செய்திகள் :

'ஒரே ஒரு தொகுதியிலாவது தனிச்சின்னம்...' - கூடிப் பேசி முடிவெடுத்த வைகோ? - ஏற்குமா அறிவாலயம்?

post image

திமுக உடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திடீரென ஒரு அவசர உயர்நிலைக் குழுவை கூட்டி கூட்டணி விவகாரங்கள் குறித்து நீண்ட நேரம் ஆலோசனை செய்திருக்கிறார். ஆலோசனையின் முடிவில் தொகுதிப் பங்கீடு சார்ந்து ஒரு முக்கிய முடிவை வைகோ எடுத்திருப்பதாக தாயகத்தினர் கிசுகிசுக்கின்றனர்.

துரை வைகோ
துரை வைகோ

திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பற்றி பேச மதிமுக அவைத் தலைவர் அர்ஜூன ராஜ் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டிருந்தது. அந்தக் குழு திமுகவின் தொகுதி பங்கீடு குழுவுடன் கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி அறிவாலயத்தில் கூடி பேசியது.

பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த அர்ஜூனராஜ், 'ஒரு ராஜ்யசபா சீட் கேட்டிருக்கிறோம். தனிச்சின்னத்தில் போட்டியிட முடிவு செய்திருக்கிறோம்' என்றார். ஆனால், மதிமுகவின் கோரிக்கைகளை திமுக ஏற்றுக்கொண்டதாக தெரியவில்லை. குறிப்பாக, மதிமுக கடந்த தேர்தலைப் போல இந்த முறையும் உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிட வேண்டுமென திமுக விரும்புவதாக தெரிகிறது. இதைத் தொடர்ந்து பிப்ரவரி 28 ஆம் தேதி வைகோவே அறிவாலயத்தில் முதல்வரை சந்தித்து தங்களின் கோரிக்கைகள் குறித்து பேசியிருந்தார். அதன் பிறகும் இருதரப்புக்கும் உடன்பாடு எட்டப்படவில்லை.

உயர்நிலைக் குழு
உயர்நிலைக் குழு

இந்நிலையில்தான், இன்று மதிமுகவின் தலைமை அலுவலகமான தாயகத்தில் உயர்நிலை குழு கூட்டத்தை வைகோ நடத்தியிருந்தார். இரண்டு மணி நேரத்துக்கு மேலாக நடந்த அந்தக் கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக கூறுகின்றனர் மதிமுகவினர்.

கூட்டத்தில் என்ன பேசப்பட்டது என விசாரித்தோம். 'திமுக நாங்கள் உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது. அதேமாதிரி, எண்ணிக்கையிலும் கறார் காட்டுகிறார்கள். இது கொள்கைப் பிடிப்போடு அமைந்திருக்கும் கூட்டணி அதனால் எண்ணிக்கையில் கூட சமரசம் செய்யலாம். ஆனால், தொடர்ந்து அடுத்தடுத்த சட்டமன்றத் தேர்தல்களில் சொந்த சின்னத்தில் நிற்காமல் போவது கட்சியை மேலும் பலவீனமடையச் செய்யும். இருக்கிற நிர்வாகிகளும் தொண்டர்களுமே சோர்வாகிவிடுவார்கள். அதனால் திமுக ஒதுக்குகிற சீட்களில் ஒரே ஒரு சீட்டில் மட்டுமாவது தனிச்சின்னத்தில் போட்டியிட வேண்டுமென நாங்கள் விரும்புகிறோம். அதைத்தான் கூட்டத்திலும் பேசி முடித்திருக்கிறோம்' என்றனர்.

ஒரே ஒரு சீட்டிலாவது தனிச்சின்னத்தில் நிற்க வேண்டும் என்கிற மதிமுகவினரின் கோரிக்கையை அறிவாலயம் ஏற்றுக்கொள்ளுமா?

விஜய்க்கு எதிராக யாரை நிறுத்துவது? - தி.மு.க முகாமில் நடக்கும் டிஸ்கஷன்!

த.வெ.க தலைவர் விஜய் வரும் சட்டமன்ற தேர்தலில் எங்கு போட்டியிடுவார் என்கிற பரபரப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் பலமாக எழுந்துள்ளது. இந்நிலையில் த.வெ.க தரப்பில் தமிழகம் முழுவதும் நடத்திய சர்வேயில் த.வெ.கவ... மேலும் பார்க்க

LPG விலை உயர்வு: ``உண்மையிலேயே தட்டுப்பாடு உள்ளதா அல்லது..." - மம்தா பானர்ஜி எழுப்பும் கேள்வி!

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், இந்தியாவில் சமையல் எரிவாயு (LPG) விலை உயர்ந்து வருகிறது. சிலப் பகுதிகளில் பற்றாக்குறையும் ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில், மேற்கு வங்க ... மேலும் பார்க்க

இந்தியா வந்துகொண்டிருந்த சரக்குக் கப்பல் மீது தாக்குதல்: ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் போரால் பதற்றம்!

ஈரான் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் இணைந்து போர் தொடுத்த நிலையில், மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் நீடிக்கிறது. 10 நாள்களைக் கடந்து போர் தொடர்ந்துவரும் நிலையில், உலகின் பல்வேறு பகுதிகளில் எரிவாய... மேலும் பார்க்க

விமர்சிக்கப்பட்ட‌ ராஜ்ய சபா வருகை விவகாரம்: `சம்பளம் வாங்க மட்டுமே சபைக்கு போகல!' - அன்புமணி தரப்பு

தமிழ்நாட்டிலிருந்து நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் டாக்டர் அன்புமணி. அதிமுக சார்பில் இரண்டு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கலாம் என இருந்த நிலையில், ஒரு இடத்தை அன்புமண... மேலும் பார்க்க

`தடைபோடும் எ.வ.வேலு; சிதைக்கப்படும் இஸ்லாமியர் பிரதிநிதித்துவம்’ - ஆட்டம் காணும் ஆம்பூர் தொகுதி

திருப்பத்தூர் மாவட்டத்தில், பிரியாணிக்குப் பெயர்போன ஆம்பூர் சட்டமன்றத் தொகுதியில் பட்டியலின மக்களும், இஸ்லாமியர்களுமே வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கின்றனர். ஆனால், `இந்த இரண்டு சமூக... மேலும் பார்க்க

கம்யூனிஸ்டுகளின் 'இரட்டை இலக்கு' கனவும் ஸ்டாலினின் 'கறார்' முடிவும்! - எப்போ முடியும் பங்கீடு?

தமிழக தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு விவகாரம் பெரும் பேசுபொருளாக மாறியிருக்கிறது.கதர் சட்டைகளுடன் இழுபறி ஒருவழியாக முடிவுக்கு வந்த நிலையில், தற்போ... மேலும் பார்க்க