செய்திகள் :

ஓசூர், கோயம்புத்தூர், மதுரைக்கு மெட்ரோ - வேறு என்ன கோரிக்கை? நிர்மலா சீதாராமன் - விஜய் சந்திப்பு!

post image

இந்திய பிரதமர் மோடியை சந்தித்த கையோடு, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனையும் சந்தித்தார்.

இந்தச் சந்திப்பில் விஜய் வைத்த கோரிக்கை குறித்த அறிக்கை..

"மாண்புமிகு ஒன்றிய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்களை இன்று (27.05.2026) புதுதில்லியிலுள்ள அவரது அலுவலகத்தில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார்.

நிர்மலா சீதாராமன் - விஜய்
நிர்மலா சீதாராமன் - விஜய்

இச்சந்திப்பின்போது, விரைவான வளர்ச்சியைப் பெற்றுவரும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது என்றும், இத்தகைய வளர்ச்சியை மேலும் ஊக்குவிக்கும் வகையில், முக்கிய உட்கட்டமைப்புத் திட்டங்களில் முதலீடு செய்வது இன்றியமையாதது என்பதால்,

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள், இரயில்வே திட்டங்கள், தொழில் வழித்தடங்கள் ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளித்து நிதி ஒதுக்கீடு செய்திட வேண்டுமென்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கேட்டுக்கொண்டார்.

தமிழ்நாட்டின் வலுவான கல்விச் சூழலை மேலும் வலுப்படுத்த, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்களை (Institutes of National Importance) தமிழ்நாட்டில் நிறுவிடவும், தமிழ்நாட்டின் பொருளாதாரத்திலும், தொழில் வளர்ச்சியிலும் முக்கியப் பங்காற்றி வரும் ஓசூர், கோயம்புத்தூர் மற்றும் மதுரை ஆகிய நகரங்களின் பொதுப் போக்குவரத்தினை மேம்படுத்திடத் தேவையான மெட்ரோ இரயில் திட்டங்களைச் செயல்படுத்துவதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடு செய்திடுமாறும் மாண்புமிகு ஒன்றிய நிதியமைச்சர் அவர்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கேட்டுக்கொண்டார்".

'பாட்டிலுக்கு 10 ரூபாய்...' - ஒரு டாஸ்மாக் ஊழியரின் லஞ்ச கதை!

`பாட்டிலுக்கு 10 ரூபாய்...' என தேர்தல் பிரசாரத்தின் போது கரூரில் விஜய் பாடியது பயங்கர வைரல். செந்தில் பாலாஜியை நோக்கி விஜய் பாடிய அந்த பாடலை 'செல்பி புள்ள' பாட்டுடன் மிக்ஸிங் செய்து ஆட்டம் போட்டு கொண்... மேலும் பார்க்க

"அமலாக்கத்துறை சோதனை ராகுல் காந்திக்கு பெரிய மனநிறைவை தரும்" - ஆவேசமான பினராயி விஜயன்!

திருவனந்தபுரத்தில் ​தனது வீட்டில் நடத்தப்பட்ட அமலாக்கத்துறை சோதனைக்குப் பிறகு பினராயி விஜயன் வீட்டுக்கு வெளியே வந்து அங்கு கூடியிருந்த தொண்டர்கள் மத்தியில் பேசினார். பினராயி விஜயன் பேசுகையில், ​"அனைவர... மேலும் பார்க்க

"மற்ற கட்சிகளுக்கு எதிராக ED ஊடுருவல் வேண்டும்; இதுவே காங்கிரஸ் நிலைப்பாடு" - பினராயி விஜயன்

கேரளா எதிர்க்கட்சித் தலைவர் பினராயி விஜயன் வீட்டில் இன்று அமலாக்கத்துறை சோதனை நடந்தது. அதனையொட்டி, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையை தமிழ்நாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தமிழாக்கப் படுத்தி தனது எக்ஸ் தளத்தில... மேலும் பார்க்க

'உச்சாணியில் ஏற்றிவிட்ட தமிழகத்திற்கு நன்றிக்கடன் இதுவா?' - விஜய்க்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்

தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டதற்கும், ஆனைமங்கலம் செப்பேடுகள் மீண்டும் இந்தியா வந்தது குறித்தும் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் வாயைத் திறக்கவில்லை என்று பாஜக மாநில தலைவர் நய... மேலும் பார்க்க

குப்பை மேலாண்மை: "கடந்த காலத்திலிருந்து பாடம் படிங்க" - தவெக MLA-வுக்கு பூவுலகின் நண்பர்கள் பதில்!

திருச்சி அரியமங்கலம் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளை அகற்றுவதற்காக, துவாக்குடி அருகே உள்ள சுமார் 1700 அடி ஆழமுள்ள பாறைப் பள்ளத்தில் குப்பைகளை கொட்டினால் எந்த பாதிப்பும் ஏற்படாது என தவெக திருவெறும்பூர்... மேலும் பார்க்க

`ஆளுநரே பல்கலைகக்கழகங்களின் வேந்தரா? 'பாஜக-வுக்கு ஒத்து ஊதும் காங்கிரஸ் கட்சி' - பொன்முடி சாடல்

தமிழ்நாட்டின் தற்போதைய உயர் கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் இன்று, "முதலமைச்சரே பல்கலைக்கழகங்களின் வேந்தர் என்ற நிலைப்பாடு முந்தைய அரசினுடையது. எங்கள் அரசு பொறுப்பேற்ற பிறகு கொள்கை முடிவுகளை முதலமைச்... மேலும் பார்க்க