செய்திகள் :

ஏப்ரல் 1-ம் தேதி முதல் 'இந்த' அனைத்து இடங்களிலும் பான் கார்டு அவசியம்!

post image

வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் புதிய வருமான வரிச் சட்டம் அமலுக்கு வர உள்ளது.

அதன் கீழ், சில நடைமுறைகள் மாறும் அல்லவா? அப்படிப் பான் கார்டு எங்கெங்கு தேவை என்பதைப் பார்க்கலாம்... வாங்க...

1. முன்பு, ஒரே நாளில் ரூ.50,000-க்கு மேல் வங்கியில் இருந்து பணம் எடுத்தால் பான் கார்டு தேவை.

ஆனால், இனி ஒரு நிதியாண்டில் ரூ.10 லட்சம் அல்லது 10 லட்சத்திற்கு மேல் ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுத்தால்தான் பான் கார்டு தேவை.

பான் கார்டு
பான் கார்டு

2. முன்பு, எந்த வாகனம் வாங்கினாலும் பான் கார்டு கட்டாயம் அவசியம்.

ஆனால், வருகிற ஏப்ரல் 1-ம் தேதி முதல், நீங்கள் வாங்கும் வாகனத்தின் மதிப்பு ரூ.5 லட்சத்தைத் தாண்டினால் மட்டுமே பான் கார்டு அவசியம்.

மேலும், அதிக மதிப்புள்ள இரு சக்கர வாகனங்கள் வாங்கும்போதும் பான் கார்டு அவசியம்.

இதற்கு டிராக்டர்கள் மட்டும் விதிவிலக்கு.

3. புதிய வருமான வரிச் சட்டத்தின் படி, ஹோட்டல், உணவகங்கள், அரங்குகள், ஈவென்ட் மேனேஜர்களுக்குக் கொடுக்கும் பேமென்ட் ரூ.1 லட்சத்தைத் தாண்டினால் பான் கார்டு காட்ட வேண்டும்.

தற்போதைய நடைமுறையில் பேமென்டில் ரூ.50,000 தாண்டினால் பான் கார்டு காட்ட வேண்டும்.

4. ரியல் எஸ்டேட்டில் ரூ.20 லட்சத்திற்கு மேல் மதிப்புள்ள நிலம் அல்லது வீட்டை வாங்கினாலோ, பரிசாகப் பெற்றாலோ பான் கார்டு தேவை.

முன்பு, இந்த லிமிட் ரூ.10 லட்சமாக இருந்தது.

5. இனி அனைத்து காப்பீட்டுத் திட்டங்களுக்கும் பான் கார்டு கட்டாயம் தேவை.

கலைஞர் உரிமைத் தொகை: ``வங்கி கணக்கில் ரூ.5000" - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

தமிழ்நாட்டில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் முதல்வர் ஸ்டாலினால் தொடங்கப்பட்டது. அதன் அடிப்படையில், ஒவ்வொரு மாதமும் பெண்களுக்கு மாதம் ரூ.1000 வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில... மேலும் பார்க்க

தவெக: சேலம் விஜய் சந்திப்பு; 51 நிபந்தனைகள்; 5,000 பேருக்கு அனுமதி; செங்கோட்டையன் சொல்வது என்ன?

சேலத்தில் தவெக தலைவர் விஜய் பிரசாரக் கூட்டத்திற்குக் கடந்த டிசம்பர் மாதம் அனுமதி கேட்டு தவெக-வினர் போலீஸில் மனு அளித்திருந்தனர். ஆனால், பாதுகாப்புக் காரணங்களுக்காக அந்தக் கூட்டத்துக்கு போலீஸார் தரப்பி... மேலும் பார்க்க

`டி.என்.பி.எஸ்.சி.யில் அரசியல் தலையீடா?' - முன்னாள் தலைவர் ஆர்.நடராஜ் என்ன சொல்கிறார்?

கடந்த ஞாயிற்றுக் கிழமை டி.என்.பி.எஸ்.சி திட்டமிட்டிருந்த குரூப் 2 தேர்வு தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன் ரத்து செய்யப்பட்ட‌ நிலையில், தேர்வாணையத்தின் முன்னாள் தலைவரும் ஓய்வு பெற்ற காவல்துறை அத... மேலும் பார்க்க

TNPSC: நிரப்பப்படாத பதவிகள், ஆளுநர்; அரசு மோதல் - சரி செய்யப்பட வேண்டியது தேர்வாணையம்தான்!

கடந்த ஞாயிற்றுக் கிழமை டி.என்.பி.எஸ்.சி.யின் குரூப் 2 தேர்வு ரத்தானது அல்லவா? தேர்வாணைய வரலாற்றிலேயே தேர்வு நாள் அன்று காலையில் தேர்வு ரத்தாவது இதுதான் முதல் முறை. 'தொழில்நுட்பக் கோளாறு, தவறுக்கு வருந... மேலும் பார்க்க

TNPSC: `தேர்வு ரத்து பெரும் வலி; டிஎன்பிஎஸ்சி அதிகாரிகளுக்கு அது ரொம்பவே புரியும், ஏன்னா?'

தமிழ்நாட்டில் நேற்று டி.என்.பி.எஸ்.சி.யின் குரூப் 2 மற்றும் 2 ஏ தேர்வுகள் ரத்து செய்யப்பட, 'தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தவறு நிகழ்ந்து விட்டது, வருந்துகிறோம்' என ஒற்றை வார்த்தையில் அறிவித்து விட்டது ... மேலும் பார்க்க

கொத்தடிமை முறை எனும் `கொடுங்கோன்மை' - சட்டமியற்றி 50 ஆண்டுகளாகியும் தொடரும் அவலம்! - விடிவு எப்போது?

`இந்தியா ஒரு சுதந்தி நாடு'... 79-வது ஆண்டை நோக்கி, இதே வாசகத்தை உணர்வுபூர்வமாகச் சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மையில் இந்த தேசம் அனைவருக்குமான சுதந்திர பூமியா எனக் கேட்டால்.... மிகப்பெரிய கேள்வி... மேலும் பார்க்க