செய்திகள் :

கட்சியில் சேர்ந்த மூன்றே மாதத்தில் அமைச்சரை வீழ்த்தி அமைச்சரானார்! - யார் இந்த லோகேஷ் தமிழ்செல்வன்?

post image

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் (தனி) தொகுதி த.வெ.க வேட்பாளராக களமிறங்கிய லோகேஷ் தமிழ்செல்வன், தி.மு.க அமைச்சர் மதிவேந்தனை தோற்கடித்து வெற்றி வாகைச் சூடினார். தமிழ்நாடு அரசின் பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை அமைச்சராக இன்று பதவியேற்றுக் கொண்டுள்ளார்.

யார் இந்த லோகேஷ் தமிழ்செல்வன்?

அ.தி.மு.க - வைச் சேர்ந்த முன்னாள் சபாநாயகர் தனபாலின் மகனான லோகேஷ் தமிழ்செல்வன், அ.தி.மு.க- வில் இணைத்துக் கொண்டு அரசியலில் ஈடுபட்டு வந்தவர். 2024- ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் நீலகிரி நாடாளுமன்ற ( தனி) தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளராக போட்டியிட்டு தி.மு.க வேட்பாளர் ஆ. ராசாவிடம் வெற்றி வாய்ப்பை இழந்தார்.

அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன்

அ.தி.மு.க- வின் மூத்த நிர்வாகிகளில் ஒருவரும் முன்னாள் சபாநாயகருமான தன்னுடைய தந்தை தனபாலுக்கு கட்சிக்குள் போதிய மரியாதை இல்லையெனக் கூறி கடந்த பிப்ரவரி மாதம் அக்கட்சியில் இருந்து வெளியேறினார். உடனடியாக த.வெ.க- வில் தன்னை இணைத்துக் கொண்ட இவர், ராசிபுரம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பைப் பெற்று வெற்றி பெற்றார். தற்போது ஜோசப் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை அமைச்சராக பதிவேற்றுள்ளார்.

'இதனால்தான் எல்லோரையும் அழைத்து தவெக அமைச்சர் பதவி கொடுக்கிறது' - பிரேமலதா சொல்வது என்ன?

காங்கிரஸ் ஏற்கெனவே த.வெ.க அமைச்சரவையில் இடம் பெற்ற நிலையில் விசிக, ஐயூஎம்எல் போன்ற கட்சிகளுக்கு அமைச்சரவையில் இணைய த.வெ.க சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் ஐயூஎம்எல் கட்சி தாங்கள் அ... மேலும் பார்க்க

``அனுதாப நாடகமா? நான் எளிமையானவன்; ஆனா ஏழை அல்ல.!" - செருப்பு அணியாத தவெக MLA சொல்லும் விளக்கம்

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கே.வி.குப்பம் தொகுதி த.வெ.க எம்.எல்.ஏ தென்றல் குமார் வேட்டி, சட்டை சகிதம் காலில் செருப்புக்கூட அணியாமல் எளிமையான தோற்றத்தில் வலம் வந்துகொண்டிருக்கிறார். பதவியேற்பின்போதும்,... மேலும் பார்க்க

’காங்கிரஸ் புறவாசல் வழியாக அமைச்சரவைக்குள் நுழைந்துள்ளது’– தமிழிசை செளந்தரராஜன் குற்றச்சாட்டு!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பா.ஜ.க மாவட்ட தலைமை அலுவலகத்தில், சட்டமன்றத் தேர்தல் தோல்வி தொடர்பான மையக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொண்ட அக்கட்சியின் மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்,... மேலும் பார்க்க

கோவையில் பாஜக மையக்குழு கூட்டம்: வானதி பகிர்ந்த `மெலோடி' ; அண்ணாமலை ஆதரவு போஸ்டர்களால் சலசலப்பு!

கோவை மாவட்ட பா.ஜ.க அலுவலகத்தில் மாநில நிர்வாகிகள், மாநில அணி தலைவர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிட்ட 26 வேட்பாளர்களுடனான ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. பா.ஜ.க தேசிய அமைப்புச் செயலாளர் பி.எல்.சந்தோஷ்... மேலும் பார்க்க

மருத்துவர் டு மந்திரியான ராஜீவ் - மீண்டும் முக்கியத்துவம் பெறும் திருவாடானை தொகுதி!

ராமநாதபுரம் மாவட்டத்தில் திருவாடானை உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் ராமநாதபுரம், பரமக்குடி, முதுகுளத்தூர் ஆகிய 3 தொகுதிகளில் தி.மு.க வென்றது. எஞ்சிய திருவாடானை தொகுதியில் முதல் முறையாக தமிழ... மேலும் பார்க்க

திருநெல்வேலி: சுட்டிக்காட்டிய விகடன்; புத்துயிர் பெறும் ஆதிதிராவிடர் சமுதாய நலக்கூடம்!

திருநெல்வேலி சந்திப்பிற்கு அருகிலிருக்கும் இரட்டை பாலத்திற்குக் கீழே ஆதிதிராவிடர் சமுதாய நலக்கூடம் இருக்கிறது. இந்தச் சமுதாய நலக்கூடமானது கல்வெட்டு தகவலின்படி ரூ. 30 லட்சம் மதிப்பீட்டில் 7.4.2002இல் த... மேலும் பார்க்க