செய்திகள் :

`கனத்த இதயத்துடன் இந்த முடிவை எடுத்திருக்கிறேன்’ - ரஜினி, கமல் படத்திலிருந்து விலகிய சுந்தர்.சி

post image

ரஜினிகாந்த்தை வைத்து அவரது 173-வது படத்தை சுந்தர்.சி. இயக்குவதாகவும், கமல்ஹாசன் அப்படத்தைத் தயாரிப்பதாகவும் அறிவிப்புகள் வெளியானது, கோலிவுட் வட்டாரத்தையே இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

ரஜினியின் 'அருணாச்சலம்' படத்தை இயக்கி பெரிய ஹிட் கொடுத்த சுந்தர் சி, இப்போது மீண்டும் ரஜியை இயக்குவது ரசிகர்களிடையே எதிர்ப்பார்ப்பை எகிறச் செய்திருந்தது. இதை உறுதி செய்யும் வகையில் கமல் - ரஜினி - சுந்தர் சி மூவரும் இணைந்து எடுத்த புகைப்படம் வெளியாகி டாக் ஆஃப் தி டவுனாக இருந்தது. கோலிவுட் வாட்டாரம் முழுவதும் இதுதான் பேச்சாக இருந்தது.

இந்நிலையில் சுந்தர் சி இதிலிருந்து விலகுவதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

இதுகுறித்து சுந்தர் சி வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், "தவிர்க்க முடியாத காரணங்களால் ரஜினியின் 'தலைவர் 173' படத்திலிருந்து விலகுகிறேன். கனத்த இதயத்துடன் இந்த முடிவை எடுத்திருக்கிறேன். கமல் தயாரிப்பில் ரஜினி சாரை வைத்து இயக்குவது என்பது என் சினிமா வாழ்வின் மிகப்பெரிய கனவு.

ஆனால், சில நேரங்களில் நம் வாழ்வில் துரதிஷ்டவசமாக நாம் எதிர்பார்த்த எல்லாமும் நடந்துவிடுவதில்லை. கடந்த சில நாள்களாக இப்படம் குறித்து நாங்கள் மூவரும் பேசிக்கொண்டவை எல்லாம் என் வாழ்வில் மறக்க முடியாத மகிழ்ச்சியான அனுபவமாகும். அதில் பல பாடங்களை நான் கற்றுக் கொண்டேன்.

இருப்பினும், 'தலைவர் 173' படத்திலிருந்து விலகுவது என மிகவும் கடினமான முடிவை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது. இந்த மிகப்பெரிய வாய்ப்பை அளித்த அவர்களுக்கு எனது அன்பும் நன்றியும். அதோடு எனது மன்னிப்பையும் அனைவரிடமும் தெரிவித்துக் கொள்கிறேன்." என்று கூறியிருக்கிறார்.

Parasakthi: ''வாழ்க்கை ஒரு வட்டம்" - யுவன் - பவதாரிணியுடனான நினைவுகளைப் பகிரும் சுதா கொங்கரா

'பராசக்தி' திரைப்படம் அடுத்தாண்டு பொங்கல் ரிலீஸாக திரைக்கு வருகிறது. சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஶ்ரீலீலா ஆகியோர் படத்தில் நடித்திருக்கிறார்கள். ஜி.வி. பிரகாஷ் இசையமை... மேலும் பார்க்க

``அன்னைக்கு 150 ரூபாய் கொடுக்க என் கிட்ட காசு இல்ல''-மிடில் கிளாஸ் அனுபவம் குறித்து சந்தோஷ் நாராயணன்

நகைச்சுவை நடிகர் முனீஷ்காந்த், ஹீரோவாக நடித்துள்ள படம், ‘மிடில் கிளாஸ்’. கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கியுள்ள இதில், விஜயலட்சுமி, காளி வெங்கட், ராதா ரவி, குரேஷி, வேல ராமமூர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்... மேலும் பார்க்க

``இந்த வெற்று மன்னிப்பையெல்லாம் ஏற்றுக் கொள்ள முடியாது" - நடிகை கெளரி கிஷன்

தமிழ்த் திரையுலகில் ‘96’ திரைப்படம் மூலம் அறிமுகமானவர் கௌரி கிஷன். அதன்பிறகு ‘மாஸ்டர்’, ‘கர்ணன்’ போன்ற திரைப்படங்களிலும், மலையாளத் திரைப்படங்களிலும் நடித்துத் பிரபலமானார்.தற்போது ‘OTHERS’ என்ற தமிழ் ப... மேலும் பார்க்க

யூ டியூபில் பேசறதுக்கு திட்டினாங்க‌, இப்ப வெடிகுண்டு மிரட்டல்! - ஏ.எல்.எஸ்.ஜெயந்தி கண்ணப்பன்

சிங்கப்பூரிலிருந்து சென்னை வந்த விமானம், சென்னையில் இயங்கி வரும் சில வெளிநாட்டுத் தூதரங்கங்கள், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி,... மேலும் பார்க்க

"என் தம்பிங்க இல்லனா நான் இல்ல; இந்த சினிமா உலகத்தை அவுங்க தான் காமிச்சாங்க"- கண் கலங்கிய தேவா

பிரபல இசையமைப்பாளரும், தேவாவின் சகோதரருமான சபேஷ் உடல்நலக் குறைவால் கடந்த அக்டோபர் 23 ஆம் தேதி காலமானார். அவருடைய நினைவு அஞ்சலி கூட்டம் நேற்று (நவம்பர் 09) நடைபெற்றது. அதில் சபேஷ் குறித்து பேசிய இசையமை... மேலும் பார்க்க