செய்திகள் :

``ஒற்றுமையாக இருந்தோம்; பிரச்னைக்கு பணமே காரணம்; தங்கம் அவர் வீக்னஸ்"- ராதா புகார் குறித்து அம்பிகா

post image

பிரபல நடிகை அம்பிகா மீது அவரது சகோதரியும் பிரபல நடிகையுமான ராதா செக் மோசடி புகார் ஒன்றை சில முன்புகளுக்கு முன்பு கொடுத்திருந்தார்.

அந்தப் புகாரில் 46 கோடி ரூபாய் காசோலை மோசடி செய்ததாக அம்பிகா மீது குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.

இந்நிலையில் நடிகை அம்பிகா இந்தக் குற்றச்சாட்டிற்கு விளக்கம் அளித்திருக்கிறார்.

நடிகை ராதா
நடிகை ராதா

செய்தியாளர்களைச் சந்தித்த பேசிய அம்பிகா, "என்னுடைய சகோதரி சில தினங்களுக்கு முன்பு என் மீது புகார் கொடுத்திருக்கிறார்.

எனக்கு கொடுக்க வேண்டிய பணத்துக்கு ராதா கொடுத்த 3 காசோலைகள் பவுன்ஸ் ஆகிவிட்டன.

சொத்து தகராறை தீர்க்க காசோலை தந்தது ராதாதான்; அதை நிறுத்தியதும் அவர்தான்; காசோலை மோசடி செய்ததற்காக ராதா மீது நான்தான் புகார் கொடுத்திருக்க வேண்டும்.

தங்கம் என்றால் என் சகோதரிக்கு வீக்னெஸ். என்னுடைய தங்கம் அவரிடம் நிறைய உள்ளது.

ஏ.ஆர்.எஸ் கார்டன் எம்.ஜி.ஆர் கொடுத்தது என்பது தவறானது. அது உழைப்பில் வாங்கியது.

அந்த ஏ.ஆர்.எஸ். கார்டனின் மெயின் ஃபவுன்டேஷன் நான் தான். நான் ஏ.ஆர்.எஸ்.கார்டனை விற்க மாட்டேன், விற்பனை செய்யவும் விட மாட்டேன்.

அம்பிகா
அம்பிகா

என் மீதானப் புகார் வேடிக்கையாக இருக்கிறது. புகார் அளித்திருப்பது அதிர்ச்சியாகவும் உள்ளது.

மனிதனுக்கு எவ்வளவு கிடைத்தாலும் போதும் என நினைக்காத ஒரு விஷயம் பணம் தான்.

நானும் என் சகோதரியும் ஒரே மாதிரி தான் உடை அணிவோம். ஒற்றுமையாக இருந்த சகோதரிகள் இடையே பிரச்சனை வர பணம் தான் காரணம்.

எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம். கடவுள் உதவி செய்வார்" என்று பேசியிருக்கிறார்.

BB Varshini: `குறும்படம் எடுப்பதாக இளைஞரிடம் பணம் பறித்துத் தாக்கிய புகார்' - பிக்பாஸ் வர்ஷினி கைது!

பிக்பாஸ் பிரபலம் வர்ஷினி வெங்கட் பணமோசடி மற்றும் மிரட்டல் புகார் தொடர்பாக சென்னையில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.பிக்பாஸ் 8வது சீசனில் வைல்டு கார்டு என்ட்ரி மூலம் சென்றவர் நடிகை வர்ஷினி வெங்கட். சினிமாவில்... மேலும் பார்க்க

Bigg Boss Tamil: "ல‌க்ஷ்மி பிரியாவுக்கு சேனலில் நல்ல செல்வாக்குனு சொல்றாங்க‌"- ஆனந்தி அம்மா பேட்டி

19 போட்டியாளர்களுடன் விஜய் டிவியில் செப்டம்பர் 6ம் தேதி தொடங்கிய பிக்பாஸ் சீசன் 10 விறுவிறுப்படையத் தொடங்கியிருக்கிறது.உடல் நலனைக் கருத்தில் கொண்டு பிளாக் பாண்டி நிகழ்ச்சி தொடங்கிய சில தினங்களிலேயே வெ... மேலும் பார்க்க

BB Tamil 10: மிருகத்தனத்தை வெளிப்படுத்தியது யார்? மணிவண்ணன் எலிமினேஷன் - இது சரியா பாஸ்? | 2nd Week

இரண்டாம் வாரம் நடந்தது என்ன?BB Tamil 10காமன்மேன் சுற்றில் தகுதி பெற்று பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த மணிவண்ணன் இந்த வாரம் வெளியேற்றப்பட்டிருக்கிறார். சில இடங்களில் இடக்காக பேசி மாட்டிக் கொண்டாலும் வீட்ட... மேலும் பார்க்க

BB Tamil 10: 'சர்ப்ரைஸா இருக்கட்டும்னு நினைச்சோம், கடைசியில பெரிய ஷாக்!' - அவினாஷ் அம்மா

'ஆளாளுக்கு சர்ப்ரைஸ் பண்றேன்னு கிளம்பி கடைசியில் ஷாக் ஆனதுதான் மிச்சம்' என்கிறார் பிக்பாஸ் சீசன் 10 ல் ஒரு போட்டியாளராக இருக்கும் அவினாஷின் அம்மா.பிக்பாஸ் அறிமுக மேடையில் அவினாஷும் அவரது சகோதரி அக்ஷித... மேலும் பார்க்க

இப்ப என்ன பண்றாங்க? : "லைம்லைட்ல இல்லாத எனக்கு அவர் அதை பண்ணனும்னு அவசியம் இல்ல!" - நடிகை ஐஸ்வர்யா

`அண்ணாமலை' தொடரின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஐஸ்வர்யா. திருமணத்திற்கு பிறகு நடிப்பிலிருந்து விலகியவர் வெளிநாட்டில் தற்போது குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவரிடம் பேசினோம்.ஐஸ்வர்யா" நான்... மேலும் பார்க்க

BB Tamil 10: `தீவிரமடைந்த ஆனந்தி, லட்சுமி பிரியா மோதல்' - பிக் பாஸில் இன்று!

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி முதல் வாரத்தைக் கடந்து இரண்டாவது வாரமாக ஒளிப்பரப்பாகி வருகிறது. முதல் வாரத்தில் நாமினேஷன் பட்டியலில் முனியம்மா, சவின்யா, தன்யா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இதில் சக போட்டிய... மேலும் பார்க்க