Athiradi: "எனக்கு பேசில் ஜோசப் சின்ன ரோல்தான் நடிக்கக் கொடுத்தான்" - சென்னையில் ...
எவ்வளவு தொகை கையில் இருந்தால் நீங்கள் நிதிச் சுதந்திரம் அடையலாம்? | Download Free SWP Calculator
நாம் அனைவரும் வாழ்வில் ஒரு கட்டத்தில் நிதிச் சுதந்திரத்தை (Financial Freedom) அடைய விரும்புகிறோம். ஆனால், நிஜமான நிதிச் சுதந்திரம் என்றால் என்ன? விலையுயர்ந்த கார், பெரிய வீடு, ஆடம்பரமான வாழ்க்கை... இவைதான் நிதிச் சுதந்திரமா?
‘தி சைக்காலஜி ஆஃப் மணி’ (The Psychology of Money) என்ற புகழ்பெற்ற புத்தகத்தின் ஆசிரியர் மார்கன் ஹௌசல் (Morgan Housel) இதற்கு முற்றிலும் மாறுபட்ட ஒரு விளக்கத்தைத் தருகிறார்.
"பணம் தரும் மிகப் பெரிய டிவிடெண்ட், உங்கள் நேரத்தை உங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளும் சுதந்திரம்தான்" என்கிறார் அவர்.
கண்களுக்குத் தெரியாததுதான் உண்மையான செல்வம்!
மார்கன் ஹௌசலின் கூற்றுப்படி, செல்வம் என்பது நாம் வாங்காத விலையுயர்ந்த கார்கள், அணியாத வைரங்கள் மற்றும் காட்டிக்கொள்ளாத ஆடம்பரங்களே. இவை பிறர் கண்ணுக்குத் தெரிவதில்லை!
பலரும் "நான் கோடீஸ்வரன் ஆக வேண்டும்" என்று சொல்வதன் உண்மையான அர்த்தம், "நான் ஒரு கோடி ரூபாயைச் செலவழிக்க வேண்டும்" என்பதுதான். ஆனால், பணத்தைச் செலவழித்து பொருள்களை வாங்குவது செல்வத்தைக் குறைக்கும் செயலே அன்றி, பெருக்குவது அல்ல.
உண்மையான செல்வம் என்பது வங்கிக் கணக்கிலும், முதலீடுகளிலும் இருக்கும் பணம். அது உங்களுக்குப் பொருள்களைத் தராது; மாறாக 'விருப்பத்தேர்வுகளை' (Options) தரும். நாளை நீங்கள் செய்யும் வேலை பிடிக்கவில்லை என்றால் தயக்கமின்றி விலகும் தைரியத்தை, உங்களுக்குப் பிடித்தமான தொழிலைச் செய்யும் வாய்ப்பை, குடும்பத்துடன் நேரம் செலவிடும் சுதந்திரத்தை அந்தப் பணம்தான் உங்களுக்குத் தரும். மார்கன் ஹௌசல் இதையே "தூய சுதந்திரம்" (Pure Independence) என்கிறார்.

எளிமையும் பொறுமையுமே வெற்றியின் ரகசியம்
நிதி உலகில் வெற்றி பெற மிகச் சிறந்த அறிவுத்திறன் தேவையில்லை; சரியான மனநிலையும் (Behavior) பொறுமையும்தான் தேவை. ஆடம்பரச் செலவுகளைச் சுருக்கி, அடிப்படைத் தேவைகளுக்குப் போக மீதமுள்ள தொகையைச் சேமிப்பதன் மூலம் நம் வாழ்க்கையை நாமே மாற்றியமைக்கலாம்.
கவர்ச்சிகரமான திட்டங்களில் சிக்காமல், நம்பகமான தகவல்களைத் தேடி, சந்தையின் ஏற்ற இறக்கங்களைக் கண்டு பயப்படாமல் தொடர்ந்து முதலீடு செய்ய வேண்டும். முதலீடு செய்யும் முன் அவசரம் கூடாது.
SIP முதல் SWP வரை: நிதிச் சுதந்திரத்துக்கான பயணம்
முதலீட்டுப் பயணம் என்பது எளிமையானது. உங்கள் வருமானத்தில் ஒரு பகுதியை, சுமார் 10-20% வரை, தொடர்ந்து நீண்ட காலத்திற்கு SIP (Systematic Investment Plan) முறையில் முதலீடு செய்து வர வேண்டும்.

நீண்ட கால முதலீட்டில் கவனம் செலுத்தினால் பணவீக்க விகிதத்தை விட அதிக வருமானத்தைப் பெற முடியும். கூட்டு வட்டியின் ஆற்றலால் (Power of Compounding) உங்கள் முதலீடு பல மடங்காகப் பெருகும்.
இப்படிப் பல ஆண்டுகள் பொறுமையாக முதலீடு செய்து சேர்க்கும் தொகையை, உங்கள் ஓய்வுக் காலத்தில் அல்லது உங்களுக்கு ஒரு மாற்று வருமானம் தேவைப்படும் காலத்தில் SWP (Systematic Withdrawal Plan) மூலம் பயன்படுத்தலாம்.
SWP: உங்கள் மாதாந்திர வருமானத்தின் ஆணிவேர்
SIP மூலம் விதைத்த மரத்திலிருந்து பழங்களை அறுவடை செய்யும் காலம்தான் SWP. நீங்கள் சேர்த்த மொத்த தொகையை ஒரு மியூச்சுவல் ஃபண்டில் தொடர்ந்து முதலீட்டில் வைத்துவிட்டு, அதிலிருந்து ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை மாதாந்திர வருமானமாக (Monthly Income) பெற்றுக்கொள்ளலாம்.
இதனால் உங்கள் அசல் தொகையும் சந்தை வளர்ச்சிக்கு ஏற்ப தொடர்ந்து வளர்ந்துகொண்டே இருக்கும்; அதேசமயம் உங்களுக்குத் தேவையான மாதாந்திர செலவுகளுக்கும் எந்தத் தடையுமின்றி பணம் வந்துகொண்டிருக்கும். இதுதான் உங்களை பணத்துக்காக உழைக்காமல், உங்கள் நேரத்தை உங்களுக்குப் பிடித்தமான முறையில் செலவழிக்க வைக்கும் உண்மையான சுதந்திரம்.
SWP-ல் எவ்வளவு முதலீடு செய்தால், எனக்கு எவ்வளவு கிடைக்கும்?
45 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் நிச்சயம் ஒரு பெரிய தொகை கையில் இருக்கும். அது ஏற்கெனெவே பிற இடங்களில் முதலீடு செய்யப்பட்டு இருக்கலாம் அல்லது வங்கியில் சேமிப்பு கணக்கு அல்லது ஃபிக்சட் டெப்பாசிட்டில் இருக்கலாம்.
இந்தப் பணத்தைச் சரியான முறையில் SWP மூலம் முதலீடு செய்தால், வெறுமெனே தூங்கும் அந்தப் பணம் உங்களுக்காக உழைத்து, மாதாமாதம் இரண்டாவது வருமானத்தைக் கொடுக்கும். 50+ வயது மேற்பட்டவர்களுக்கு இது மிகப்பெரும் பலமாக இருக்கும்.
வாடகை வீட்டில் இருந்து வருமானம் போல்தான் இதுவும். கீழ்க்கண்ட அட்டவணை மூலம் நீங்க எவ்வளவு இரண்டாவது வருமானம் (அல்லது மாதாந்திர பென்ஷன்) பெறலாம் என்பதைக் கூறுகிறது.

உங்களால் எப்போது ஓய்வு பெற முடியும்?
உங்கள் நிதிச் சுதந்திரப் பயணத்தை இன்றே திட்டமிடுங்கள். நீங்கள் எப்போது முழுமையான நிதிச் சுதந்திரத்தை அடைந்து, எந்தவித நிதிச் சுமையுமின்றி நிம்மதியாக ஓய்வு பெற முடியும் என்பதைத் துல்லியமாகக் கணக்கிட வேண்டுமா?
எங்களின் இலவச Labham SWP Second Income/Pension Calculator-ஐ இப்போதே டவுன்லோட் செய்யுங்கள்! உங்கள் வருங்கால மாதாந்திர வருமானத்தை இன்றே திட்டமிட்டு, உங்கள் வாழ்வின் நேரத்தை உங்கள் வசமாக்குங்கள்.
கால்குலேட்டர் டவுன்லோடு செய்ய: இங்கே க்ளிக் செய்யவும்: https://forms.gle/ynsiecZMfKTqSXJN6
நிதிச் சுதந்திரம் அடைய வாழ்த்துகள்!


















