செய்திகள் :

NRI Corner: வங்கி எஃப்.டி Vs மியூச்சுவல் ஃபண்ட்... வரிக்குப் பின் எதில் அதிக லாபம் கிடைக்கும்?

post image

வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பலரும் தங்கள் பணத்தைப் பத்திரமாக வைத்திருக்க வங்கி பிக்சட் டெபாசிட் ஒன்றையே பிரதானமான விஷயமாக நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். இதனால் ஆண்டுதோறும் வங்கி எஃப்.டி.யில் அதிகரித்துவரும் தொகை குறிப்பிடத்தகுந்த அளவு அதிகரித்து வருகிறது.

அதே சமயம், இத்தனை நாளும் வங்கி எஃபி.டி.யில். பணத்தை வைத்திருந்துவிட்டோம். அதனால் பெரிய அளவில் லாபம் கிடைத்த மாதிரி தெரியவில்லை. இந்த நிலையில், எதில் முதலீடு செய்தால், அதிக லாபம் கிடைக்கும் என்று பலரும் கேட்டு வருகிறார்கள். இப்படித் தேடுகிறவர்களுக்கு மிகச் சரியான முதலீடாக மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. கடந்த காலத்தில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு பற்றி சந்தேகக் கண்ணோட்டத்துடன் பார்த்தவர்கள், தற்போது மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் இருக்கும் பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் அம்சங்களைப் புரிந்துகொண்டு, அவற்றில் வேகமாக முதலீடு செய்து வருகின்றனர்.

என்றாலும், வங்கி எஃப்.டி.யில் பணத்தைப் போட்டு வைத்திருப்பதற்குப் பதிலாக மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் பணத்தைப் போட்டு வைத்தால், நல்ல லாபம் கிடைக்குமா, வங்கி எஃப்.டி - மியூச்சுவல் ஃபண்ட் - இந்த இரண்டில் எதில் பெஸ்ட்-ஆன முதலீடு, எதில் முதலீடு செய்தால், அதிக லாபம் கிடைக்கும் என்கிற கேள்விக்கான பதில் இனி பார்ப்போம்.

டெபாசிட்...

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் மாதந்தோறும் முதலீடு செய்யும் எஸ்.ஐ.பி முதலீடு, மொத்தமாக முதலீடு செய்யும் லம்ப்சம் முதலீடு என இரு வகை உண்டு. இதில் மொத்தமாக முதலீடு செய்யும் முதலீட்டைப் பற்றி மட்டும் கணக்கில் எடுத்துக்கொண்டு இப்போது நாம் பார்ப்போம். காரணம், வங்கி எஃப்.டி.யில் நாம் மொத்தமாகத்தான் முதலீடு செய்கிறோம். அதே போல, மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டிலும் மொத்தமாக முதலீடு செய்யும் தொகையையே நாம் கணக்கில் எடுத்துக் கொள்வோம்.

வெளிநாட்டில் வசிக்கும் தமிழர் ஒருவர் வங்கி எஃப்.டி.யில் ரூ.50 லட்சத்தையும், மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் ரூ.50 லட்சத்தையும் முதலீடு செய்கிறார்; இதை அவர் 10 ஆண்டுகளுக்குத் தொடர்கிறார் என்று வைத்துக்கொள்வோம்.

வங்கி எஃப்.டி.க்கு அதிகபட்சம் ஆண்டுக்கு 6.5% வட்டி கிடைக்கும். மியூச்சுவல் ஃபண்டில் 12% வரை லாபம் கிடைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது! (இந்த 12% லாபத்துக்கு உத்தரவாதம் இல்லை. காரணம், பங்குச் சந்தை நன்றாக செயல்பட்டால், 15% வரைகூட வருமானம் கிடைக்க வாய்ப்பு உண்டு. கடந்த 15 - 20 ஆண்டுகளில் 15% மேல் லாபம் தந்த பல ஃபண்டுகள் உள்ளன. அதே போல, 8 சதவிகிதத்துக்கும் குறைவான ஃபண்டுகள் மிகச் சில மட்டுமே என்பதை மறக்கக்கூடாது!)

இந்த விவரங்களின் அடிப்படையில் கணக்கிட்டுப் பார்த்தால், யாருக்கு அதிகமான லாபம் கிடைக்கும் என்று பார்ப்போம்.

வங்கி எஃப்.டி. மூலம் 10 ஆண்டு கழித்து கிடைக்கும் தொகை - ரூ.93,85,687.

மியூச்சுவல் ஃபண்ட் மூலம் 10 ஆண்டு கழித்து கிடைக்கும் தொகை - ரூ.1,55,29,241.

அதாவது, எஃப்.டி.யைவிட மியூச்சுவல் ஃபண்டில் நீங்கள் முதலீடு செய்வதால் உங்களுக்குக் கூடுதலாகக் கிடைக்கும் லாபம் ரூ.61,43,554 ஆகும்.

மியூச்சுவல் ஃபண்ட்
மியூச்சுவல் ஃபண்ட் | SIP

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் வங்கி எஃப்.டி.யைவிடக் கூடுதலாக ரூ.61 லட்சம் கிடைப்பது மகிழ்ச்சியான விஷயம்தான். ஆனால், மியூச்சுவல் ஃபண்ட் மூலம் கிடைக்கும் லாபத்திற்கு மூலதன ஆதாய வரி 12.5% வரி கட்ட வேண்டுமே என்று நீங்கள் கேட்கலாம். சரியான கேள்விதான். வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள் வங்கி எஃப்.டி.யில் பணத்தைப் போட்டுவைத்துக் கிடைக்கும் லாபத்துக்கு எந்த வரியும் கட்ட வேண்டியதில்லை. ஆனால், மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டின் மூலம் கிடைக்கும் லாபத்துக்கு வரி கட்டித்தான் ஆகவேண்டும். சரி, அந்த மூலதன ஆதாய வரித் தொகையாக எவ்வளவு கட்ட வேண்டும்?

ரூ.61,43,554 லாபத்துக்கு 12.5% மூலதன ஆதாய வரியாக எவ்வளவு கட்ட வேண்டும்? ரூ.7,67,944-யை மூலதன ஆதாய வரியாக கட்டவேண்டும். இந்த வரித் தொகையை மியூச்சுவல் ஃபண்ட் மூலம் கிடைக்கும் லாபத்திலிருந்து கழித்தால் எவ்வளவு கிடைக்கும்?

ரூ.61,43,554 - ரூ.7,67,944 = ரூ.53,75,610...

வருமான வரி
வருமான வரி

ரூ.53 லட்சம் அதிகமாகக் கிடைக்கிறது என்பதும் மகிழ்ச்சியான செய்திதான். ஆனால், மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு செய்யும்போது கரன்ஸி ரிஸ்க் இருக்கிறதே என்று சிலர் கேட்கலாம்.

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு குறைவதைத் தடுக்கும் சக்தி நம் கையில் இல்லை. அது நமது மத்திய அரசின் கையில்தான் இருக்கிறது. கடந்த காலத்தில் ஆண்டுக்கு சராசரியாக 3% வரை ரூபாய் மதிப்பு இழந்திருக்கிறது. இனிவரும் நாள்களில் நமது மத்திய அரசாங்கம் மிகத் திறமையாக செயல்பட்டால், இந்த மதிப்பு இழப்பை 1% - 2% வரை குறைக்கலாம்! அப்படிக் குறைவான மதிப்பு இழப்பை நம் ரூபாய் சந்திக்கும்பட்சத்தில் நாம் அதிகமான பணத்தை இழக்க வேண்டிய அவசியம் இருக்காது! தவிர, அமெரிக்க - ஈரான் போர் காரணமாகத்தான் ரூபாய் மதிப்பு குறைந்து வருகிறது. இந்தப் போர் சீக்கிரமே முடிவுக்கு வந்தால், ரூபாய் மதிப்பு குறைவது வெகுவாகக் குறையும்!

எல்லா விஷயங்களையும் தாண்டி, மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு ஏற்றதுதானா என்று கேட்டால், நிச்சயம் ஏற்றதுதான் என்று சொல்லலாம். நீண்ட காலத்தில் நஷ்டம் வருவதற்கு வாய்ப்பே இல்லை. எப்போது வேண்டுமானாலும் பணத்தைத் திரும்ப எடுத்துக்கொள்ளலாம் எனப் பல பாசிட்டிவ்-ஆன விஷயங்கள் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் இருக்கும், அந்த வாய்ப்பை முழுவதுமாகத் தவிர்ப்பது புத்திசாலித்தனம் இல்லை அல்லவா?

ஆக, வங்கி எஃப்.டி.யும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டையும் ஒப்பிட்டுப் பார்த்தால், வங்கி எஃப்.டி மூலம் கிடைக்கும் லாபத்தைவிட மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டின் மூலம் கிடைக்கும் லாபம் நிச்சயம் அதிகம் என்பது தெளிவாகத் தெரியும். வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள் தங்களிடம் இருக்கும் பணத்தில் 50 சதவிகிதத்தையாவது மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்ய இனியும் தயங்கக் கூடாது!

முதலீடு

முதலீட்டு ஆலோசனை வேண்டுமா?

வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள் தங்கள் முதலீட்டை சரியானபடி அமைத்துக்கொள்ள 'லாபம்' மியூச்சுவல் ஃபண்ட் டிஸ்ட்ரிபியூஷன் நிறுவனம் முதலீட்டு ஆலோசனை தருகிறது. உங்களுக்கும் முதலீட்டு ஆலோசனை வேண்டும் எனில், பின்வரும் லிங்கினைக் கிளிக் செய்து, உங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்ளுங்கள்...

NRI Calendly - https://calendly.com/calendar-labham/schedule-call-with-labham-nri

இது வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களுக்கான சிறப்பு ஏற்பாடு என்பதால், அவர்கள் மட்டுமே இந்த காலண்டி லிங்க்கில் தங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்ளலாம். இந்தியாவில் வசிப்பவர்கள் இதில் தங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்ள வேண்டாம் எனத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்!

லாபம் வாட்ஸ் அப் குரூப்பில் இணைய விருப்பமா? இந்த லிங்க்கை கிளிக் செய்யுங்கள்!

https://labham.money/events/webinar-apr18-2026?utm_source=labham_whatsapp&utm_medium=whatsapp_group&utm_campaign=webinar_apr18_2026

Labham Youtube Video: www.youtube.com/@labham_money

Labham Website: https://labham.money/tamil

'மின் கட்டணம்: 90% மிச்சப்படுத்தும் சூப்பர் வழி'- மதுரையில் நாணயம் விகடன் விழிப்புணர்வு நிகழ்ச்சி

எப்படி நமக்கான மின்சாரத்தை நாம் உருவாக்க முடியும்? இதற்கு நமக்கு உதவக்கூடியதாக காற்றாலை மற்றும் சூரிய சக்தி போன்ற புதுப்பிக்கத்தக்க ஆற்றல்களிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் முறைகள் உள்ளன.இதில் சூரிய சக... மேலும் பார்க்க

NRI Corner: என்.ஆர்.இ வங்கி எஃப்.டி.யில் ரூ.13.9 லட்சம் கோடி! வெளிநாட்டுத் தமிழர்கள் செய்வது சரியா?

உலகம் முழுக்க உள்ள இந்தியர்கள் பல்வேறு நாடுகளில் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தைப் பத்திரமாக வைத்திருக்க வேண்டும் என்று நினைத்து எதில் முதலீடு செய்கிறார்கள் தெரியுமா?வங்கி பிக்சட் டெபாசிட்டுகளில்தான். உ... மேலும் பார்க்க

40 வயதைக் கடந்துவிட்டீர்களா? 'ஸ்ட்ரெஸ்' இல்லாத முதலீட்டைத் தேடுபவர்களுக்கு - Multi Asset Fund!

காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை ஓயாத ஓட்டம். லேப்டாப், டார்கெட், மீட்டிங், இஎம்ஐ, அதோடு குழந்தைகளின் கல்லூரிச் செலவுகள் என ஒரு பரபரப்பான வாழ்க்கை. 40 வயதைத் தொடும்போதுதான் பொறுப்புகளின் முழுப் பளுவும்... மேலும் பார்க்க

₹5 கோடி ஓய்வுக்கால நிதி: NRI-களுக்கான ரகசிய முதலீட்டு வரைபடம்!

வெளிநாட்டில் வேலை பார்க்கும் நம்மவர்களில் பலரிடம் ஒரு விசித்திரமான முரண்பாடு உண்டு. சம்பாத்தியம் என்னவோ பல லட்சங்களைத் தாண்டும்; ஆனால், முதலீடு என்று வரும்போது மட்டும் அதீத பாதுகாப்பைத் தேடிப் பழைய கா... மேலும் பார்க்க

Women Investors: சம்பாதித்தும் உங்களுக்கெனப் பணமில்லையா? உழைக்கும் பெண்கள் செய்யும் மிகப்பெரிய தவறு!

பணம் சம்பாதிப்பதற்கும், செல்வத்தை உருவாக்குவதற்கும் ஒரு பெரிய வித்தியாசம் இருக்கிறது. வேலைக்குச் செல்லும் பெரும்பாலான பெண்களுக்கு இது தெரிவதில்லை.மாதச் சம்பளம் கையில் கிடைக்கும்போது ஒரு தற்காலிக சுதந்... மேலும் பார்க்க

Labham: என் வயது 30... கடன் பத்திரங்களில் முதலீடு செய்தால் லாபம் கிடைக்குமா?

கடன் பத்திரங்களில் (Bonds) முதலீடு பற்றி பலரும் விசாரித்து வருகிறார். கடன் பத்திரங்களில் முதலீடு செய்தால் எந்த ரிஸ்க்கும் இல்லாமல் லாபத்தை அள்ளிவிடலாம் என சில யூடிபர்கள் வீடியோ வெளியிட, அதைப் பார்த்த ... மேலும் பார்க்க