செய்திகள் :

"ஒரு பக்க மீசையை எடுத்துக் கொள்கிறேன்..!" - ஆதவ் அர்ஜூனாவுக்கு ரிப்ளை கொடுத்த ஆர்.எஸ்.பாரதி

post image

சென்னை ஆர்.கே. நகரில் நடைபெற்ற தவெக-வின் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, "மேயர் பிரியா, நமது சகோதரி பல்லவிக்கு ஒரு மெழுகுவர்த்தியைக் கூட கொடுக்காமல் அவமானப்படுத்தியிருக்கிறார்.

ஆதவ் அர்ஜுனா
ஆதவ் அர்ஜுனா

இப்போது உதயநிதி ஸ்டாலினுக்கு ஒரு சவால் விடுகிறேன். இன்னும் 8 மாதங்களில் உள்ளாட்சித் தேர்தல் வரவிருக்கிறது. இதில் 25-ல் 1 மேயர் இடத்தையாவது வென்று காட்டுங்கள்" எனப் பேசியிருந்தார்.

இதற்கு திமுக-வைச் சேர்ந்த பலரும் ஆதவ் அர்ஜுனாவுக்குப் பதில் கொடுத்து வருகிறார்கள்.

இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, "ஸ்டாலினுக்கோ, உதயநிதி ஸ்டாலினுக்கோ சவால் விடும் தகுதி ஆதவ் அர்ஜுனாவுக்குக் கிடையாது.

ஒரு இடத்திலாவது ஜெயிக்க முடியுமா என ஆதவ் அர்ஜுனா கேட்கிறார். அவர் வரலாறு தெரியாமல் பேசிக்கொண்டிருக்கிறார்.

1984-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, 1986-ஆம் ஆண்டில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது.

ஆர்.எஸ். பாரதி
ஆர்.எஸ். பாரதி

அதில் 102 நகராட்சிகளில், 90 நகராட்சிகளில் எங்களுடைய கூட்டணி வெற்றி பெற்றது. அதில் நானும் வெற்றி பெற்றிருந்தேன்.

மக்கள் இப்போதே, தெரியாமல் தவெக-வுக்கு வாக்குச் செலுத்திவிட்டோம் எனப் பேசத் தொடங்கிவிட்டனர்.

முடிந்தால் ஆறு மாதத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துங்கள். ஒரு மேயர் பதவியையாவது தவெக வென்றால், நான் ஒரு பக்க மீசையை எடுத்துக் கொள்கிறேன்" எனக் கூறியிருக்கிறார்.

'அண்ணாமலை இயக்கத்திற்கு ரஜினி ஆலோசனையா?' - லதா ரஜினிகாந்த் பதில்

நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் 'மக்கள் மேடை' என்ற இயக்கத்தைக் கடந்த மார்ச் மாதம் தொடங்கினார். இது தொடர்பான காணொளியை இரண்டு தினங்களுக்கு முன்பு லதா ரஜினிகாந்த் பதிவிட்டிருந்தார். பாஜகவிலிரு... மேலும் பார்க்க

மீண்டும் உயர்ந்தது வீட்டு உபயோக சிலிண்டர் விலை; அதிர்ச்சியில் மக்கள் | Live Updates

மீண்டும் உயர்ந்தது LPG சிலிண்டர் விலை!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் காரணமாக சர்வதேச அளவில் எரிசக்தி விநியோகம் பாதிக்கப்பட்டு, அதன் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, ... மேலும் பார்க்க

`தமிழக வெற்றிக் கழகத்திற்கு கொள்கை, கோட்பாடு எல்லாம் ஒன்றும் கிடையாது’ - சி.பி.ஐ., முத்தரசன்

தேனி மாவட்டம், போடிநாயக்கனூரில் தனியார் வாகன பயிற்சி மையத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் முத்தரசன் தொடங்கி வைத்தார். அதன்பின் முத்தரசன் செய்தியாளர்களை சந்தித்து பேசும் போது , “ இந்தியா கூட்ட... மேலும் பார்க்க

CJP: கரப்பான் பூச்சி ஜனதா கட்சி; அமைதியாக நடந்து முடிந்த போராட்டம்; 6 பேர் கைது!

டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் காக்ரோச் ஜனதா கட்சியின் ஆதரவாளர்கள் சார்பில் இன்று (ஜூன் 6, 2026) பிரம்மாண்ட கண்டனப் போராட்டம் நடைபெற்றது. நாட்டின் கல்வி முறையில் நிலவி வரும் குளறுபடிகளுக்கு எ... மேலும் பார்க்க

'தமிழகத்தை ஆளும் கவர்ச்சிக் கூட்டம்; உள்ளாட்சித் தேர்தலில் பதிலடி!' - சூளுரைத்த நேரு, பிரியா!

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் மறைந்த தலைவருமான கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் பிறந்தநாள் விழா சென்னையில் ராஜா அண்ணாமலை மன்றத்தில் இன்று கொண்டாடப்பட்டது. அதில் தூய்மை... மேலும் பார்க்க

'டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல் நடந்துள்ளது' - அமைச்சர் விக்னேஷ் பகீர் குற்றச்சாட்டு

கோவை ஈச்சனாரி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் விக்னேஷ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "போதைப்பொருள் இல்லாத தமிழ்நாட்... மேலும் பார்க்க