஜ் , " 'சகலகலா வல்லவன்' நிகழ்ச்சி தான் என்னுடைய முதல் ஸ்டேஜ். முதன் முதல்ல பங்கேற்ற போட்டியும் அதுதான்.
ஒரு ஆட்டோ மொபைல் கம்பெனி-ல இன்ஜினீயரா வேலை பார்த்துட்டு இருந்தேன்.

டிவில வரணும்கிறது மட்டும்தான் தெரியும். ஆனா அது ஒரு பெரிய உலகம். அதுல நிறைய நல்ல விஷயங்கள் இருக்கும், அரசியலும் இருக்கும்கிறது எனக்கு தெரியாது.
எப்படியாவது டிவில வந்தரணும்கிற ஆசை மட்டும்தான் இருக்கும். அதுக்கு என்ன வழி இருக்குன்னுகூட தெரியாது.
'சகலகலா வல்லவன்' திறமை உள்ளவர்களை ஊக்குவிக்கிற ஒரு நிகழ்ச்சியாக இருந்துச்சு.
ஈரோட்டில இருந்து கிளம்பி வந்து இந்த நிகழ்ச்சில கலந்துக்கிட்டேன். செமி பைனலில் பெஸ்ட் பர்பாஃமர்'னு சொல்லிட்டாங்க.
நம்ம அடுத்த ரவுண்ட் போயிருவோம்னு நானும் ரொம்ப சந்தோஷப்பட்டேன். அடுத்த ஒரு அரை மணி நேரத்துலையே நான் தான் எலிமினேட்'னு சொல்லிட்டாங்க.
இப்போ நான் சந்தோஷப்படுறதா? இல்ல சங்கடப்படுறதா? என்ற மனநிலையில தான் இருந்தேன்.
இப்போலாம் மேடையில எப்படி பேசணும்கிற அறிவு கொஞ்சம் இருக்கு. அப்போ எலிமினேட்'னு சொன்ன உடனே கோபப்பட்டு அடுத்த போட்டியில கலந்துக்கிட்டு டைட்டில் வின் பண்ணுவேனு சவால்லாம் விட்டுட்டு வந்துட்டேன்.

ஒரு வேகத்துல பேசிட்டு வந்துட்டோம். அடுத்த ஷோவுக்கு நம்மள எப்படி கூப்பிடுவாங்க'னு அப்புறம் தான் யோசிச்சேன்.
அந்த டைம்ல மிகப்பெரிய ஒரு ஆர்வக்கோளாறா இருந்தேன். பிறகு 'புதிய முகங்கள்' நிகழ்ச்சியில கலந்துக்கிட்டு டைட்டில் வின் பண்ணேன்.
வெற்றி மாறன் சார் தான் அதுல ஜட்ஜ். அப்புறம் தான் 'கனா காணும் காலங்கள்'-ல கலந்துக்கிட்டேன்" என பேசியிருக்கிறார்.




















