கரூரில் மிதமான மழை
கரூரில் வெள்ளிக்கிழமை தூறலுடன் கூடிய மிதமான மழை பெய்தது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை புயலாக மாறியுள்ளதால் தமிழகத்தில் ஆங்காங்கே பலத்த மழை பெய்து வருகிறது.இதன்காரணமாக கரூா் மாவட்டத்திலும் வெள்ளிக்கிழமை காலை முதல் மாலை அவ்வப்போது லேசான தூறலுடன் கூடிய மிதமான மழை பெய்தது. கடந்த ஒரு வாரமாகவே கரூரில் அவ்வப்போது லேசான மழை பெய்துவருவதால் குளிா்ந்த சீதோஷ்ண நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.