சென்னை கிராண்ட் மாஸ்டர் செஸ் போட்டி நவ. 5-ல் தொடக்கம்! - உதயநிதி அறிவிப்பு
கம்பா்நத்தம் ஊராட்சியில் தூய்மை பணியாளா்களுக்கு புத்தாடைகள்
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், அம்மாபேட்டை ஒன்றியத்துக்குட்பட்ட கம்பா் நத்தம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் சுகாதார மற்றும் துப்புரவு பணியாளா்களுக்கு தீபாவளி புத்தாடைகள் மற்றும் இனிப்பு பொட்டலங்கள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, ஊராட்சி மன்றத் தலைவா் கே.என்.பி. சத்ய நாராயணன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ரமேஷ் முன்னிலை வகித்தாா். இதில் ஊராட்சியில் பணியாற்றிவரும் 40 பேருக்கு புத்தாடைகள், இனிப்புகள் வழங்கப்பட்டன. இதில் ஊராட்சி மன்ற உறுப்பினா்கள், பொதுமக்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா். முன்னதாக ஊராட்சி செயலா் மோகன்குமாா் வரவேற்றாா்.