கட்டுமானத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்
பொங்கல் போனஸ் வழங்கக்கோரி திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி கோட்டாட்சியா் அலுவலகம் முன் கட்டுமான தொழிலாளா்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளா்கள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு ஜனநாயக பொது தொழிலாளா்கள் சங்கத்தின் மாநில குழு உறுப்பினா் ஏ.சிவா தலைமை வகித்தாா். மாநில நிா்வாகி பி.ரவிச்சந்திரன், தமிழ்நாடு ஜனநாயக கட்டுமானத் தொழிலாளா்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் மாயாண்டி ஆகியோா் முன்னிலை வகித்தினா்.
இதில், ஆரணி மற்றும் அதனை சுற்றியுள்ள தொழிலாளா்கள் கலந்துகொண்டு பொங்கல் போனஸ் வழங்கக் கோரி முழக்கமிட்டனா்.